ஈரசிட்டைல் பெராக்சைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டிக் பெராக்சிநீரிலி[1] | |
வேறு பெயர்கள்
அசிட்டைல்பெராக்சைடு; ஈரசிட்டைல் பெராக்சைடு; பெராக்சைடு, ஈரசிட்டைல்; எத்தனாயில் பெராக்சைடு; அசிட்டைல் ஈத்தேன்பெராக்சோயேட்டு;பெரசிட்டிக் அமில அசிட்டைல் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
110-22-5 | |
ChemSpider | 7749 |
EC number | 203-748-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8040 |
| |
UNII | FDU6Y8075A |
UN number | 2084 |
பண்புகள் | |
C4H6O4 | |
வாய்ப்பாட்டு எடை | 118.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள்[2] |
அடர்த்தி | 1.163 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 30 °C (86 °F; 303 K) |
கொதிநிலை | 121.4 °C (250.5 °F; 394.5 K) 760 மிமீபா; 63 °C (145 °F; 336 K) at 21 mmHg[3] |
குளிர் நீரில் சிறிதளவு [2] | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும் |
தீப்பற்றும் வெப்பநிலை | 32.2 °C (90.0 °F; 305.3 K) (45 °C [113 °F; 318 K][4]) |
Explosive data | |
Shock sensitivity | மிக அதிகம் / ஈரநிலையில் மிதம் |
Friction sensitivity | மிக அதிகம் / ஈரநிலையில் மிதம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈரசிட்டைல் பெராக்சைடு (Diacetyl peroxide) என்பது (CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் பெராக்சைடு ஆகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாகவும் அல்லது கூர்மையான நெடியுடன் கூடிய எண்ணெய்ப் பசை கொண்ட நீர்மமாகவும் இச்சேர்மம் காணப்படுகிறது.[4] பல்வேறு கரிமப் பெராக்சைடுகளைப் போலவே இதுவும் ஒரு வெடிபொருளாகும்.[5] இருமெத்தில் தாலேட்டு போன்ற கரைசலாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]1858 ஆம் ஆண்டு பெஞ்சமின் கோலின்சு புரோதி என்பவரால் ஈரசிட்டைல் பெராக்சைடு கண்டுபிடிக்கப்பட்டது.[6] உறைந்த அசிட்டிக் அமிலத்தை நீரற்ற ஈரெத்தில் ஈதரில் கரைந்த பேரியம் பெராக்சைடுடன் வினைபுரியச் செய்து படிப்படியாக ஈரசிட்டைல் பெராக்சைடை இவர் தயாரித்தார்.[7]
தயாரிப்பு
[தொகு]ஐதரசன் பெராக்சைடுடன் மிகையளவு அசிட்டிக் நீரிலியைச் சேர்த்து வினைப்படுத்தி ஈரசிட்டைல் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. பெர் அசிட்டிக் அமிலம் இங்கு ஓர் இடைநிலையாகும்.[8]
பாதுகாப்பு
[தொகு]அதிர்ச்சி உணரியான ஈரசிட்டைல் பெராக்சைடு ஒரு வெடிபொருளாகும். the O-O பிணைப்பால் ஓர் ஆக்சிசனேற்றியாகவும், C-C மற்றும் C-H பிணைப்புகளால் ஓர் ஒடுக்கும் முகவராகவும் இது செயல்படுகிறது.[9][10][2]
ஈரசிட்டைல் பெராக்சைடு கரைசலின் செறிவு 70 சதவீதத்தை விட அதிகமாக இருந்தால், அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திற்கான செயல்முறை பாதுகாப்பு மேலாண்மைக்கான வரம்பு அளவு 5,000 பவுண்டு (2,300 கிலோ) என முறைப்படுத்தப்பட்டுள்ளது.[11]
தூயநிலை ஈரசிட்டைல் பெராக்சைடு வெடித்து சிதறியதாக செய்திகள் வந்துள்ளன. 25% கரைசலும் வெடிக்கும் திறனை கொண்டுள்ளது.[12] படிக பெராக்சைடு குறிப்பாக அதிர்ச்சி உணர்திறன் மற்றும் அதிக வெடிப்பு அபாயம் கொண்டுள்ளது.[13][10]
உடல்நலத் தீங்குகள்
[தொகு]திரவத்துடன் தொடர்பு கொள்வது கண்கள் மற்றும் தோலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உட்கொண்டால், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 829. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Lewis, R. J., Sr, ed. (1997). Hawley's Condensed Chemical Dictionary (13th ed.). New York, NY: John Wiley & Sons. p. 13.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Lide, D. R., ed. (1998–1999). CRC Handbook of Chemistry and Physics (79th ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 3–250.
- ↑ 4.0 4.1 "Acetyl peroxide" (PDF). NJ.gov.
- ↑ Sax, N. I. (1975). Dangerous Properties of Industrial Materials (4th ed.). New York, NY: Van Nostrand Reinhold. p. 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780442273682.
- ↑ "Anniversary Meeting". Journal of the Chemical Society, Transactions 39: 177–201. 30 March 1881. doi:10.1039/CT8813900177. https://pubs.rsc.org/en/content/articlelanding/1881/ct/ct8813900177. பார்த்த நாள்: 17 February 2022.
- ↑ Brodie, Benjamin Collins (1 January 1859). "I. Note on the formation of the peroxides of the radicals of the organic acids". Proceedings of the Royal Society of London 9: 361–365. doi:10.1098/rspl.1857.0087. https://royalsocietypublishing.org/doi/10.1098/rspl.1857.0087. பார்த்த நாள்: 17 February 2022.
- ↑ "Chemical Safety: Synthesis Procedure". Chemical & Engineering News 89 (2): 2. 2011-01-10. http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html.
- ↑ "Chemical Safety: Synthesis Procedure". Chemical & Engineering News 89 (2): 2. 2011-01-10. http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html.
- ↑ 10.0 10.1 National Fire Protection Association (1978). Fire Protection Guide on Hazardous Materials (7th ed.). Boston, MA: National Fire Protection Association. pp. 49–110.
- ↑ "1910.119 App A - List of Highly Hazardous Chemicals, Toxics and Reactives (Mandatory) | Occupational Safety and Health Administration".
- ↑ National Research Council (1981). Prudent Practices for Handling Hazardous Chemicals in Laboratories. Washington, DC: National Academy Press. p. 106.
- ↑ Bretherick, L. (1990). Handbook of Reactive Chemical Hazards (4th ed.). Boston, MA: Butterworth-Heinemann. pp. 453, 1104.
- "Peroxide, diacetyl (C4H6O4)". Landolt-Boernstein Substance/Property Index.
- "Zuordnung der Organischen Peroxide zu Gefahrgruppen nach § 3 Abs. 1". Berufsgenossenschaft Handel und Warendistribution (in German). Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)