ஈரோடு அரசு அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசு அருங்காட்சியகம், ஈரோடு
அரசு அருங்காட்சியகம், ஈரோடு
நிறுவப்பட்டது1987; 34 ஆண்டுகளுக்கு முன்னர் (1987)
அமைவிடம்வ உ சி பூங்கா, ஈரோடு, தமிழ்நாடு.
வகைதொல்லியல் அருங்காட்சியகம்
இயக்குநர்முதன்மைச் செயலாளர் & அருங்காட்சியக ஆணையர்[1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு


ஈரோடு அரசு அருங்காட்சியகம் (Government Museum, Erode) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு நகரில் அமைந்துள்ள ஓர் அரசு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது வ உ சி பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ளது. ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தின் வடக்கில் 200 மீட்டர் தொலைவிலும், ஈரோடு தொடர்வண்டி சந்திப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

காட்சிப் பொருட்கள்[தொகு]

ஈரோடு அரசு அருங்காட்சியகம், கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல், கைத்தறியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் புவி அமைப்பியல் ஆகிய ஒன்பது வகைகளில் அடங்கும் அரிய பொருட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. கொங்கு மண்டல சோழப் பேரரசைச் சார்ந்த கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் இதுவும் ஒன்றாகும். பர்கூர், தஞ்சாவூர் ஓவியங்கள், பனையோலை கையெழுத்துப் பிரதி , நாணயங்கள் மற்றும் மெய்க்கீர்த்திக் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொடுமணல், தொல்பொருளியல் மற்றும் அகழ்வாராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட முந்தைய வரலாற்று உருவங்களும், பழங்காலப் பழக்கவழக்கங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் தவிர, பல தாவரவியல் மற்றும் விலங்கியல் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]