ஈரத்தீ
| ஈரத்தீ | |
|---|---|
| இயக்கம் | நிமலா |
| தயாரிப்பு | நிதர்சனம் மகளிர் பிரிவு |
| கதை | நிமலா |
| மூலக்கதை | கிரி |
| இசை | இசைத்தென்றல் |
| ஒளிப்பதிவு | அகல்விழி |
| படத்தொகுப்பு | ச.வெண்ணிலா |
| சண்டைப் பயிற்சி | தமிழ்மாறன் |
| வெளியீடு | செப்டம்பர் 2, 2005 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
ஈரத்தீ (Translation: "Wet Conflagration") திரைப்படம் 2005ம் ஆண்டு தமிழீழத்தில் வெளிவந்த முழுநீளத் திரைப்படமாகும். போராளி நிமலாவின் இயக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சன மகளிர் பிரிவின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இசைப்பிரியா மற்றும் போராளி கிரி அவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஈழத்துப் பெண்கள் மீது இழைக்கப்பட்ட சீதனக் கொடுமைகளையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெண்களின் பங்களிப்பையும், கரும்புலிகளின் வளர்ச்சியையும் சித்தரிக்கின்றது. ஆனையிறவுப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
[தொகு]- கிரி
- இசைப்பிரியா
- வேந்தன்
- பார்வதி சிவபாதம்
- இரத்தினசிங்கம்
- சிவராசா
- காந்தன்
- காயத்திரி
- கரிகாலினி
- கனகரட்ணம்
- ஆரபி
- கதிர்
- வீரம்
- வாணி
- தர்சிகா
- கனகா
- கௌசி
- தென்றல்
- இன்சுடர்
- ஈழமகள்
- அமர்விழி
- புகழ்ச்சுடர்
- தமிழவள்
- நகுலன்
- புகழன்
- சுபாஸ்
- அச்சுதன்
- சீராளன்
- குணவேந்தன்
- தமிழ்மாறன்
- நிர்மாணி
- செல்வம்
- கோவேந்தன்
- வீமன்
- ஈழவேந்தன்
- கயல்வெற்றி
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இசைத்தென்றல் (சாய்தர்சன்) அவர்களின் இசையில், கவிஞர் கு. வீரா அவர்கள் பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் ஸப்தமி கலையகத்தினரால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
| பாடல் | பாடகர்(கள்) |
|---|---|
| சிவந்திருக்கும் செவ்வரத்தம் பூவே | ஜெயபாரதி, நிரோஜன், சாகித்தியா |
| அல்லி விழி ஓரம் | ஜெயபாரதி |
வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் 02.09.2005 போராளிக் கலைஞர் புகழினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்டது. இசைப்பிரியாவின் தலைமையில் நடைபெற்ற இவ் வெளியீட்டு விழாவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் இத்திரைப்படத்தை வெளியிட்டுவைக்க தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பெற்றுக்கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ஈழநாதம்-2005.09.05.
- ஈழநாதம்-2005.09.07.
- வலம்புரி-2005.09.05.
- "Pirapaharan felicitates Nitharsanam cinema artists". TamilNet. 5 September 2005. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=15795.
- "கொழுவி: யாருக்கு யார் பெண்ணுரிமை குறித்துப் போதிப்பது ?". 19 October 2007. https://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_19.html.