ஈயம்(IV) அசிட்டேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
ஈயம்(IV) அசிட்டேட்டு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
டெட்ராகிசு(அசிட்டாக்சி)பிளம்பேன் | |
| வேறு பெயர்கள்
ஈய டெட்ரா அசிட்டேட்டு பிளம்பிக் அசிட்டேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 546-67-8 | |
| ChEBI | CHEBI:77245 |
| ChemSpider | 10608816 |
| EC number | 208-908-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image
ஒருபல் அசிட்டேட்டு |
| பப்கெம் | 11025 |
| |
| UNII | CFN24B03DB |
| பண்புகள் | |
| Pb(C2H3O2)4 | |
| வாய்ப்பாட்டு எடை | 443.376 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற அல்லது இளஞ்சிவப்பு படிகங்கள் |
| மணம் | வினீகர் |
| அடர்த்தி | 2.228 கி/செ.மீ3 (17 °செல்சியசு) |
| உருகுநிலை | 175 °C (347 °F; 448 K) |
| கொதிநிலை | சிதைவடையும் |
| கரையும், தலைகீழ் நீராற்பகுத்தல் | |
| கரைதிறன் | எத்தனால் உடன் வினைபுரியும் குளோரோபாரம், பென்சீன், நைட்ரோபென்சீன், சூடான அசிட்டிக் காடி, HCl, டெட்ராகுளொரோயீத்தேன் போன்றவற்ரில் கரையும் |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள் |
நச்சு |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஈயம்(IV) அசிட்டேட்டு (Lead(IV) acetate) என்பது Pb(C2H3O2)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈயம் டெட்ரா அசிட்டேட்டு என்ற பெயராலும் இந்த உலோகக் கரிமச் சேர்மம் அறியப்படுகிறது. இது நிறமற்ற திடப்பொருளாகும். முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரையும் என்பதால் ஈயம்(IV) அசிட்டேட்டு ஓர் உப்பு அல்ல என்பது உறுதிப்படுகிறது. ஈரப்பதத்தால் இச்சேர்மம் சிதையும். பொதுவாக கூடுதல் அசிட்டிக் அமிலத்துடன் சேமிக்கப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]
கட்டமைப்பு
[தொகு]திண்ம நிலையில் ஈயம்(IV) மையங்கள் நான்கு அசிட்டேட்டு அயனிகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அவை இருபல் அயனிகளாகும். ஒவ்வொன்றும் இரண்டு ஆக்சிசன் அணுக்கள் வழியாக ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஈயம் அணு 8 ஆயத்தொலைவுகளைக் கொண்டுள்ளது. ஆக்சிசன் அணுக்கள் ஒரு தட்டையான முக்கோண பன்னிரு இணைவகவடிவை உருவாக்குகின்றன.[3]
தயாரிப்பு
[தொகு]பொதுவாக சிவப்பு ஈயத்தை அசிட்டிக் அமிலத்துடன் தண்ணீரை உறிஞ்சும் அசிட்டிக் நீரிலியுடன் (Ac2O) சேர்த்து சூடுபடுத்தினால் ஈயம்(IV) அசிட்டேட்டு உருவாகிறது. நிகர வேதிவினை இங்கு காட்டப்பட்டுள்ளது:[4][5]
- Pb3O4 + 4 Ac2O -> Pb(OAc)4 + 2 Pb(OAc)2
மீதமுள்ள ஈயம்(II) அசிடேட்டை குளோரினால் (Cl2) பகுதியளவு ஆக்சிசனேற்றம் செய்து டெட்ரா அசிட்டேட்டாக மாற்றலாம். இதில் PbCl2 துணை விளைபொருளாக உருவாகிறது:
- 2 Pb(OAc)2 + Cl2 -> Pb(OAc)4 + PbCl2
வேதியியல் வினையாக்கி
[தொகு]ஈயம்(IV) அசிட்டேட்டு ஒரு வலுவான ஆக்சிசனேற்ற முகவராகவும்.[6] இச்சேர்மம் அசிட்டைலாக்சி குழுக்களின் மூலமாக உள்ளது. கரிம ஈயச் சேர்மங்களை தயாரிப்பதற்கான பொதுவான வினைபொருளாகவும் உள்ளது. கரிம வேதியியலில் இதன் பல பயன்பாடுகளில் சில:
- பென்சைலிக், அல்லைலிக்,[7] α-ஆக்சிசன் ஈதர் C−H பிணைப்புகளின் அசிட்டாக்சிலேற்ற வினையில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக டையாக்சேனை 2-அசிட்டாக்சி-1,4-டையாக்சேனாக மாற்றுதல்.[8]
- ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையில் புரோமினுக்கு ஒரு மாற்று வினைப்பொருளாகப் பயன்படுகிறது.[9]
- ஐதரசோன்கள் மற்றும் ஐதரசீன்களின் ஐதரசன் நீக்க வினைகளில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக அறுபுளூரோஅசிட்டோன் ஐதரசோனை பிசு(ட்ரைபுளொரோமெத்தில்) ஈரசோமீத்தேனாக மாற்றுதல்.[10][11]
- α-ஐதராக்சி அமிலங்களை பிளக்கவும் அல்லது 1,2-டையால்களை அவற்றுடன் தொடர்புடைய ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களாகப் பிரிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஓசோனால் பகுப்பு வினையை மாற்றுகிறது. எடுத்துக்காட்டாக, டை-என்-பியூட்டைல் டி-டார்ட்ரேட்டை என்-பியூட்டைல் கிளை ஆக்சிலேட்டாக ஆக்சிசனேற்றம் செய்தல்.
- ஆல்க்கீன்களுடன் வினைபுரிந்து γ-லாக்டோன்களை உருவாக்குகிறது.
- δ-புரோட்டானை வளைய ஈதர்களுக்கு கொண்டு செல்லும் ஆல்ககால்களை ஆக்சிசனேற்றம் செய்ய பயன்படுகிறது.[12]
- ஓசோனுடன் இணைந்து சில அல்லைல் ஆல்ககால்களின் ஆக்சிசனேற்ற பிளவு வினையில் பயன்படுகிறது.:[13][14]
- 1,2-டைகார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது வளைய நீரிலிகளை ஆல்க்கீன்களாக மாற்ற இச்சேர்மம் பயன்படுகிறது.

- அசிட்டோபீனோன்களை பீனைல் அசிட்டிக் அமிலங்களாக மாற்றுதலில் ஈயம்(IV) அசிட்டேட்டு பயன்படுகிறது.[15]
- கொச்சி வினையில் கார்பாக்சிலிக் அமிலங்களை ஆல்கைல் ஆலைடுகளாக கார்பாக்சில் நீக்கம் செய்யும் வினையிலும் இது பயன்படுகிறது.[16]
பாதுகாப்பு
[தொகு]ஈயம்(IV) அசிட்டேட்டு நச்சுத்தன்மை வாய்ந்தது. இது நியூரோடாக்சின் எனப்படும் நரம்பை பாதிக்கும் நச்சு ஆகும். ஈறு திசு, மத்திய நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், இரத்தம் மற்றும் இனப்பெருக்க அமைப்பை இது பாதிக்கிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Substance Information - ECHA". echa.europa.eu.
- ↑ Mihailo Lj. Mihailović (2005). Encyclopedia of Reagents for Organic Synthesis. DOI:10.1002/047084289X.rl006.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7.
- ↑ Schürmann, M.; Huber, F. (1994). "A redetermination of lead(IV) acetate". Acta Crystallographica Section C 50 (11): 1710–1713. doi:10.1107/S0108270194006438. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701.
- ↑ J. C. Bailar, Jr. (1939). "Lead Tetracetate". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. 1. pp. 47–49. doi:10.1002/9780470132326.ch17. ISBN 978-0-470-13232-6.
- ↑ M. Baudler (1963). "Lead(IV) Acetate". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2. NY,NY: Academic Press. p. 767.
- ↑ J. Zýka (1966). "Analytical study of the basic properties of lead tetraacetate as oxidizing agent". Pure and Applied Chemistry 13 (4): 569–581. doi:10.1351/pac196613040569. http://pac.iupac.org/publications/pac/pdf/1966/pdf/1304x0569.pdf. பார்த்த நாள்: 19 December 2013.
- ↑ "(1R,5R)-(+)-Verbenone of High Optical Purity". Organic Syntheses 72: 57. 1995. doi:10.15227/orgsyn.072.0057.
- ↑ Organic Syntheses, Vol. 82, p.99 (2005) Article.
- ↑ Baumgarten, Henry; Smith, Howard; Staklis, Andris (1975). "Reactions of amines. XVIII. Oxidative rearrangement of amides with lead tetraacetate". The Journal of Organic Chemistry 40 (24): 3554–3561. doi:10.1021/jo00912a019.
- ↑ Middleton, W. J.; Gale, D. M. (1970). "Bis(Trifluoromethyl)Diazomethane". Organic Syntheses 50: 6. doi:10.15227/orgsyn.050.0006.
- ↑ Robert K. Muller, Renato Joos, Dorothee Felix, Jakob Schreiber, Claude Wintner, and A. Eschenmoser (1976). "Preparation of N-Aminoaziridines: trans-1-Amino-2,3-diphenylaziridine, 1-Amino-2-phenylaziridine, and 1-Amino-2-phenylaziridinium Acetate". Organic Syntheses 55: 114. doi:10.15227/orgsyn.055.0114.
- ↑ M B Smith, J March. March's Advanced Organic Chemistry (Wiley, 2001) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-58589-0)
- ↑ Álvarez Manzaneda, E. J.; Chahboun, R.; Cano, M. J.; Cabrera Torres, E.; Álvarez, E.; Álvarez Manzaneda, R.; Haidour, A.; Ramos López, J. M. (2006). "O3/Pb(OAc)4: a new and efficient system for the oxidative cleavage of allyl alcohols". Tetrahedron Letters 47 (37): 6619–6622. doi:10.1016/j.tetlet.2006.07.020. https://archive.org/details/sim_tetrahedron-letters_2006-09-11_47_37/page/6618.
- ↑ Conversion of 1-allylcyclohexanol to cyclohexanone, in the proposed reaction mechanism the allyl group is first converted to a trioxalane according to conventional ozonolysis which then interacts with the alkoxy lead group.
- ↑ Myrboh, B.; Ila, H.; Junjappa, H. (1981). "One-Step Synthesis of Methyl Arylacetates from Acetophenones Using Lead(IV) Acetate". Synthesis (journal) 2 (2): 126–127. doi:10.1055/s-1981-29358.
- ↑ Jay K. Kochi (1965). "A New Method for Halodecarboxylation of Acids Using Lead(IV) Acetate". J. Am. Chem. Soc. 87 (11): 2500–02. doi:10.1021/ja01089a041.