ஈத்தர் ஏ. நட்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Heather Knutson studies exoplanets at Caltech.jpg

ஈத்தர் ஏ. நட்சன் (Heather A. Knutson) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக புவியியல், கோள் அறிவியல் பிரிவில் உள்ளார்.[1] இவர் புறக்கோள்களின் உருவாக்கம், இயைபுக் கூறுகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் தனது புறக்கோள் வளிமண்டலங்களின் ஆய்வுக்காக அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான நியூட்டன் இலேசி பியர்சு பரிசை வென்றுள்ளார்.[2]

மக்கள் அறிவியல் இவரை “ வளிமண்டலக் கள வெப்பநிலை, வானிலை, இயைபுக் கூறுகளைக் கண்டறியும் முதல் புறக்கோள் வானிலையியலாளர்” எனக் கூறுகிறது.[3]

கல்வியியல் வாழ்க்கை[தொகு]

இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளவல் பட்டம் படிக்கும்போது, பகுதி நேரமாக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் அகப்பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் 2004 இல் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தைத் துறை, பல்கலைக்கழகத் தகைமையோடு பெற்றுள்ளார்.[4]

இவர் தன் ஆய்வுரையை 2009 இல் முனைவர் பட்டம் பெற வழங்கியுள்ளார்.[5] ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் 2009 இல் வானியலில் முனைவர் பட்டத்தை ஈட்டினார்.[4] இவரது மிக அண்மைக் கண்டுபிடிப்பு தோராயமாக அரைப்பகுதி வளிமப் பெருங்கோள்கள் தம்மில் இருந்து தொலைவில் வட்டணையில் சுற்றும் துணைக்கோள்களைப் பெற்றுள்ளன என்பதாகும்,[6] இந்த முடிவு, வெப்பமிகும் புற வியாழன்களின் உருவாக்கத்தின்போது ஏற்பட்ட கோள்நகர்வை உறுதிபடுத்துகிறது.

விருதுகள்[தொகு]

 • தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி (புல வல்லுனர் தொடக்கநிலை வாழ்க்கைப்பணி வளர்ச்சி) விருது, 2016
 • அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான நியூட்டன் இலாசி பியர்சு பரிசு, 2015[7]
 • இயற்பியலுக்கான ஆல்பிரெடு பி. சுலோவான் ஆய்வு உறுப்பினர், 2015[8]
 • அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 2013[9][10]
 • வானியற்பியலுக்கான ஆர்வார்டு சுமித்சோனிய மைய பார்ட் ஜே. போக் பரிசு, 2012
 • ஆர்வார்டு பல்கலைக்கழக முனைவான பட்ட ஆய்வுநல்கை, 2009
 • ஆர்வார்டு தகைமை ஆய்வு நல்கை, 2008
 • தேசிய அறிவியல் அறக்கட்டளை மட்டமேற்படிப்பு ஆய்வு நல்கை, 2004[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.gps.caltech.edu: Heather A. Knutson | www.gps.caltech.edu பரணிடப்பட்டது 2018-06-16 at the வந்தவழி இயந்திரம், accessdate: June 15, 2016
 2. American Astronomical Society: Newton Lacy Pierce Prize in Astronomy | American Astronomical Society, accessdate: June 15, 2016
 3. Popular Science: How Heather Knutson Reads The Weather On Exoplanets | Popular Science, accessdate: June 15, 2016
 4. 4.0 4.1 "Short Bio". மூல முகவரியிலிருந்து 2017-11-14 அன்று பரணிடப்பட்டது.
 5. Knutson, Heather Ann (2009-01-01) (in English). Portraits of distant worlds: Characterizing the atmospheres of extrasolar planets. United States -- Massachusetts: Harvard University. http://search.proquest.com/docview/304892695/fulltextPDF. 
 6. Knutson, Heather A.; Fulton, Benjamin J.; Montet, Benjamin T.; Kao, Melodie; Ngo, Henry; Howard, Andrew W.; Crepp, Justin R.; Hinkley, Sasha et al. (2014-01-01). "Friends of Hot Jupiters. I. A Radial Velocity Search for Massive, Long-period Companions to Close-in Gas Giant Planets" (in en). The Astrophysical Journal 785 (2): 126. doi:10.1088/0004-637X/785/2/126. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2014ApJ...785..126K. http://stacks.iop.org/0004-637X/785/i=2/a=126. 
 7. "Knutson Receives AAS Award for Outstanding Research | Caltech".
 8. "Caltech Professors Awarded 2015 Sloan Fellowships | Caltech".
 9. "Heather Knutson Wins Astronomy Award | Caltech".
 10. "Annie J. Cannon Award in Astronomy to Heather A. Knutson, Astronomy PhD '09".
 11. "Heather A. Knutson curriculum vitae". மூல முகவரியிலிருந்து 2017-08-22 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்தர்_ஏ._நட்சன்&oldid=3235060" இருந்து மீள்விக்கப்பட்டது