உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஜோக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஜோக் (N11)
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதி
Ijok (N11)
State Constituency in Selangor
வாக்காளர்களின் எண்ணிக்கை30,662 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
செப்ரி மேஜான்
முதல் தேர்தல்1995
இறுதித் தேர்தல்2023
மக்கள் தொகை38,457 (2020)

ஈஜோக் சட்டமன்றத் தொகுதி (N11) (மலாய்: Bahagian Pilihan Raya Ijok; ஆங்கிலம்: Ijok State Constituency; சீனம்: 伊约克州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியில் (P096); ஈஜோக் பகுதியில் அமைந்துள்ளது.

ஈஜோக் சட்டமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து ஈஜோக் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது செப்ரி மேஜான் (Jefri Mejan) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். ஈஜோக் தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை: 61.6% மலாய்க்காரர்கள்; 13.2% சீனர்கள்; 24.2% இந்தியர்கள்; 1.01% பிற இனத்தவர் என பதிவாகி உள்ளது.

30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, ஈஜோக் தொகுதி 11 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

தொகுதி வரலாறு

[தொகு]




ஈஜோக் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[3]

  மலாயர் (61.6%)
  சீனர் (13.2%)
  இதர இனத்தவர் (1.01%)
ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செரி சகாயா, சுங்கை திங்கி, ஜெராம் தொகுதிகளில் இருந்து ஈஜோக் தொகுதி மறுபெயரிடப்பட்டது
9-ஆவது 1995-1999 சிவலிங்கம் ஆறுமுகம் பாரிசான்
(மஇகா)
10-ஆவது 1999-2004
11-ஆவது 2004-2007
2007-2008 கே. பார்த்திபன்
12-ஆவது 2008-2013 காலீத் இப்ராகிம் பாரா
(பி.கே.ஆர்)
13-ஆவது 2013-2018 இட்ரிஸ் அகமது
14-ஆவது 2018–2023 பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
15-ஆவது 2023–தற்போது வரையில் செப்ரி மேஜான் பெரிக்காத்தான்
(பாஸ்)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023[4]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
செப்ரி மேஜான்பெரிக்காத்தான்12,18351.5251.52 Increase
அமிடி அப்துல் மனான்பாக்காத்தான்11,27147.661.48 Increase
டான் சாட் கியோங்சுயேச்சை1940.820.08 Increase
மொத்தம்23,648100.00
செல்லுபடியான வாக்குகள்23,64899.27
செல்லாத/வெற்று வாக்குகள்1750.73
மொத்த வாக்குகள்23,823100.00
பதிவான வாக்குகள்30,66223,8239.70
Majority9123.866.86
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
  2. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  3. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஜோக்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4520069" இலிருந்து மீள்விக்கப்பட்டது