ஈசான்
வடகிழக்குப் பகுதி
Northeastern Region ภาคตะวันออกเฉียงเหนือ | |
|---|---|
தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதி | |
| மிகப்பெரிய நகரம் | நக்கோன் இரட்சசிமா |
| மாகாணங்கள் | 20 provinces
|
| பரப்பளவு | |
| • மொத்தம் | 167,718 km2 (64,756 sq mi) |
| மக்கள்தொகை (2019)[2] | |
| • மொத்தம் | 2,20,17,248 |
| • அடர்த்தி | 130/km2 (340/sq mi) |
| இனம் | ஈசான் மக்கள் |
| மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவு, 2024) | |
| • மெட்ரோ | ฿1.888 திரில்லியன் (US$53.619 பில்லியன்) |
| • தனிநபர் | ฿104,122 (US$2,957) |
| நேர வலயம் | தாய்லாந்து நேரம் +7 |
| மொழி | ஈச்சன் மொழி • வேறு மொழிகள் |
ஈசான் அல்லது தாய்லாந்து வடகிழக்குப் பகுதி (ஆங்கிலம்: Isan, Isaan Isarn, Issarn, Issan, Esan, Esarn; தாய்: อีสาน, [ʔīː.sǎːn]; பாளி𑀇𑀲𑀸𑀦; சமசுகிருதம்: ईशान्य) என்பது தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முதன்மையான புவியியல்; மற்றும் பண்பாட்டு நிலப்பகுதியாகும். இது தாய்லாந்தின் மிகப்பெரிய நிலப்பகுதியாகத் திகழ்கிறது. இந்த நிலப்பகுதியின் வடக்கிலும் கிழக்கிலும் லாவோஸ் நாடும், தென்கிழக்கில் கம்போடியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.[4]
கோராட் பீடபூமியில் அமைந்துள்ள ஈசான்; வடக்கிலும் கிழக்கிலும் (தாய்லாந்து-லாவோஸ் எல்லையை ஒட்டி) மீக்கோங் ஆற்றையும், தென்கிழக்கில் கம்போடியாவையும், நக்கோன் இரட்சசிமாவிற்கு தெற்கே சங்கம்பேங் மலைத்தொடரையும் எல்லையாகக் கொண்டுள்ளது. மேற்கே, இது பெட்சாபூன் மலைத்தொடரால் வடக்கு தாய்லாந்து மற்றும் மத்திய தாய்லாந்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஈசான் 167,718 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மொத்த வனப்பகுதி 25,203 சதுர கிலோமீட்டர் ஆகும், இது ஈசானின் ஒட்டுமொத்த பரப்பளவில் 15 விழுக்காடு ஆகும்.[1]
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, வடகிழக்கு தாய்லாந்து பொதுவாக ஈசான் என்று அறியப்படுகிறது, அதே வேளையில் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பாக் தவன்-ஓக்-சியாங்க்-நுயே (ภาคตะวันออกเฉียงเหนือ) என்ற சொல் பயன்படுத்தப்படலாம். ஈசான் நிலப்பகுதியின் பெரும்பான்மையான மக்கள் லாவோ இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்கள் லாவோஸின் லாவோ மக்களிடமிருந்தும் மத்திய தாய்லாந்து மக்களிடமிருந்தும் தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் தங்களைப் பொதுவாக 'கோன் ஈசான்' (khon Isan) அல்லது 'தாய் ஈசான்' (Thai Isan)[5][6] என்று அழைத்துக் கொள்கின்றனர்.
வரலாறு
[தொகு]
ஈசான் பல முக்கியமான வெண்கலக் காலத் தளங்களைக் கொண்டுள்ளது. இங்கு மலைப் பாறை ஓவியங்கள், தொல்பொருட்கள் மற்றும் நெல் வேளாண்மைக்கான தொடக்க காலச் சான்றுகள் போன்ற வடிவங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக் கலைகள் காணப்படுகின்றன. பான் சியாங் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட இரும்பு மற்றும் வெண்கலக் கருவிகள், [[மெசொப்பொத்தேமியா|மெசொப்பொத்தேமியாவின்] இதேபோன்ற கருவிகளை விடவும் பழைமையானவையாக இருக்கலாம்.
இப்பிராந்தியம் பின்னர் துவாரவதி பண்பாட்டின் செல்வாக்கின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து கெமர் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கெமர் பேரரசு, ஈசான் முழுவதும் நூற்றுக்கணக்கான பிரசாத்துகளை (Prasats) எனும் வழிபாட்டுத் தலங்கள் அல்லது கோயில்கள்க் கட்டியது. அவற்றுள் மிகவும் முக்கியமானவை பிமாய் வரலாற்றுப் பூங்காவிலும் பனோம் ருங் வரலாற்றுப் பூங்காவிலும் அமைந்துள்ளன. 1962-இல் அனைத்துலக நீதிமன்றம், பிரியா விகார் கம்போடியாவிற்குச் சொந்தமானது என்று தீர்ப்பளிக்கும் வரை, பிரியா விகார் கோயிலும் ஈசான் பிராந்தியத்தில் இருப்பதாகவே அறியப்பட்டது.
13-ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கிய பிறகு, ஈசான் பகுதியானது பா நிகும் (Fa Ngum) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட லாவோவின் லான் சாங் (Lan Xang) இராச்சியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அங்கோரிய காலத்திற்குப் பிந்தைய காலம் என்று அறியப்படும் காலகட்டங்களிலிருந்து தகவல்கள் மிகக் குறைவாகவே கிடைத்திருப்பதால், இப்பீடபூமி பெரும்பாலும் மக்கள் தொகையற்ற பகுதியாகவே இருந்ததாகத் தெரிகிறது. 19-ஆம் நூற்றாண்டில் நவீன நிலவரைபட முறை அறிமுகப்படுத்தப்படும் வரை, இப்பிராந்தியம் மண்டல அமைப்பின் (Mandala System) கீழ் இருந்தது.
மக்கள் தொகை
[தொகு]
ஈசான் நிலப்பகுதியின் மக்கள் தொகை சுமார் 23 மில்லியனாகும். இது தாய்லாந்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இங்குள்ள மக்கள் பரவல் அமைப்பு மத்திய தாய்லாந்திலிருந்து சற்று மாறுபடுகிறது. வடக்கத்திய ஈசான் பகுதியின் பெரும்பான்மை இனத்தவராக ஈசான் மக்கள் உள்ளனர். இவர்கள் லாவோஸ் நாட்டின் லாவோ மக்களுடன் நெருங்கிய இன உறவுமுறையைக் கொண்டுள்ளனர். இவ்விரு குழுக்களும் ஒத்த மொழிகள் மற்றும் பண்பாடுகளைப் (பல பொதுவான நாட்டுப்புறப் பாடல்கள் உட்பட) பகிர்ந்து கொள்கின்றன.
தாய்லாந்து அரசு ஈசான் மக்களை ஒரு தனி இனக்குழுவாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், இவ்விரு குழுக்களின் மொழிகளும் தாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. இதற்கு மாறாக, தெற்கு ஈசான் பகுதி (புரிராம், சுரின் மற்றும் சிசாகெட் மாகாணங்கள்) மக்கள் பண்பாட்டு ரீதியாக கம்போடியாவின் கெமர் மக்களுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர்; இப்பகுதியினரில் பெரும்பான்மையானோர் ஆசுத்ரோ-ஆசிய மொழிக்குடும்பத்தைச் (Austroasiatic) சேர்ந்த கெமர் மொழியைப் பேசுகின்றனர்.[7]
நிருவாகம்
[தொகு]ஈசான் பகுதி 20 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, மூன்று துணைப் பிராந்தியங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நக்கோன் இரட்சசிமா மாகாணம் மத்திய தாய்லாந்தில் அமைந்துள்ளதாகச் சிலரால் கருதப்படுகிறது.
| கொடி | சின்னம் | மாகாணம் | தலை நகர் | உள்துறை அமைச்சு |
மக்கள் தொகை | பரப்பளவு (கிமீ2) | அடர்த்தி | ISO | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | புயெங் கான் | புயெங் கான் | 27 | 424,091 | 4,003 | 106 | TH-38 | ||
| 2 | நொங் காய் | நொங் காய் | 70 | 522,311 | 3,275 | 160 | TH-43 | ||
| 3 | லோயி | லோயி | 55 | 642,950 | 10,500 | 61 | TH-42 | ||
| 4 | நோங் புவா லாம்பு | நொங் புவா லாம்பு | 71 | 512,780 | 4,099 | 125 | TH-39 | ||
| 5 | உடோன் தானி | உடோன் தானி | 74 | 1,586,646 | 11,072 | 143 | TH-41 | ||
| 6 | சக்கோன் நக்கோன் | சக்கோன் நக்கோன் | 57 | 1,153,390 | 9,580 | 121 | TH-47 | ||
| 7 | நக்கோன் பானோம் | நக்கோன் பானோம் | 20 | 719,136 | 5,637 | 127 | TH-48 | ||
| 8 | முக்தாகன் | முக்தாகன் | 44 | 353,174 | 4,126 | 87 | TH-49 | ||
| 9 | கலாசின் | கலாசின் | 4 | 983,418 | 6,936 | 142 | TH-46 | ||
| 10 | செயாபூம் | செயாபூம் | 11 | 1,137,357 | 12,698 | 91 | TH-36 | ||
| 11 | கோன் காயேன் | கோன் காயேன் | 6 | 1,802,872 | 10,659 | 169 | TH-40 | ||
| 12 | மகா சரக்காம் | மகா சரக்காம் | 43 | 962,665 | 5,607 | 172 | TH-44 | ||
| 13 | ரோய் எட் | ரோய் எட் | 48 | 1,305,211 | 7,873 | 166 | TH-45 | ||
| 14 | யசோதோன் | யசோதோன் | 46 | 537,299 | 4,131 | 130 | TH-35 | ||
| 15 | அம்னாத் சாரோன் | அம்னாத் சாரோன் | 73 | 378,438 | 3,290 | 115 | TH-37 | ||
| 16 | உபோன் இரட்சதானி | உபோன் இரட்சதானி | 77 | 1,878,146 | 15,626 | 120 | TH-34 | ||
| 17 | சிசாகெட் | சிசாகெட் | 56 | 1,472,859 | 8,936 | 165 | TH-33 | ||
| 18 | சுரின் | சுரின் | 69 | 1,396,831 | 8,854 | 157 | TH-32 | ||
| 19 | புரிராம் | புரிராம் | 28 | 1,595,747 | 10,080 | 159 | TH-31 | ||
| 20 | நக்கோன் இரட்சசிமா | நக்கோன் இரட்சசிமா | 21 | 2,648,927 | 20,736 | 128 | TH-30 | ||
குறிப்பு: 31 திசம்பர் 2019 நிலவரப்படியான மக்கள் தொகை.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 ตารางที่ 2 พี้นที่ป่าไม้ แยกรายจังหวัด พ.ศ.2562 [Table 2 Forest area Separate province year 2019]. Royal Forest Department (in தாய்). 2019. Retrieved 6 April 2021. Information, Forest statistics Year 2019, Thailand boundary from Department of Provincial Administration in 2013
- 1 2 รายงานสถิติจำนวนประชากรและบ้านประจำปี พ.ส.2562 [Statistics, population and house statistics for the year 2019]. Registration Office Department of the Interior, Ministry of the Interior. stat.bora.dopa.go.th (in தாய்). 31 December 2019. Archived from the original on 14 June 2019. Retrieved 26 February 2020.
- ↑ "Gross Regional and Provincial Product, 2024 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/en/?p=107927&ddl=107925.
- ↑ Klaus Glashoff. "Spoken Sanskrit". learnsanskrit.cc. Retrieved 2021-09-18.
- ↑ Premsrirat, Suwilai (2007), "Endangered languages of Thailand", International Journal of the Sociology of Language (186): 76, doi:10.1515/ijsl.2007.043, ISSN 0165-2516, S2CID 144238668
- ↑ Draper, John; Prasertsri, Paweena (2013), "The Isan Culture Maintenance and Revitalisation Programme's multilingual signage attitude survey", Journal of Multilingual and Multicultural Development, 34 (7): 618, doi:10.1080/01434632.2013.814659, ISSN 0143-4632, S2CID 143763692
- ↑ Chandler, David P.; Roff, William R.; Smail, John R.W.; Steinberg, David Joel; Taylor, Robert H.; Woodside, Alexander & Wyatt, David K. (1987) [1971].
மேலும் படிக்க
[தொகு]- Alpha Research Co. Pocket Thailand in Figures. Alpha Research Co. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 974-90374-7-2
- Brow, James (1976). Population, land and structural change in Sri Lanka and Thailand. Brill Archive. ISBN 978-90-04-04529-3.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Isaan ஈசான் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமூலத்தில் Isaan ஈசான் பற்றிய ஆக்கங்கள்
- Grandstaff, T. B., Grandstaff, S., Limpinuntana, V., & Suphanchaimat, N. "Rainfed revolution in northeast Thailand." Southeast Asian Studies Vol. 46, No. 3, December 2008, 289–376. PDF
- McCargo, Duncan, and Krisadawan Hongladarom. "Contesting Isan‐ness: discourses of politics and identity in Northeast Thailand." Asian Ethnicity 5.2 (2004): 219-234. பரணிடப்பட்டது 13 மார்ச் 2014 at the வந்தவழி இயந்திரம்
- The Isaan Record பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- Annual population data for Thailand to 1997 (Chulalongkorn University)
- Population statistics from citypopulation.de
- Estimates to 2004, from world-gazetteer.com
- Toward a Knowledge-Based Economy: Northeastern Thailand