ஈராக்கிய குடியரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக் குடியரசுத் தலைவர்
அலுவல் சின்னம்
தற்போது
மொகமது ஃபுவாத் மசூம்

24 சூலை 2014 முதல்
வாழுமிடம்ரத்வானியா அரண்மனை பக்தாத், ஈராக்
நியமிப்பவர்நாடாளுமன்ற வாக்கெடுப்பு
பதவிக் காலம்நான்காண்டுகள், மீண்டும் ஒருமுறை மட்டும்
முதலாவதாக பதவியேற்றவர்முகம்மது நஜீப் அர்-ருபாய்
உருவாக்கம்சூலை 14, 1958

ஈராக்கிய குடியரசுத் தலைவர் (President of Iraq) ஈராக் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். "அரசியலமைப்புச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதை பாதுகாப்பதும் ஈராக்கின் தன்னாட்சி, இறையாண்மை, ஒற்றுமை, அதன் நிலப்பகுதிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை அரசியலமைப்பின்படி பேணிக்காத்தலும்" இவரது தலையாய கடமையாகும்.[1] சார்பாளர் மன்றத்தில் (நாடாளுமன்றம்) மூன்று இரு பெரும்பான்மைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[2] இவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாகும்; ஒருமுறை மட்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம்.[3] குடியரசுத் தலைவர்நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் ஏற்றுக் கையொப்பமிடுகிறார். ஈராக்கிய பிரதமர் பரிந்துரைப்படி தண்டனைக் குறைப்புகளையும் மன்னிப்புகளையும் வழங்குகிறார். "விழாக்களுக்கும் கவுரவ நிலையிலும் படைத்துறையின் உயர் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்".[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 64
  2. ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 67
  3. ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 69
  4. ஈராக்கிய அரசியலமைப்புச் சட்டம், Article 70