ஈசன் (திரைப்படம்)
| ஈசன் | |
|---|---|
திரைப்பட பதாகை | |
| இயக்கம் | சமுத்திரக்கனி |
| தயாரிப்பு | எம். சசிகுமார் |
| கதை | ஷ்ரேயா |
| இசை | ஜேம்ஸ் வசந்தன் |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | எஸ். ஆர். கதிர் |
| படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
| கலையகம் | கம்பெனி புரடக்ஷன்ஸ் |
| விநியோகம் | கம்பெனி புரடக்ஷன்ஸ் |
| வெளியீடு | 17 டிசம்பர் 2010 |
| ஓட்டம் | 164 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹16 crore |
ஈசன் (Essan). 2010-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் எம். சசிகுமார் தன்னுடைய முதற் படமான சுப்ரமணியபுரம். படத்தின் வெற்றிற்குப் பிறகு இரண்டாவது படமாக அவரே இதைத் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, வைபவ், தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன், அபினயா, அபர்ணா பாஜ்பாயி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும், பல புதுமுகங்களும் நடித்துள்ளனர்.[1] ஈசன் என்ற பெயருக்கு முன்னர் இப்படத்திற்கு நகரம் அல்லது ஆகச்சிறந்தவன் என்ற பெயர் வைக்கத் திட்டமிடப்பட்டது.[2][3][4][5] இது 2010 டிசம்பர் 17 அன்று வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
[தொகு]ஒரு விடுதியில் ஆண்களும், பெண்களும் குடித்துகொண்டு நடனமாடிவருகின்றனர். அங்கிருந்து வீட்டுக்கு இருசக்கர ஊர்தியில் திரும்பிச் செல்லும் ஒரு பெண்ணை செழியனின் (வைபவ் ரெட்டி) நண்பர்கள் காரில் பின்தொடர்ந்து செல்லுகையில் நடந்த களோபரத்தில் அந்தப் பெண் மரணமடைகிறாள். அமைச்சரின் மகனான செழியனின் (வைபவ் ரெட்டி) செல்வாக்கின் காரணமாக, அப்பகுதியின் காவல்துறை உதவி ஆணையர் சங்கையா (சமுத்திரக்கனி), இவ்வழக்கினைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். செழியனும், அவனுடைய நண்பர்களும் பல கொலைகள் செய்தாலும் ஊழல் அரசியல்வாதியான செழியனின் தந்தை தெய்வக நாயகம் தனது பதவியைப் பயன்படுத்தி அவர்களை காப்பாற்றிவருகிறார்.
செழியன் கருநாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ரேஷ்மா (அபர்ணா பாஜ்பாயி) என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் ஒப்புக் கொள்வதற்கு முன்னர் சில அரசியல் நாடகங்கள் நடைபெறுகின்றன. இந்த அரசியல் நாடகத்தில் சங்கையா தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதை அறிந்து கோபமடைகிறார், ஆனாலும் அவருடைய மேல் அலுவலரால் தடுக்கப்படுகிறார். இந்நிலையில் செழியன் மருமமான முறையில் கடத்தப்படுகிறான். இது குறித்து அதிகாரப் பூர்வமற்ற விசாரணையை சங்கையா தொடங்க, அதன் முடிவில் பதினோராம் வகுப்பு படிக்கும் ஈசன் என்ற மாணவன் இதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிகிறார்.
ஈசனின் தந்தை அவர்களுடைய சொந்தக் கிராமத்தில் அரசு ஊழியராக இருக்கிறார், அவருக்குப் பள்ளியில் படிக்கும் பூரணி என்ற வாய் பேச முடியாத மகள் (அபிநயா) இருக்கிறாள். பூரணி தனது படிப்பு முடிந்ததும், மேற்படிப்பினைத் தொடர குடும்பத்துடன் சென்னை செல்கிறாள். பூரணியின் வகுப்பு தோழிகள் அனைவரும் பணக்காரர்களாகவும், மதுவிற்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். அவள் தன் வகுப்புத் தோழிகளால் ஒரு விருந்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அங்கே அவள் செழியன் மற்றும் அவரின் நண்பர் வினோத் ஆகியோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஈசன் குடும்பத்தினரால் இச்சம்பவத்தைச் ஏற்க இயலாமல், அனைவரும் நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். விஷம் கலந்த காபியைச் சிறிய அளவில் பருகியதால் ஈசன் மட்டும் உயிர் பிழைக்கிறான்.
பூரணியின் தோழி சியாமளா அவனைச் சந்தித்து என்ன நடந்தது என்பதைக் கூறுகிறாள். அவன் சகோதரியின் மேல் கொண்ட பாசம் காரணமாக, குற்றவாளிகளைப் பழிவாங்க தீர்மானிக்கிறான். கணினித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையவழி மருந்தினை மாற்றி வினோத் மருத்துவ விபத்தில் இறந்தவிட்டதாகச் சித்தரித்துக் கொல்லப்படுகிறான். மேலும் செழியனைக் கடத்திச் சென்று தாக்குகிறான் என விசாரணையின் மூலம் ஈசனின் கதை சங்கையாவிற்குத் தெரியவருகிறது. அங்கே வந்த தெய்வ நாயகமும் அவரின் உதவியாளரும் செழியனின் இறந்த உடலைக் காண்கின்றனர். அவர்கள் சங்கையாவைத் தாக்கி, ஈசனை கொளுத்திவிட முயல்கின்றனர். சங்கைய்யா, அவர்களைத் துப்பாக்கியால் சுட்டு ஈசனைக் காப்பாற்றுகிறார். இறுதியாக ஈசன் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்படுகிறான். சங்கையா ஈசனை குடும்பதுடன் சந்திக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- காவல்துறை உதவி ஆணையர் சங்கைய்யாவாக சமுத்திரக்கனி
- செழியனாக வைபவ்
- அமைச்சர் தெய்வ நாயகமாக ஏ. எல். அழகப்பன்
- பூரணியாக அபினயா
- ரேஷ்மாவாக அபர்ணா
- செழியனின் தாயாக துளசி
தயாரிப்பு
[தொகு]நடிகர் விக்ரம் 2009-இல் தனது சொந்தத் தயாரிப்பில் இப்படத்தை ஆரம்பித்தார். 90 சதவீதப் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்னர் படத்தின் செலவுகள் அதிகரித்ததால், இதிலிருந்து விலகிக் கொண்டார்.[6] பின்னர், இறுதியில் அவரிடமிருந்து வாங்கி இயக்குநர் சசிகுமார் படத்தை முடித்து வெளியிட்டார்.[7]
ஒலிப்பதிவு
[தொகு]ஈசன் படத்தின் இசைத் தொகுப்பானது சுப்பிரமணியபுரம் படத்திற்காக எம். சசிகுமார் உடன் பணியாற்றிய ஜேம்ஸ் வசந்தன் என்பவரால் இசையமைக்கப்பட்டது. பாடல் வெளியீட்டு விழா 2010 நவம்பர் 19 அன்று, சென்னையில் சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்தியத் திரைப்படப் பிரபலங்களான கே. பாலச்சந்தர், பாலா மற்றும் அமீர் சுல்தான் மலையாள இயக்குநர் ரஞ்சித், தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் கன்னட இயக்குநர் யோகராஜ் பட் போன்றோர் அவ்விழாவில் பங்கேற்றனர். [8][9]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "மெய்யான இன்பம்" | சுக்விந்தர் சிங், பென்னி தயாள், சுனந்தன் | 4:54 | |||||||
| 2. | "ஜில்லா விட்டு" | தஞ்சை செல்வி | 5:28 | |||||||
| 3. | "கெட் ரெடி" | பென்னி தயாள், ஜெரார்ட் தாம்சன் | 4:21 | |||||||
| 4. | "கண்ணில் அன்பை" | பத்மநாபன் | 4:42 | |||||||
| 5. | "சுகவாசி" | சித்ரா, மால்குடி சுபா | 4:35 | |||||||
மொத்த நீளம்: |
24:00 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MANIGANDAN K R I, TNN (2010-10-21). "'We parted as good friends'". The Times of India. Archived from the original on 2012-11-04. Retrieved 2012-10-04.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Sasikumar film is called 'Easan' - Tamil Movie News". IndiaGlitz. 2010-10-19. Retrieved 2012-10-04.
- ↑ S. R. Ashok Kumar (2010-10-21). "Arts / Cinema : The call of the city". The Hindu. Retrieved 2012-10-04.
- ↑ "Easan — Tamil Movie News — Sasikumar announces his new movie — Easan | Sasikumar | Samudrakani | Vikram | Abhinaya". Behindwoods.com. 2010-10-19. Retrieved 2012-10-04.
- ↑ "Sasikumar is back with Easan". Sify.com. 2010-10-20. Retrieved 2012-10-04.
- ↑ "Vikram starts his Sasikumar film!". சிஃபி. 19 November 2009. Archived from the original on 19 நவம்பர் 2010. Retrieved 31 July 2011.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Sasikumar and Vikram part ways". Behindwoods. 6 September 2010. Retrieved 31 July 2011.
- ↑ "Sasikumar's Easan audio to be innovative". Sify.com. 2010-11-16. Retrieved 2012-10-04.
- ↑ "Events - 'Easan' Audio Invite". IndiaGlitz. 2010-11-18. Retrieved 2012-10-04.