உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானின் குடியரசுத் தலைவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரானின் குடியரசுத் தலைவர்கள் (List of presidents of Iran) 1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் 1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈரான் குடியரசுத் தலைவர் பொதுத் தேர்தல் மூலம் இப்பதவி ஏற்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் ஆகும். ஈரானின் அதியுயர் தலைவருக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் கொண்டவர் ஈரான் குடியரசுத் தலைவர் ஆவார். இறுதியாக 18 சூன் 2021 அன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் பொதுத்தேர்தலில், ஈரானின் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி பொதுமக்களால் 62% வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரானின் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தின் படி, 1989-இல் ஈரானில் பிரதம அமைச்சர் பதவி ஒழிக்கப்பட்டது. எனவே தற்போது குடியரசுத் தலைவர் ஈரானின் அரசுத் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுவார்.

ஈரானின் குடியரசுத் தலைவர்களும் பதவிக்காலமும்[தொகு]

  1. அபோல்ஹசன் பானிசதர் (4 பிப்ரவரி 1980 - 22 சூன் 1981
  2. மொகம்மத்-அலி ரஜாய் (2 அகஸ்டு 1981 - 30 ஆகஸ்டு) 1981)
  3. அலி காமெனி (13 அக்டோபர் 1981 - 3 ஆகஸ்டு 1989)
  4. அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி (3 ஆகஸ்டு 1989 3 ஆகஸ்டு 1997
  5. முகமது கத்தாமி (3 ஆகஸ்டு 1997 - 3 ஆகஸ்டு 2005
  6. மகுமூத் அகமதிநெச்சாத் (3 ஆகஸ்டு - 3 ஆகஸ்டு 2013)
  7. அசன் ரூகானி (3 ஆகஸ்டு 2013 - 3 ஆகஸ்டு 2021)
  8. இப்ராகிம் ரைசி (3 ஆகஸ்டு 2021 - பதவியில் உள்ளார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]