ஈரப்பசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரப்பசை (Moisture) என்பது நுண்ணளவில் நீர் இருத்தலைக் குறிக்கும். இவ்வாறான ஈரப்பசை பல்வேறு பொருள்களில் பல்வேறு உருக்களில் இருக்கலாம். ஈரப்பசையின் விளைவாக மரத்தினால் ஆன பொருள்களிலும் பிற உயிர்சார் பொருள்களிலும் அழுகல் வினை (rot) ஏற்படலாம். தவிர உலோகங்களில் அரிப்பு ஏற்படவும் மின் இணைப்புகளில் பழுது ஏற்படவும் இது காரணமாகலாம்.

பிற மரங்களின் மீது வாழும் வாண்டா போன்ற எபிபைட்டுகள் காற்றில் உள்ள ஈரப்பசையை உட்கொண்டு வாழ்கின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரப்பசை&oldid=2740210" இலிருந்து மீள்விக்கப்பட்டது