உள்ளடக்கத்துக்குச் செல்

ஈஜோக்

ஆள்கூறுகள்: 3°19′18.5″N 101°24′48.9″E / 3.321806°N 101.413583°E / 3.321806; 101.413583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஜோக்
Ijok
ஈஜோக் புறவழிச்சாலை
ஈஜோக் புறவழிச்சாலை
ஆள்கூறுகள்: 3°19′18.5″N 101°24′48.9″E / 3.321806°N 101.413583°E / 3.321806; 101.413583
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா சிலாங்கூர்
உருவாக்கம்1920-களில்
அரசு
 • ஊராட்சிகோலா சிலாங்கூர் நகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம்
ஒ.ச.நே +8
அஞ்சல் குறியீடு
45609[1]
தொலைபேசி எண்கள்+603-3279
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்www.mdks.gov.my
Map

ஈஜோக், (மலாய்: Ijok; ஆங்கிலம்: Ijok; சீனம்: 依约); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். இந்த நகரம் மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து ஏறக்குறைய 60 கி.மீ. வட மேற்கே மலேசிய கூட்டரசு சாலை 54-இல் அமைந்துள்ளது.

இந்த நகரம் பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தாய்) எனப்படும் மிக வளர்ச்சி பெற்ற நகரத்திற்குச் செல்லும் EXIT 2501 சந்திப்பில் அமைந்துள்ளது. பெக்கான் ஈஜோக் நகரம் (Pekan Ijok), ஒரு வகையில், ஒரு பழைமை நகரமாக அறியப்படுகிறது. இது இருபுறமும் சிறிய பெரிய கடைகள்; மற்றும் சிறிய கட்டிடங்களையும் கொண்ட இந்த நகரம் ஒரே ஒரு முதன்மைத் தெருவை மட்டுமே கொண்டுள்ளது.

மக்கள்

[தொகு]

இங்குள்ள மலாய்க்காரர்கள் பெரும்பாலும் ஜாவா மக்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் மூதாதையர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். 1900-களின் முற்பகுதியில் இந்த நகரத்தை நிறுவியதாகவும் கூறுகிறார்கள்.

இங்குள்ள பலர் சிறு தோட்ட உரிமையாளர்கள். அவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் வேலை செய்கிறார்கள். சிலர் உள்ளூர்க் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். சீனர்கள் வணிகம் செய்ய இங்கு வந்தார்கள். அவர்கள் காய்கறி பண்ணைகளைத் திறந்து, பின்னர் இங்கு நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

மலேசிய இந்தியர்

[தொகு]

இந்தியர்கள் பலர் இங்கு தங்கள் வீடுகளைக் கட்டி நிரந்தரமாகத் தங்கியுள்ளனர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியக் குடியேறறவாசிகள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தனர். ஈஜோக் புறநகர்ப் பகுதியில் இந்தியர்கள் அதிகமானோர் வாழ்கிறார்கள். 2022-ஆம் ஆண்டில் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகளில் இந்தியர்கள் 28.0% ஆகும்.

இந்தத் தொகுதியில் 12,372 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 52 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள்; 28 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 21 விழுக்காட்டினர் சீனர்கள் ஆவார்கள்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ijok, Bestari Jaya - Postcode - 45609 - Malaysia Postcode". postcode.my. Retrieved 1 November 2025.
  2. "2023 IJOK (P96-N11) Ijok is a state constituency in Selangor, Malaysia, that has been represented in the Selangor State Legislative Assembly since 1995". undi.info. Retrieved 1 November 2025.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஜோக்&oldid=4401814" இலிருந்து மீள்விக்கப்பட்டது