ஈராக்கின் ஹமாஸ்
ஈராக்கில் ஹமாஸ் | |
---|---|
தொடக்கம் | 2007 |
தலைமையகம் | மத்திய ஈராக் |
கொள்கை | சுணி, ஈராக் மற்றும் இசுலாம் |
ஈராக்கில் ஹமாஸ் (Hamas of Iraq, அரபு மொழி: حماس العراق) என்பது ஈராக்கைத் தளமாகக் கொண்ட சுணி பிரிவு ஆயுதம் தாங்கிய போராளி இயக்கமாகும். இவ்வியக்கம் 1920 புரட்சிப் படை என்பதிலிருந்து பிரிந்த இயக்கமாகும். அமெரிக்காவின் படைகளின் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளிக் காட்சியை வெளியிட்டு அத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது இவ்வியக்கம்.[1] 1920 புரட்சிப் படை ஈராக்கின் டியாலா (Diyala) பகுதியில் அமெரிக்கப்படைகளால் அல் காயிதாவிற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈராக்கின் ஹமாஸ் இயக்கம் உதவியிருக்கும் என நம்புகிறது.[2][3] அமெரிக்காவின் ஆயுதங்களைக் கொண்டுள்ள ஈராக்கின் ஹமாஸ் அமைப்பு ஈராக்கிய ராணுவம் அல்லது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என ஈராக்கிய அதிபர் தெரிவித்துள்ளார்.[4] 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தியதி இக்குழு அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தது.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "SITE Publications: Rival groups claim success in shooting down US helicopter". 2007-09-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Iraqi Resistance Report for events of Sunday, 26 August 2007
- ↑ "1920 Revolution Brigade memo denying involvement in Diyala Operations". 2007-08-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "US buys 'concerned citizens' in Iraq, but at what price?". 2007-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-06-09 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Iraq insurgent groups form one council