ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவப் பேரவை
| இடைக்காலத் தலைமைத்துவப் பேரவை | |
|---|---|
ஈரானின் இசுலாமியக் குடியரசின் இலச்சினை | |
ஈரானின் கொடி | |
| பதவி | இடைக்கால அரசின் தலைமைக் குழு (நிகழ் நிலை) ஈரானின் அதியுயர் தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. ஈரானிய ஆயுதப்படைகளின் தற்காலிக தலைமைத் தளபதி அரசின் மூன்று கிளைகளான நீதி, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தின் தற்காலிக தலைமை. |
| நியமிப்பவர் | விரைவு விவேக குழு[1] |
| பதவிக் காலம் | ஈரானின் புதிய அதியுயர் தலைவர் தேர்வு செய்து நியமிக்கப்படும் வரை |
| அரசமைப்புக் கருவி | ஈரானின் அரசியலமைப்பு அத்தியாயம் VIII, பிரிவு 111 |
| உருவாக்கம் | 1 மார்ச் 2026 |
ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவப் பேரவை (Interim Leadership Council)[1][2][3] என்பது ஈரானின் நடைமுறை கூட்டுத் தலைமை ஆகும். இது ஒரு புதிய உச்சத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படும் வரை உச்சத் தலைவரின் கடமைகளை தற்காலிகமாக இந்த இடைக்கால தலைமைத்துவம் கையாளுகிறது. இதன் காரணமாக, உச்சத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது, இக்குழு ஈரானில் மிக உயர்ந்த பதவியாகும்.[2]ஈரானின் அதியுயர் தலைவர் 28 பிப்ரவரி 2026 அன்று இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுப்படைகளால் இரான் தாக்கப்பட்ட போது அலி காமெனி படுகொலை செய்யப்பட்டார்.
ஈரானின் புதிய அதியுயர் தலைவரை 88 உறுப்பினர்கள் கொண்ட ஈரானின் வல்லுநர் மன்றத்தால் தேர்வு செய்யப்படும் வரை[4], ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியான், ஈரானிய தலைமை நீதிபதி குலாம் உசைன் மொக்சேனி-எஜேய் மற்றும் அயதுல்லா அலிரேசா அராஃபி ஆகியோரைக் கொண்ட இடைக்கால தலைமைத்துவ குழு மார்ச் 1, 2026 அன்று நிறுவப்பட்டது.[1][5][a][10]
இடைக்கால தலைமைத்துவ குழு, உச்சத் தலைவரின் கடமைகளை ஏற்றுக்கொண்டதால், மூன்று இடைக்கால தலைமைத்துவ குழு உறுப்பினர்களும் இடைக்கால உச்சத் தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் உச்சத் தலைவர் பதவி இன்னும் காலியாக உள்ளது.[11][12][13]
இடைக்கால தலைமைத்துவ குழு உறுப்பினர்கள்
[தொகு]| பெயர் | படம் | வகிக்கும் பதவி | கட்சி/குழு | பிரிவு | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|
மசூத் பெசஸ்கியான்
|
ஈரானிய குடியரசுத் தலைவர் (2024 முதல்) | சுயேச்சை | சீர்திருத்தவாதி | [1][5] | |
குலாம் உசைன் மொக்சேனி-எஜேய்
|
ஈரானிய தலைமை நீதிபதி (2021 முதல்) |
இசுலாமியக் கொள்கைவாதிகள் | [1][5] | ||
அலிரேசா அராஃபி
|
உறுப்பினர், பாதுகாவலர்கள் மன்றம் (2019 முதல்) உறுப்பினர் வல்லுநர் மன்றம் (2022 முதல்) தலைவர், இசுலாமிய இறையியல் நிறுவனங்கள் (2016 முதல்) குவோம் வெள்ளிக்கிழமை தொழுகை இமாம் (2015 முதல்) |
சுயேச்சை | [5][12] |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 Motamedi, Maziar. "Iran forms interim council to oversee transition after Khamenei's killing" (in ஆங்கிலம்). Al Jazeera. Archived from the original on 1 March 2026. Retrieved 1 March 2026.
- 1 2 Reals, Tucker (1 March 2026). "Iran names three men for interim Leadership Council to pick next supreme leader" (in அமெரிக்க ஆங்கிலம்). CBS News. Retrieved 1 March 2026.
- ↑ "Heads of State, Heads of Government, and Ministers for Foreign Affairs" (PDF). United Nations. Archived (PDF) from the original on 5 May 2021. Retrieved 8 April 2023.
- ↑ ஈரானின் இடைக்கால உச்சபட்ச தலைவர் நியமனம்
- 1 2 3 4 Multiple sources:
- Sharma, Yashraj. "Who are the council members temporarily in charge of Iran?" (in ஆங்கிலம்). Al Jazeera. Archived from the original on 1 March 2026. Retrieved 1 March 2026.
- "Alireza Arafi selected as clerical member of Iran's interim Leadership Council". Middle East Monitor. 1 March 2026. Retrieved 1 March 2026.
- "Iran forms interim Leadership Council with Arafi's appointment after Khamenei's killing". TRT World (in ஆங்கிலம்). Retrieved 1 March 2026.
- "Iran names Alireza Arafi to interim leadership council after Khamenei killing". Türkiye Today (in ஆங்கிலம்). Retrieved 1 March 2026.
- "Alireza Arafi appointed to Iran's Leadership Council, ISNA reports". Reuters. 1 March 2026. https://www.reuters.com/business/media-telecom/alireza-arafi-appointed-irans-leadership-council-isna-reports-2026-03-01/.
- Marwa, Bahloul (1 March 2026). "Iran forms interim leadership council, as Assembly of Experts moves to name permanent leader". Al 24 News. https://al24news.dz/en/iran-forms-interim-leadership-council-as-assembly-of-experts-moves-to-name-permanent-leader/.
- ↑ Walsh, Joe; Reals, Tucker. "U.S.-Israel launch another round of strikes on Iran following Khamenei's killing". CBS News. Archived from the original on 28 February 2026. Retrieved 1 March 2026.
- ↑ "U.S. and Israel launch a major attack on Iran, Trump says Supreme Leader Khamenei killed". PBS. 28 February 2026.
- ↑ https://www.hindustantimes.com/world-news/who-is-ali-larijani-khameneis-top-aide-at-the-center-of-regime-change-in-iran-after-iran-supreme-leader-death-101772316974119.html
- ↑ https://www.timesofisrael.com/ali-larijani-once-seen-as-a-pragmatist-steps-into-void-left-by-khameneis-death/
- ↑ https://www.kurdistan24.net/en/story/897069
- ↑ "Why has the US attacked Iran? What we know about the attack and Tehran response". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 1 March 2026. Archived from the original on 28 February 2026. Retrieved 1 March 2026.
- 1 2 "Аятолла Арафи стал врио верховного лидера Ирана". Новая газета Европа (in ரஷியன்). Archived from the original on 1 March 2026. Retrieved 1 March 2026.
- ↑ "Senior Iranian Cleric Ayatollah Alireza Arafi Named As Country's Interim Supreme Leader After Killing Of Ayatollah Ali Khamenei In Joint US-Israeli Airstrikes". News On AIR. 1 March 2026.