ஈரானியர்கள் (இந்தியா)
ایرانی | |
---|---|
மொத்த மக்கள்தொகை | |
1,39,362 (2011) | |
மொழி(கள்) | |
சொராஷ்டிரிய தாரி (பெதினி), இந்தி, மராத்தி மற்றும் கன்னடம் | |
சமயங்கள் | |
சியா இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஈரானிய மக்கள், பார்சி மக்கள் |
ஈரானி மக்கள் (Iranis) (பாரசீக மொழி:ایرانی ), தற்கால இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் மும்பை, தானே மாவட்டம், பால்கர் மாவட்டம் மற்றும் கர்நாடகம் மாநிலத்தின் வடக்கில் உள்ள பீதர் பகுதிகளில் வாழ்பவர்கள். இம்மக்கள் சியா இசுலாம் சமயத்தைப் பின்பற்றும் சமூகத்தினர். இம்மக்கள் சொராஷ்டிரிய தாரி மொழி[1],, இந்தி, மராத்தி மற்றும் கன்னடம் மொழிகளைப் பேசுவார்கள். இம்மக்கள் ஈரானின் கஜர் இராச்சியத்த்தின் ஆட்சியின் போது கெர்மான் பகுதியில் வாழ்ந்தவர்கள். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஈரானிய மக்கள் தொகை 1,39,362 ஆகும்.
16-18ஆம் நூற்றாண்டுகளில் இம்மக்கள் தற்கால ஈரான் நாட்டின் கெர்மான் பகுதியிலிருந்து, மும்பைக்கு புலம்பெயர்ந்து, தக்கான சுல்தானகத்தின் படைகளில் சேவை செய்தனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இம்மக்கள் இந்தியாவின் மகாராட்டிரம் மற்றும் வடக்கு கர்நாடகம் பகுதிகளின் பரவினர்கள்.[2] ஈரானிய மக்கள் மும்பை பகுதிகளில் தேநீர் மற்றும் அடுமனை கடைகளை நடத்தி வந்தனர்.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1951 | 80,127 | — |
1961 | 90,157 | +1.19% |
1971 | 99,583 | +1.00% |
1981 | 1,09,462 | +0.95% |
1991 | 1,19,631 | +0.89% |
2001 | 1,29,145 | +0.77% |
2011 | 1,39,362 | +0.76% |
ஆதராங்கள்:[4][5][6][7][8][9][10][11][12][13][14] |
பார்சிகளிடமிருந்து வேறுபாடு
[தொகு]இந்திய ஈரானியர்களும், பார்சி மக்களும் தற்கால ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தாலும், இரு சமூகத்தவர்களிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளது. பார்சி மக்கள் சரதுசம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள். ஆனால் ஈரானியர்கள் சியா இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவார். முஸ்லிம் ஈரானியர்கள் இந்தியாவிற்கு குடியேறுவதற்கு முன்னர், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்சி மக்கள் ஈரானிலிருந்து தற்கால இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் குடியேறியவர்கள் ஆவர். ஈரானியர்கள் சொராஷ்டிரிய தாரி மொழியைப் பேசுபவர்கள். ஆனால் பார்சி மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்கள் ஆவார்.[15]
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இந்திய ஈரானியர்களின் பின்னணி & தொழில்
- இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zoroastrian Dari (Behdini) in Kerman
- ↑ Masashi, Haneda (October 1997). "Emigration of Iranian Elites to India during the 16-18th centuries". Cahiers d'Asie Centrale (3/4): 129–143. http://asiecentrale.revues.org/480. பார்த்த நாள்: 2013-12-17.
- ↑ Irani café
- ↑ "Indian Census 1951". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 1961". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 1971". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 1981". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 1991". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 2001". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Indian Census 2011". Government of India. Retrieved 31 December 2024.
- ↑ "Irani Community in India: Population Estimates". Irani Cultural Association. Retrieved 31 December 2024.
- ↑ "Zoroastrians of India: An Overview". Zoroastrian Community Research Institute. Retrieved 31 December 2024.
- ↑ Dr. XYZ (2010). The Persian Heritage of Indian Iranians. XYZ Publications.
- ↑ "Migration Patterns of Zoroastrians in India". Indian Migration Studies. Retrieved 31 December 2024.
- ↑ Shastri, Padmaja (21 March 2004). "What sets Zoroastrian-Iranis apart". The Times of India இம் மூலத்தில் இருந்து 19 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200419124238/https://timesofindia.indiatimes.com/city/pune/What-sets-Zoroastrian-Iranis-apart/articleshow/572604.cms.