ஈய மெட்டாசெருமேனேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12025-27-3 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73357724 |
| |
பண்புகள் | |
GeO3Pb | |
வாய்ப்பாட்டு எடை | 327.83 g·mol−1 |
உருகுநிலை | 795 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈய மெட்டாசெருமேனேட்டு (Lead metagermanate) GeO3Pb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். செருமேனியமும் ஈயமும் சேர்ந்து ஈய மெட்டாசெருமானேட்டு என்ற இந்த உப்பு உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]செருமேனியம் ஈராக்சைடு உடன் ஈய அசிட்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈய மெட்டாசெருமேனேட்டு உருவாகும்.[1]
பண்புகள்
[தொகு]ஈய மெட்டாசெருமேனேட்டு ஒரு வலுவான வெப்ப மின்னியல் விளைவைக் கொண்ட ஒரு திண்மப் பொருளாகும். முக்கோணம், சாய்சதுரம் என்ற இரண்டு படிகக் கட்டமைப்புகளில் 600 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட நிலைமாறு வெப்பநிலை கொண்டதாக இச்சேர்மம் உருவாகிறது. உயர் அழுத்தத்தின் கீழ் ஈய மெட்டாசெருமேனேட்டின் கனசதுரப் படிகங்களையும் உருவாக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wang, Ning; Ding, Jie; Li, Guicun; Peng, Hongrui (March 2010). "Synthesis and properties of PbGeO 3 nanostructures" (in en). Crystal Research and Technology 45 (3): 316–320. doi:10.1002/crat.200900516. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/crat.200900516.