உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரான் அசிமான் எர்லைன்சு விமானம் 3704

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான் அசிமான் எர்லைன்சு விமானம் 3704
Iran Aseman Airlines Flight 3704
விபத்துக்குள்ளான இ பி - ஏ டி எஸ் விமானம், 2006 இன் காட்சி
விபத்து சுருக்கம்
நாள்18 பெப்ரவரி 2018 (2018-02-18)
சுருக்கம்விசாரணையின் கீழ்
இடம்தேனா மலை, சக்ரோசு மலைத்தொடர் செமிரோம் அருகில்,  ஈரான்
பயணிகள்59
ஊழியர்6
உயிரிழப்புகள்65 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஏ டி ஆர் - 212
இயக்கம்ஈரான் அசிமான் ஏர்லைன்சு
வானூர்தி பதிவுஇ பி - ஏ டி எஸ்
பறப்பு புறப்பாடுமெகரபாத் சர்வதேச வானூர்தி நிலையம், தெகுரான்,  ஈரான்
சேருமிடம்யசூஜ் வானூர்தி நிலையம், யசூஜ்,  ஈரான்

ஈரான் அசிமான் எயர்லைன்சு விமானம் 3704 (Iran Aseman Airlines Flight 3704 (EP3704/IRC3704) இது, ஈரான் தலைநகர் தெகுரான் வானூர்தி நிலையத்திலிருந்து, யசூஜ் (Yasuj) மாநகருக்கு சென்ற, ஈரானின் உள்ளூர் பயணிகள் வானூர்தியாகும். ‘ஈரான் அசிமான் எயர்லைன்சு’ நிறுவனம் இயக்கிய இவ்வானூர்தி 2018, பிப்ரவரி 18 அன்று, ஏ டி ஆர் 72 - 200 (ATR 72-200) எனப்படும் இந்த வானூர்தி, இசுபான் மாகாணத்தில்லுள்ள (Isfahan Province) செமிரோம் (Semirom) அருகே சக்ரோசு மலைத்தொடரின் மிக உயர்ந்த பகுதியான தேனா (Dena) மலைமுகட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் 59 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட 65 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]

வானூர்தி

[தொகு]

சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இவ்வானூர்தி, ஏ ஆர் டி 72 - 212, எம் எஸ் என் 391 வகையை சார்ந்ததும், இ பி - ஏ டி எஸ் பதிவு பெற்றதுமான (ATR 72-212, MSN 391, registration EP-ATS) இது, 1993 இல் ‘ஈரான் அஸ்மான் ஏர்லைன்சுக்கு’ வழங்கப்பட்டது. 24 ஆண்டுகள் சேவையாற்றிய இந்த வானூர்தி, இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நிகழ்ந்ததாக பதிவுகள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.[2][3]

விபத்து

[தொகு]

இந்த வானூர்தி உள்ளூர் பயணச் சேவைக்காக, தெகுரானிலிருந்து, ஈரானின் யசூஜ் வானூர்தி நிலையத்திற்கு, ‘மெகராபத் சர்வதேச விமான நிலையம்’ (Mehrabad International Airport), இயக்கி வந்தது.[4] ஒருங்கிணைந்த சர்வதேச நேரப்படி (UTC) சுமார் 4:30 மணிக்கு தெகுரானிலிருந்து புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து தேனா மலையில் மோதியதாக கூறப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iran plane crash: 66 people killed after passenger aircraft goes down". www.nbcnews.com (ஆங்கிலம்). 2018-02-18. பார்க்கப்பட்ட நாள் 2018-02-19.
  2. "Accident description". Aviation Safety Network (ASN) (ஆங்கிலம்) - 1996-2018. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  3. |EP-ATS Iran Aseman Airlines ATR 72 Last updated on Feb 18, 2018 |www.planespotters.net
  4. Iran Aseman Flight 3704 crashed in Semirom, Isfahan Province Iran
  5. 18 February 2018ws/world-middle-east-43103192 Iran plane crash: All 66 people on board feared dead[தொடர்பிழந்த இணைப்பு]