ஈரானிய சீர் நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈரானிய பகலொளி நேரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மத்தியகிழக்கில் நேரம்
    ஒசநே+02:00 எகிப்திய சீர்நேரம்
    ஒசநே+02:00

ஒசநே+03:00
கிழக்கு ஐரோப்பிய நேரம் /
இசுரேலிய சீர்நேரம் /
பலத்தீனிய சீர்நேரம்
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் /
இசுரேலிய கோடை நேரம் /
பலத்தீனிய கோடை நேரம்
    ஒசநே+03:00 அராபிய சீர்நேரம் /
துருக்கிய நேரம்
    ஒசநே+03:30 ஈரானிய சீர் நேரம்
    ஒசநே+04:00 பாரசீக வளைகுடா சீர்நேரம்
ஆண்டு முழுவதும் ஒரே சீர்நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
நேர வலயம், இதில் அடர் பச்சை நிறத்தில் இருப்பது ஈரானின் சீர் நேரம்(IRST) (ஒ.ச.நே.+3:30) ஆகும்.

ஈரானிய சீர் நேரம் (Iran Standard Time) அல்லது ஈரானிய நேரம் (Iran Time) என்பது ஈரானில் பின்பற்றப்படும் நேர வலயம் ஆகும். ஈரான் ஒசநே+03:30 என்ற நேர அலகைப் பயன்படுத்துகிறது. இது 52.5 பாகை கிழக்கு நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது. இரானிய நாட்காட்டியை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் நெடுவரையும் இதுவே ஆகும்.

அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத்தின் ஆணைப்படி, 2005 இற்கும் 2008 இற்கும் இடையில் ஈரான் பகலொளி சேமிப்பு நேரத்தை கடைப்பிடிக்கவில்லை.[1] பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே+04:30) 2008 மார்ச் 21 முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், 2022 செப்டம்பர் 21 முதல் ஈரான் ஆண்டு முழுவதும் நிலையான நேரத்தைக் (ஒசநே+03:30) கடைபிடிக்கிறது.[2][3]

ஈரானிய சீர் நேரம்[தொகு]

ஈரானின் சீர் நேரத்தினை ஐ.ஆர்.எசு.டீ எனக் குறிப்பிடுவர். ஒ.ச.நே. +3:30 என்பது ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் என்பதன் அஃகுப்பெயர் ஆகும். இதன்படி, அதிதுல்லிய அணுக் கடிகார நேர சீர்தரம் கணிக்கப் படுகிறது. அவ்வப்போது புவியின் சுழற்சியில் ஏற்படும் மந்தத்துக்கு ஈடு செய்யும், நெடு நொடிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இந்த புவிநேரமானது, பன்னாட்டு நேரமாக, பன்னாட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.[4].[5].[6] உலகின் நேரவலயங்கள் ஒருங்கிணைக்கப்பட, இந்த பன்னாட்டு நேரத்திலிருந்தான வேறுபாடுகள் கூட்டல் (+)குறி அல்லது கழித்தல்(-) குறியீடுகளால் அளவிடப்பட்டு, அந்தந்த நாட்டினரால் குறிக்கப்படுகிறது. மற்றொரு மாதிரி சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் கடிகாரம் காட்டும் நேரத்தில், அந்த நாட்டுக்குரிய சீர் நேரத்தினைக் கழித்தால், பன்னாட்டு நேரத்தினை அறிய இயலும். எடுத்துக்காட்டாக, இந்திய சீர் நேரமான + 5.30 ஆகும். இந்திய மாலை நேரம் 6.30 மணி என கொண்டால், அப்பொழுது இருக்கும் உலக நேரம் நண்பகல் 1.00 மணி ஆகும். எப்படி என்றால், இந்திய மாலை நேரம் 6.30 மணி என்பது, முற்பகல்12.00+பிற்பகல்6.30 = 18.30 ஆகும். ஒரு நாளை 24 மணி நேரம் என்பதை நாம் அறிந்ததே. இந்த 18.30 என்பதில், இந்திய சீர் நேரமான +5.30 என்பதைக் கழித்தால், உலக நேரமான பிற்பகல் 1.00 என்பதை அறியலாம். அதனை 24 மணிநேரக் கணக்கீட்டின் படி (கழித்தல் கணக்கு = 18.30-05.30=13.00), 13.00 என்றும் கூறலாம். அதைப்போலவே, ஈரானின் உள்ளூர் நேரம் முற்பகல் 7.30 மணி என்றால், பன்னாட்டு நேரம் ஈரானின் அதிகாலை நான்கு மணி ஆகும். அதாவது, உள்ளூர் நேரமான 7.30 என்பதில், 3.30 என்பதனைக் கழித்தால், 4.00 மணி என்பதை கணித்து அறியலாம்.

ஈரானின் சீர் நேரமான, ஒ.ச.நே. +4:30 என்ற ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரமானது, ஒவ்வொரு ஆங்கில வருடத்திலும், மார்ச்சு மாதம் ஏறத்தாழ 22 ஆம் நாள் தொடங்கி, செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் முடிவடைகிறது. அதற்கு பின், அடுத்த மார்ச்சு நாளது தேதி வரும் வரை, ஒரு மணி நேரம் குறைத்து ஒ.ச.நே. +3:30 என அந்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது மார்ச்சு மாதம் 21 ஆம் நாளே, இந்நேரம் பின்பற்றப்படும்.[7]

ஈரானிய பகலொளி நேரம்[தொகு]

ஈரான் நாட்டின் பகலொளி நேரத்தினை, ஐ.ஆர்.டி.டீ (IRDT) எனக் குறிப்பிடுவர். மகுமூத் அகமதிநெச்சாத், ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்த போது, தனது ஆணையின் வழியே, 2005 முதல் 2008 வரை நான்கு ஆண்டுகள், பகலொளி நேரத்தினை[8][9] அந்நாட்டு மக்கள் பின்பற்றுவதைத் தடுத்தார். பின்னர், 2008 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 1 ஆம் நாநள் மறுஅறிமுகம் செய்யப்பட்டது. இது ஈரானின் அரசு நாட்காட்டியான, சூரிய இச்சிரி நாட்காட்டி கணக்கீடுகளின் படி, குறிப்பாக நவுரூஸ் எனப்படும் புத்தாண்டு அடிப்படையில் கணக்கிடப் படுகிறது.

நேர வலய மாற்றங்கள்[தொகு]

பயன்பாட்டில் இருந்த காலம் கி.இ.நே உடன் நேர ஈடு நேரத்தின் பெயர்
1945 இற்கு முன்னர் ஒசநே+03:25:44 தெகுரான் சராசரி நேரம்
1946 – 1977 ஒசநே+03:30 ஈரான் சீர் நேரம்
1977 – 1978 ஒசநே+04:00
ஒசநே+05:00
ஈரான் சீர் நேரம்
ஈரான் பகலொளி நேரம்
1979 – 1980 ஒசநே+03:30
ஒசநே+04:30
ஈரான் சீர் நேரம்
ஈரான் பகலொளி நேரம்
1981 – 1990 ஒசநே+03:30 ஈரான் சீர் நேரம்
1991 – 2005 ஒசநே+03:30
ஒசநே+04:30
ஈரான் சீர் நேரம்
ஈரான் பகலொளி நேரம்
2006 – 2007 ஒசநே+03:30 ஈரான் சீர் நேரம்
2008 – 2022 ஒசநே+03:30
ஒசநே+04:30
ஈரான் சீர் நேரம்
ஈரான் பகலொளி நேரம்
2023 – இன்று ஒசநே+03:30 ஈரான் சீர் நேரம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானிய_சீர்_நேரம்&oldid=3586264" இருந்து மீள்விக்கப்பட்டது