ஈரோடு கோஷா மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரோடு மாநகராட்சி எதிரில் அமைந்துள்ள சிஎஸ்ஐ மருத்துவமனை செயல்படுகிறது. அந்த வழியாக செல்லும் நகர பேருந்துகளில் கூட மருத்துவமனை நிறுத்தத்திற்கு பெயர் கோஷா ஹாஸ்பிடல் ஸ்டாப் என்றே பெயர். நூற்றாண்டு பாரம்பரியமிக்க சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு இந்த அடைமொழி பெயர் வருவதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஈரோடு நகரபரிபாலன சபையின் தலைவராக கடந்த 1904ல் பதவி வகித்தவர் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட அந்தோனிவாட்சன் பிரப்.இவரது பதவி காலத்தில் ஈரோட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அந்த பகுதி மக்கள் பயன் பெறுவதற்கு வசதியாக ஒரு மருத்துவமனையை அமைத்து கொடுத்தார்.இந்த மருத்துவமனை பின்னர் தென்னிந்திய திருச்சபை வசம் ஒப்படைக்கப்பட்டதால் சிஎஸ்ஐ மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

ஈரோட்டில் கடந்த 1910க்கு முன்பாக காலரா நோய் பரவியது.அப்போது, சிகிச்சையளிப்பதற்கு ஆண் டாக்டர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். அங்கு சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடத்தை தவிர்ப்பதற்காக பெண் டாக்டர்களும், நர்சுகளும் நியமிக்கப்பட்டனராம். அப்போது பெண் டாக்டர்களும், நர்சும் கோஷா அணிந்திருந்தனர். முதல் முறையாக பெண் டாக்டர்களை பார்த்தபோது பரவலாக கோஷா ஆஸ்பத்திரி என அழைத்தனர். நாளடைவில் அந்த பெயரே நிரந்தரமாக அழைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.