உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசானி மூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈசானி மூலை (Eesaani moolai) என்பது இந்திய வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள எட்டு திசைகளில் ஒன்றான வடகிழக்கு திசையாகும். இந்திய புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, குபேரன் இருக்கும் வடக்கு திசை செல்வத்தையும், ஆதித்தன் இருக்கும் கிழக்கு திசை அறிவையும் குறிக்கின்றன. அதனால் அறிவு மற்றும் செல்வம் இணைத்திருக்கும் உச்சநிலையாகவே ஈசானி மூலை பார்க்கப்படுகிறது. அதனால்தான் வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டும் பொழுது வடகிழக்கு திசையை நோக்கி கட்டுவது வாஸ்து சாஸ்திரப்படி அநுகூலத்தை அளிக்கும் என்றும் கருதப்படுகிறது.

புத்த மதம்

[தொகு]

திசைகளை காக்கும் 12 தேவர்களில் ஒருவர் ஈசானி ஆவார். காமதாதுவின் ஆறாவது சொர்கத்தின் பிரதான கடவுள் ஆவார். மஹாபிரஜ்னாபாரமிதுபதேசத்தில் உள்ள எழுத்துக்கள் ஈசானியை மஹேஸ்வரா எனவும், தனி உருவம் கொண்டவர் எனவும் குறிக்கின்றன.

தோற்றம்

[தொகு]

ஈசானிக்கு 3 கண்கள் மற்றும் கடுமையான முகத்தை கொண்டவராக பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார். வலது கையில் சூலமும், இடது கையில் கிண்ணமும் வைத்திருப்பார். இவரது வாகனம் எருது ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசானி_மூலை&oldid=3913748" இலிருந்து மீள்விக்கப்பட்டது