ஈய எழுபாசுபைடு
இனங்காட்டிகள் | |
---|---|
1620125-10-1 ![]() | |
பண்புகள் | |
PbP7 | |
வாய்ப்பாட்டு எடை | 424.03 |
தோற்றம் | கருப்பு திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஈய எழுபாசுபைடு (Lead heptaphosphide) என்பது PbP7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈய எப்டாபாசுபைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஈயமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருபடி சேர்மம் உருவாகிறது. கட்டமைப்பில் [P7]2− அணுக் கொத்துகள் சேர்ந்துள்ளன. ஈய எழுபாசுபைடு காற்றில் நிலையானதாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]சிவப்பு பாசுபரசுடன் ஈயம் சேர்ந்து வினைபுரிவதால் ஈய எழுபாசுபைடு உருவாகும்.
- 7 P4 + 4 Pb -> 4 PbP7
550 கெல்வின் அல்லது 277 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் மீண்டும் தனிமங்களாக சிதைவடைகிறது..[2]
பண்புகள்
[தொகு]P21/c, a=970.70(11), b=673.34(10), c=1243.89(18) பைக்கோமீட்டர் மற்றும் β=122.55(1)° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் ஈய எழுபாசுபைடு படிகமாடுகிறது. பாசுபரசு அணுக் கொத்தில் உள்ள ஒவ்வொரு பாசுபரசு அணுவும் மற்ற ஆறு அணுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schäfer, Konrad; Benndorf, Christopher; Eckert, Hellmut; Pöttgen, Rainer (2014-06-27). "PbP7– a polyphosphide with a three-dimensional [P72−network of condensed and P-bridged P6hexagons"]. Dalton Transactions 43 (33): 12706–12710. doi:10.1039/c4dt01539h. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:25010209. http://dx.doi.org/10.1039/c4dt01539h.
- ↑ Christopher Benndorf, Andrea Hohmann, Peer Schmidt, Hellmut Eckert, Dirk Johrendt, Konrad Schäfer, Rainer Pöttgen (Mar 2016). "2D 31 P solid state NMR spectroscopy, electronic structure and thermochemistry of PbP 7" (in en). Journal of Solid State Chemistry 235: 139–144. doi:10.1016/j.jssc.2015.12.028. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022459615302942. பார்த்த நாள்: 2019-05-28.