ஈராக்கின் மாகாணங்கள்
ஈராக்கின் மாகாணங்கள் المحافظات العراقية (அரபு மொழி) پارێزگاکانی ئێراق (குர்தி மொழி) | |
---|---|
Also known as: Muḥāfażah محافظة (அரபு மொழி) پارێزگا Parêzga | |
வகை | மாநிலம் |
அமைவிடம் | ஈராக் குடியரசு |
எண்ணிக்கை | 19 மாகாணங்கள் |
மக்கள்தொகை | 220,000 (ஹலாப்ஜா) – 7,055,200 (பாக்தாத்) |
பரப்புகள் | 529 km2 (204.2 sq mi) (பாக்தாத்) – 138,500 km2 (53,476 sq mi) (அல் அன்பார்) |
அரசு | Governorate |
உட்பிரிவுகள் | மாவட்டங்கள் |
ஈராக் தற்போது 19 பிரதேசங்களைக் ( محافظة அரபியில் muḥāfażah, குர்திஷ் மொழியில் parêzga ) கொண்டுள்ளது, இது "மாகாணங்கள்" என்றும் அழைக்கப்படுகிறது. ஈராக் அரசியலமைப்பின் படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்கலாம்.[சான்று தேவை] பாக்தாத் மற்றும் பாஸ்ரா ஆகியவை ஈராக்கின் மிகப் பழமையான நிர்வாகப் பகுதிகளாகும். 2014 ஆம் ஆண்டில் சுலைமானியா மாகாணத்தின் ஹலாப்ஜா மாவட்டத்தைப் பிரித்து ஹலாப்ஜா மாகாணத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. [1] [2]
21 ஜனவரி 2014 அன்று, ஈராக் அரசாங்கத்தின் அமைச்சரவை மேலும் புதிய மாகாணங்களை உருவாக்கும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. [3] தற்போதைய நீனவா மாகாணம் மற்றும் சலாடின் மாகாணத்தில் இருந்து முறையே தால் அஃபர் மற்றும் துஸ் குர்மத்து ஆகிய இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படும் என்று அவை அறிவித்தது. [4] அல் அன்பர் மாகாணத்தின் பல்லூஜா நகரம் ஒரு தனி மாகாணமாக மாற்றறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, இது நகரத்தில் உருவான சுன்னி இஸ்லாமிய எழுச்சியினால் அறிவிக்கப்பட்டது.
மாகாணங்கள்
[தொகு]மாகாணம் | அஞ்சல் குறியீடு | ஐ.எஸ்.ஓ குறியீடு | மொத்தப் பரப்பளவு மைல்2 இல் | மொத்தப் பரப்பளவு கி.மீ2 இல் | மக்கள் தொகை 7 சனவரி 2011 | மக்கள் தொகை நெருக்கம் மைலில் | மக்கள் தொகை நெருக்கம் கி.மீட்டரில் | தலைநகரம் |
---|---|---|---|---|---|---|---|---|
அல் அன்பார் | 31 | AN | 53,476 | 138,501 | 1,561,400 | 29.1 | 11.2 | Ramadi |
பாபில் | 51 | BB | 1,976 | 5,603 | 1,820,700 | 921.4 | 324.9 | கில்லா |
பாக்தாத் | 10 | BG | 78.84 | 4,555 | 7,055,200 | 89,487.5 | 1,548.8 | பகுதாது |
பாஸ்ரா | 61 | BA | 7,360 | 19,070 | 2,532,000 | 344.0 | 132.7 | பசுரா |
தி கார் | 64 | DQ | 5,000 | 12,900 | 1,836,200 | 367.2 | 142.3 | நசிரியா |
Al-Qādisiyyah | 58 | QA | 3,148 | 8,153 | 1,134,300 | 360.3 | 139.1 | Al Diwaniyah |
தியாலா | 32 | DI | 6,828 | 17,685 | 1,443,200 | 211.3 | 81.6 | Baqubah |
தோஹுக் | 42 | DA | 2,530 | 6,553 | 1,128,700 | 445.5 | 172.2 | Duhok |
அர்பில் (Erbîl) | 44 | AR | 5,820 | 15,074 | 1,612,700 | 277.0 | 106.9 | அர்பில் |
ஹலாப்ஜா (Helebce) | 46 | — | 1,180 | 3,060 | 337,000 | 285.5 | 110.1 | Helebce |
கர்பலா | 56 | KA | 1,944 | 5,034 | 1,066,600 | 548.6 | 211.8 | கர்பலா |
கிர்குக் | 36 | KI | 3,737 | 9,679 | 1,395,600 | 373.4 | 144.1 | கிர்குக் |
மேசான் | 62 | MA | 6,205 | 16,072 | 971,400 | 156.5 | 60.4 | Amarah |
முத்தன்னா | 66 | MU | 19,980 | 51,740 | 719,100 | 35.9 | 13.8 | Samawah |
நஜாப் | 54 | NA | 11,129 | 28,824 | 1,285,500 | 115.5 | 44.5 | நஜாப் |
நீனவா | 41 | NI | 14,410 | 37,323 | 3,270,400 | 226.9 | 87.6 | மோசுல் |
சலடின் | 34 | SD | 9,556 | 24,751 | 1,408,200 | 147.3 | 56.8 | Tikrit |
சுலைமானியா (Slêmanî) | 46 | SU | 6,573 | 17,023 | 1,878,800 | 285.8 | 110.3 | சுலமனியா |
வசிட் | 52 | WA | 6,623 | 17,153 | 1,210,600 | 182.7 | 70.5 | Kut |
முந்தைய மாகாணங்கள்
[தொகு]மாகாணம் | தற்போதைய மாகாணம் |
---|---|
மொசூல் | நீனவா மாகாணம் தோஹுக் மாகாணம் |
திவானியா | அல் - காதிசிய மாகாணம் முத்தன்னா மாகாணம் நஜாப் மாகாணம் |
துலைம் (–1962) ரமாடி (1962-1976) |
அல் அன்பார் மாகாணம் |
முண்டாஃபிக் (–1976) | தி கார் மாகாணம் |
அமரா (–1976) | மேசான் மாகாணம் |
குட் (–1976) | வசிட் மாகாணம் |
பாக்தாத் | பாக்தாத் மாகாணம் சலடின் மாகாணம் |
கிர்குக் (–1976) அட்-தமீம் (1976-2006) |
கிர்குக் மாகாணம் |
முன்னர் உரிமை கோரப்பட்ட மாகாணங்கள்
[தொகு]- குவைத் மாகாணம் (1990-1991)
குறிப்புகள்
[தொகு]- ↑ "KRG order turning Halabja into province sets off street celebrations". 14 March 2014. http://rudaw.net/english/kurdistan/140320142. பார்த்த நாள்: 13 August 2016.
- ↑ "Kurdistan Region President signs Halabja province directive". Kurdistan Region Presidency. 16 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
- ↑ "Resolutions of Council of Ministers For Session No. 3 on 21/1/2014". 21 January 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2016.
- ↑ "Iraqi Council of Ministers approved new provinces of Tuz Xurmatu and Tal Afar". 21 January 2014 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200714221201/https://www.ekurd.net/mismas/articles/misc2014/1/kurdsiniraq218.htm. பார்த்த நாள்: 23 August 2014.