ஈக்கொல்லிக் காளான்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Amanita|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஈக்கொல்லிக் காளான்கள்
2006-10-25 Amanita muscaria crop.jpg
Showing three stages as the mushroom expands
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Amanita
இனம்: வார்ப்புரு:Taxonomy/AmanitaA. muscaria
இருசொற் பெயரீடு
Amanita muscaria
(L.) Lam. (1783)
Subspecies and varieties
 • A. muscaria subsp. flavivolvata Singer[1][2]
 • A. muscaria var. guessowii Veselý[3]
 • A. muscaria var. inzengae Neville & Poumarat[4][2]

ஈக்கொல்லிக் காளான் (Amanita muscaria) அல்லது ஈ அகாரிக் அல்லது ஈ அமனிதா என்பது அமனிதா பேரினத்தின் பேசிடியோமைசீட்டு (கதைப்பூஞ்சைத் தொகுதியின் இனம்) ஆகும். இது மியூசிமோல் வேதிப்பொருள் காளான் ஆகும். இது வட அரைக்கோளத்தின் மிதவெப்ப மண்டலம் முழுவதும் அமைந்த காடு அடர்ந்த வட்டாரங்களைத் தாயகமாகக் கொண்டுள்ளது, இந்த ஈக்கொல்லிக் காளான் தென் அரைக்கோளத்தின் பலநாடுகளில் நோக்கம் ஏதுமின்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பைன், பிர்ச் மரங்களில் இணைவாழ்வு மேற்கொள்கிறது. எனவே, இது அனைத்திடப் பரவல் காளான் இனமாக விளங்குகிறது. இது ஊசியிலை மரங்களிலும் இலையுதிர் மரங்களிலும் வேர்ப்பூஞ்சையாக இணைவாழ்வு மேற்கொள்கிறது.

மிகவும் வகைமை நச்சு இனமாகக் கருதப்படும் ஈக்கொல்லிக் காளான் பெரிய வெண்ணிற விதைப்பைகளைக் கொண்டுள்ளது அல்லது வெண்பொட்டுள்ள சிவப்புக் காளானைக் கொண்டுள்ளது. மக்கள் பண்பாட்டில் மிகப் பெருவழக்கில் உள்ளது.

இது நச்சுள்ளதாக வகைப்படுத்தப்பட்டாலும், இது செரிக்காமையால் இறப்பு நேர்ந்தமைக்கான அறிக்கைகள் அருகியே கிடைக்கின்றன. இருமுறை வேகவைத்து நீரை இறுத்ததும் இதன் நச்சுத்தன்மை மிகவும் குறைகிறது. உளத்தூண்டல் வேதிப்பொருளும் உடைந்து சிதைகிறது. இது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்காவின் பல பகுதிகளில் உண்ணப்படுகிறது. இது போதெனிக் அமிலம், மியூசிமோல் ஆகிய உளத்தூண்டல் வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளது. இவை பொய்த்தோற்றக் காட்சிகளை இயல்புடையவை உருவாக்கும் இயல்புடையவை மிந்தக் காளான் மயக்கமூட்டும் பொருளாகவும் சாமியாட்டத்துக்கான வெறியயரும் பொருளாகவும் பயன்படுகிறது. இது சாம், சைபீரியத் தொல்குடிகளின் பண்பாட்டுச் சமயச் சடங்கு சிறப்பு கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது, இது இதே நோக்கில் மயக்கமூட்டும் பொருள்ளாகவும் தெய்வமேறும் பொருளாகவும் நடுவண் கிழக்கு, வட அமெரிக்கா, ஐரோப்பாசியா, சுகாண்டிநேவியா ஆகிய வட்டாரங்களில் பயன்படுகிறது.

வகைபாட்டியலும் பெயரிடலும்[தொகு]

இந்தக் காளான் பல ஐரோப்பிய மொழிகளில் இதைப் பாலில் கலந்து தெளித்துப் பூச்சிகளைக் கொல்லும் பயனால் பெயரிடப்பட்டுள்ளது. இந்நடைமுறை செருமானிய, இசுலாவிக் மொழி பேசும் ஐரோப்பியப் பகுதிகளிலும் வோசுகெசு மலைப்பகுதியிலும் உரொமேனியா, பிரன்சின் சில குறிப்பிட்ட பகுதிகளிலும் இருந்துள்ளது.[5]{{rp|198}ரால்பெர்ட்டசு மேக்னசு முதன்முதலில் தன் De vegetabilibusஏனும் நூலில் 1256 க்கு முன்பே[6] vocatur fungus muscarum, eo quod in lacte pulverizatus interficit muscas எனப் பதிவாகியுள்ளார். இதன் பொருள், "ஈக்களைக் கொல்ல தூளாக்கிப் பாலில் கலந்தமையால் இது ஈக்கொல்லிக் காளான் என்ற பெயரைப் பெற்றது" என்பதாகும்.[7]

பதினாறாம் நூற்றாண்டுத் தாவரவிலாளர் கரோலசு கிளூசியசு இதைப் பாலில் கலப்பதைப் பிராங்குபர்ட்டில் (செருமனி) பார்த்துள்ளார்.[8] தாவரவியலின் தந்தையான கார்ல் இலின்னேயசு இதைத் தெற்குச் சுவீடனில் இசுமாலாந்தில் குழந்தையாக இருந்தபோது பார்த்ததாகக் கூறுகிறார்.[9] இவர் தாவர இனங்கள் எனும் தனது நூலின் இரண்டாம் தொகுதியில் 1753 இல் அகாரிக்கசு முசுக்காரியசு(Agaricus muscarius) என இதைப் பெயரிட்டு விவரிக்கிறார்.[10] இலத்தீனில் முசுகா (musca) என்றால் ஈ என்பதாகும் .[11]

ழீன் பாப்திசுத்தே இலம்மார்க் இந்த காளான் இனத்தை அமனிதா பேரினத்தில் 1783 ஆம் ஆண்டில் வைத்த பிறகே தற்காலப் பெயரேற்கப்பட்டு, இ821 இல் பூஞ்சையியலின் தந்தையாகப் போற்றப்படும் எலியாசு மேக்னசு பிரைசு எனும் சுவீடிய இயற்கையியல் அறிஞரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்துப் பூஞ்சைத் தொகுதிகளின் தொடக்க நாளும் 1821, ஜனவரி, 1 ஆம் நாளாக பொதுஇசைவால் ஏற்கப்பட்டன. இது பிரைசுவின் முதல் நூலின் வெளியீட்டு நாளாகும் என்பதும் அப்போது இந்தக் காளான் இனத்தின் பெயர் அமனிதா முசுக்காரியா (Amanita muscaria) (L.:Fr.) Hook என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். பன்னாட்டுத் தவரவியல் பெயரீட்டின் விதிமுறைத் தொகுப்பின் 1987 ஆம் ஆண்டு பதிப்பு பூஞ்சைகளின் தொடக்கப் பெயரீட்டு நாளைக் குறிக்கும் முதன்மைப் பணிகள் சார்ந்த விதிகளை மாற்றியது. எனவே, பூஞ்சையின் பெயரீட்டுக்கான முதன்மைப் பணிக்கான நாளை இப்போது1753, மே, 1 ஆம் நாளில் இருந்தே ஏற்புடையதாகக் கருதலாம். இது இலின்னேயசு முதன்மைப் பணியின் வெளியீட்டு நாளாகும்.[12] எனவே, இலின்னேயசும் இலம்மார்க்கும் இணைய, அமனிதா முசுக்காரியா (Amanita muscaria) (L.) Lam. என இக்காளானின் பெயர் அழைக்கப்படுகிறது

மேற்கோள்கள்[தொகு]

 1. Tulloss RE; Yang Z-L (2012). "Amanita muscaria Singer". Studies in the Genus Amanita Pers. (Agaricales, Fungi). 2019-05-06 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "Infraspecific taxa of muscaria". amanitaceae.org.
 3. Tulloss RE; Yang Z-L (2012). "Amanita muscaria subsp. flavivolvata Singer". Studies in the Genus Amanita Pers. (Agaricales, Fungi). 2013-02-21 அன்று பார்க்கப்பட்டது.
 4. Tulloss RE; Yang Z-L (2012). "Amanita muscaria var. guessowii Veselý". Studies in the Genus Amanita Pers. (Agaricales, Fungi). 2013-02-21 அன்று பார்க்கப்பட்டது.
 5. Wasson, R. Gordon (1968). Soma: Divine Mushroom of Immortality. Harcourt Brace Jovanovick. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88316-517-1. 
 6. Albertus Magnus (1256). "Book II, Chapter 6; p 87 and Book VI, Chapter 7; p 345". De vegetabilibus. 
 7. Ramsbottom, p 44.
 8. Carolus Clusius (1601). "Genus XII of the pernicious mushrooms". Rariorum plantarum historia. 
 9. Carl Linnaeus (1745) (in la). Flora svecica [suecica] exhibens plantas per regnum Sueciae crescentes systematice cum differentiis specierum, synonymis autorum, nominibus incolarum, solo locorum, usu pharmacopæorum. Stockholm: Laurentii Salvii. 
 10. Linnaeus C (1753). "Tomus II" (in la). Species Plantarum. vol. 2. Stockholm: Laurentii Salvii. பக். 1172. https://www.biodiversitylibrary.org/page/359193. 
 11. Simpson DP (1979). Cassell's Latin dictionary (5th ). London: Cassell Ltd.. பக். 883. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-304-52257-6. 
 12. Esser K; Lemke PA (1994). The Mycota: a comprehensive treatise on fungi as experimental systems for basic and applied research. Springer. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-66493-2. 

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: