ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா

ஆள்கூறுகள்: 35°44′23″N 51°10′57″E / 35.739667°N 51.182556°E / 35.739667; 51.182556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான் தேசிய தாவரவியல் பூங்காவின் முதன்மைப் பாதை

ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா (National Botanical Garden Of Iran) ஈரான் நாட்டின் தலைநகரமான தெகுரானில் உள்ளது. பூங்காவின் மொத்த பரப்பளவு 150 எக்டா்களாகும். ஈரானில் உள்ள தாவர இனங்களை வகைப்படுத்தவும், ஈரானிய தோட்டக்கலைக்கு ஒரு முக்கிய மையமாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. ஈரானியத் தாவரங்களின் உலர் மாதிரிகள் படிப்படியாக உருவாக்கப்பட்டு இங்கு தற்போது 1,60,000 தாவரங்களின் உலர் தாவர மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள தாவரங்களைத் தவிர இமயமலை, சப்பான், அமொிக்கா, ஆப்பிாிக்கா, மற்றும் ஆத்திரேலியா போன்ற நாடுகளின் தாவரங்களும் ஈரான் தேசிய தாவரவியல் பூங்காவில் உள்ளன.[1]

புவியின் பலவகையான மர வகைகளும் கொண்ட ஒரு மரக்கருவூலம், 6 ஏாிகள், குன்றுகள் ( அல்போா்சு மலைத் தொடர், சக்ரோசு மலைத்தொடர் மற்றும் இமயமலைத் தொடர் ஆகியவற்றைக் குறிக்கும் பொருட்டு) பாறைத்தோட்டம், அருவி, ஈரநிலம் (சேற்று நிலம்), பாலைவனத் தாவரப்பகுதிகள், உவா் ஏாி, வறண்ட ஆற்றுப்படுக்கை, பழத்தோட்டம் போன்றவைகளும் இப்பூங்காவில் உள்ளடங்கியுள்ளன. இங்குள்ள தாவரவியல் மற்றும் தோட்டக்கலையியல் நூலகமானது 11000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "National Botanical Garden of Iran". Research Institute of Forests and Rangelands. Archived from the original on டிசம்பர் 1, 2017. பார்க்கப்பட்ட நாள் October 28, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]