ஈக்குவடார் - தேசிய கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Ecuador
Flag of Ecuador.svg
பிற பெயர்கள் La Tricolor (The Tricolor)
பயன்பாட்டு முறை தேசியக் கொடி and state and naval ensign
அளவு 2:3
ஏற்கப்பட்டது 26 September 1860. Present ratio, November 2009.
வடிவம் A horizontal tricolor of yellow (double width), blue and red with the National Coat of Arms superimposed at the center.
Naval Jack of Ecuador.svg
கொடியின் வேறுபாடு Ecuador
பயன்பாட்டு முறை Naval Jack [[File:FIAV naval jack.svg|23px|link=|alt=|Vexillological description]]

ஈக்குவடாரின் தேசியக் கொடி[தொகு]

ஈக்குவடாரின் தேசியக் கொடி  மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிற பட்டைகளைக் கொண்டது. இவை கிடைமட்டமாக இருக்கும். ஈக்குவடாரின் தேசியக்கொடி முதலில் 1835-லும், பின் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 26-லும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது உள்ள கொடியின் வடிவமைப்பானது  1900-ல் இறுதி செய்யப்பட்டு, அதன் மைய வடிவம் வடிவமைக்கப்பட்டது. மஞ்சள், நீலம் மற்றும் சிகப்பு வண்ணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு ஈக்குவடாரில் உள்ள ஒவ்வொரு மாகாணத்தையும் குறிக்கும் நட்சத்திரங்களை கொண்ட வெள்ளை மற்றும் நீல நிற கொடி பயன்படுத்தப்பட்டது. ஈக்குவடார் நாட்டின் கொடியானது கொலம்பியா மற்றும் வெனிசுலா நாட்டு கொடிகளின் வடிவமைப்பை ஒத்திருக்கும். இம்மூன்று நாட்டு கொடிகளும் வெனிசுலா நாட்டுத் தளபதி பிரான்சிஸ்கோ-டி-மிராண்டாவினால் முன்மொழியப்பட்டு, வெனிசுலா அரசாங்கத்தால் 1811-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பியாவும் சிறு மாறுதல்களுடன் இம்முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. ஈக்குவடாரின் கொடியானது கொலம்பியா நாட்டு கொடியுடன் எல்லா அம்சங்களிலும் ஒத்திருந்தது. ஆகவே கடல்வழி வணிகத்திற்கு வேறுவிதமான கொடியை கொலம்பியா பயன்படுத்தும்.

வடிவமைப்பு[தொகு]

Construction sheet

           நவம்பர் 2009-ல் ஈக்குவடாரின் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய தலைமையகம் தேசிய கொடி, கொடியில் உள்ள சின்னம் மற்றும் பிற தேசிய சின்னங்களுக்கான வடிவமைப்பு மற்றும் விகிதத்தை நிர்ணயித்தது.

ஈக்குவடாரின் தேசிய கொடி 2.20 மீட்டர் நீளமும், 1.47 மீட்டர் அகலமும் கொண்டது. இக்கொடி மூன்று வண்ணத்தில் உள்ள கிடைமட்ட பட்டைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.கொடியின் பாதி பகுதி வரை மஞ்சள் பட்டையும், அடுத்த கால் பகுதியில் நீலமும், மீதம் உள்ள கால் பகுதியில் சிகப்பு பட்டையும் உள்ளது.[1] மையத்தில் உள்ள கேடய வடிவிலான அதன் மரபுச்  சின்னமானது செவ்வக வடிவத்தில் 12:10 என்ற விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியை விற்கும்போது அந்த விற்பனையாளர் தங்கள் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட வருடம் ஆகியவற்றை 20*10 மி.மீ அளவுள்ள சிறிய துணியில் அச்சிட்டு, அதனை கொடியின் பின்புறம் இணைக்க வேண்டும்[2] . ஈக்குவடாரின் தேசிய தர நிர்ணய சின்னத்திலும், கொடியில் உள்ளது போலவே கேடய சின்னம் சதுர வடிவத்தில் இருக்கும். அதனைச் சுற்றிலும் 4 செ.மீ உயரம், 3 செமீ. அகலத்தில் தங்க நிறத்திலான ரோம எழுத்து ஒன்று தங்கநிற நூலினால் நெய்யப்பட்டிருக்கும். இது இராணுவ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. 

மரபுச்சின்னம் (கோட் ஆப் ஆர்ம்ஸ்)[தொகு]

Coat of arms

ஈக்குவடார் நாட்டுக் கொடியின் மையப்பகுதியில் உள்ள கேடய அமைப்பில் பின்பகுதியில் உள்ள மலை சிம்பராசோ மலை ஆகும். ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான சிம்போராசோ ஈக்குவடாரின் உயர்ந்த மலையாகும். அதன் அடிவாரத்தில் உற்பத்தி ஆகும் ஆறு கயாஸ். ஆற்றின் மீது காணப்படும் நீராவி கப்பலுக்கு கயாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கியாவாகுவிலில் கட்டப்பட்டது. இதுவே ஈக்குவடார் மற்றும் தென் அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் நீராவி கப்பல் ஆகும். 1841, அக்டோபர் 9-ல் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.   இக்கப்பல் காடிசியஸின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டு பாம்புகளால் சுற்றப்பட்ட ஒரு தூணின் மேலே சிறகுகளை விரித்த கழுகு ஒன்று அமர்ந்திருப்பதை போன்று கப்பலில் உள்ள தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மையத்தில் உள்ள இச்சின்னமும் கொடியின் வண்ணத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு மேலே தங்கநிற சூரியனும், வல மற்றும் இடப்புறங்களில் மேஷம் உள்ளிட்ட சில ராசிகளின் படங்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.

கேடயத்திற்கு மேலே இருக்கும் பெரிய கழுகானது ஈக்குவடாரின் சக்தி, பெருமை மற்றும் வலிமையை குறிக்கிறது. தனது இறக்கைகளை விரித்து வைத்துக் கொண்டு இருக்கும் இக்கழுகு எதிரிகளை தாக்க எந்நேரமும்  தயாராக இருப்பதை உணர்த்துகிறது. இக்கேடயம் நான்கு ஈக்குவடார் கொடியினால் சூழப்பட்டுள்ளதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் காணப்படும் இலை கிரீடமானது குடியரசின் வெற்றிகளை குறிக்கிறது[3]. வலது பக்கத்தில் உள்ள பனை இலை சுதந்திரம், சுதந்திர போராட்டத் தியாகிகளின் அடையாளமாக உள்ளது.இக்கேடயத்திற்கு கீழே உள்ள கத்திகள் குடியரசின் கண்ணியத்தை பிரதிபலிக்கின்றன[4].

குறியீடுகளின் அர்த்தங்கள்[தொகு]

மஞ்சள் : பயிர்கள் மற்றும் வளமிக்க மண்

நீலம் : பெருங்கடல் மற்றும் தெளிந்த வானம்

சிகப்பு : தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய தியாகிகளை குறிக்கிறது.


உறுதிமொழி மற்றும் பாடல்[தொகு]

மாணவர்களும், இராணுவ குழுக்களும் ஜுராமெண்டோ ஆ லா பந்தாரா எனப்படும் கொடிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி தேசிய விடுமுறைகளிலோ அல்லது பட்டமளிப்பு போன்ற முக்கியமான கல்விசார் நிகழ்ச்சிகளிலோ[5] எடுக்கப்படும். ஹிம்னோ அ லா பந்தாரா எனப்படும் தேசபக்திப்பாடல் உறுதிமொழிக்கு பிறகு பாடப்படுகிறது. [6]

மாறுபட்ட வடிவங்கள்[தொகு]

பதிவு செய்யப்பட்ட அரசாங்க எண் 1271-ன் படி டிசம்பர் 5, 1900-ல் ஈக்குவடாரின் தேசிய கொடிக்கு இரண்டு அதிகாரப்பூர்வமான வடிவமைப்புகள் உள்ளன என சட்டப்படி கையொப்பமிடப்பட்ட ஒரு அரசாணை நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பு சட்டம் 2-ன் படி இரண்டு வடிவமைப்புகளுமே நீலம், சிகப்பு நிற பட்டைகளின் அளவை இரட்டிப்பாக கொண்ட மஞ்சள் நிற பட்டைகளை கொண்டுள்ள மூவர்ண கொடியாக வடிவமைக்கப்பட்டது. அரசமைப்பு சட்டம் 3-ன் படி மையத்தில் கேடய வடிவிலான மரபுச் சின்னத்தை பெற்றுள்ள கொடியினை இராணுவம், அரசாங்க அலுவலர்கள் மற்றும் வெளியுறவுத் தூதுவர்களால் பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்படவில்லை. ஆனால் சிதைவின்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். அரசாணை எண் 6-ன் படி கடல் வணிகர்கள் மரபுச் சின்னம் இல்லா கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஈக்குவடாரைப் போல் இல்லாமல் பெரு, பொலிவியா, அர்ஜெண்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மரபுசின்னத்துடன் கூடிய கொடியை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது[7][8].

கொலம்பியா நாட்டு கொடியுடன் வித்தியாசப்படுத்துவதற்காக ஈக்குவடார் மரபுச் சின்னத்துடன் கொடியினை பயன்படுத்தும்.  கொலம்பியா கடல் வணிகர்கள் சிகப்பு மற்றும் நீல வண்ண பிண்ணனியில் நீள்வட்ட வடிவில் உள்ள நட்சத்திரங்களை கொண்ட கொடியினை பயன்படுத்துவர்.[9]

அரசாணை 4-ன் படி மாகாண நிர்வாகங்கள் மரபுச் சின்னத்துடன் கூடிய கொடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. எனவே மாகாணங்களுக்கு என தனியாக கொடி வடிவமைக்கப்பட்டது.மாகாணங்களை குறிக்கும் வகையில் ஒரு பொது கொடி வடிவமைக்கப்பட்டது. அதில் மூவர்ண கொடியில் ஒவ்வொரு மாகாணங்களையும் குறிக்கும் வெள்ளை நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டன. 1905 முதல் 1930 வரை இக்கொடி வெனிசுலா நாட்டு கொடியை ஒத்திருந்தது. தற்போது உள்ள வெனிசுலா நாட்டு கொடியில் நட்சத்திரங்கள் அரைவட்ட வடிவில் அமைந்திருக்கும்.

கிளைப்பொருள்கள்[தொகு]

ஈக்குவடாரில் உள்ள மாகாணங்களில், கயாஸ் மாகாணத்தின் தலைநகரம்தான் பாலஸ்தீனா. இதனுடைய கொடியில் ஈக்குவடாரின் தேசியகொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஆலிவ்  பச்சை[10] பிண்ணனியில் மூவர்ண கொடி உள்ளதுபோல் வடிவமைத்தனர். தங்களது தாய்நாட்டுடனான பற்றினை வெளிபடுத்தும் வண்ணம் ஈக்குவடார் கொடியை பயன்படுத்தியதாக மாகாண நிர்வாகம் தெரிவித்தது. மேலும் பச்சை நிறமானது தங்களது முன்னேற்றத்தை குறிக்கும் என குறிப்பிட்டது.

லோஜா மாகாணமும் 1963 – ல் தாய்நாட்டுக் கொடியை போன்றே தங்களா மாகாண கொடியை வடிவமைத்தது[11]. இதனை வடிவமைத்தவர் கூறும்போது தங்கள் தாய்நாட்டின் கெளரவத்தையும், புகழையும் குறிக்கும் வகையில் இக்கொடி வடிவமைக்கப்பட்டது என கூறுகிறார்.

நெப்போ மாகாணமும் கேடய வடிவிலான மரபுச் சின்னம் இல்லா தேசிய கொடியை போன்றே தங்கள் கொடியை வடிவமைத்தது. ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், மஞ்சள் மற்றும் நீல நிறங்களுக்கு மத்தியில் ஒரு வெள்ளை பட்டை காணப்படும்.[12]

மாகாணங்களின் கொடிகள்[தொகு]
  1. Instructivo de uso de los Símbolos Patrios
  2. Norma Que Establece Los Requisitos de Diseno, Caracteristicas de Confeccion y Modo de Empleo de Los Emblemas Patrios, pp. 6.1
  3. Other descriptions attribute it to the symbolism of the glory of the heroes of independence.
  4. "Símbolos Patrios" (es). Presidencia de la República del Ecuador. பார்த்த நாள் 2010-07-27.
  5. "Tradiciones Militares — Juramento a la Bandera" (es). Ministry of National Defense of Ecuador. மூல முகவரியிலிருந்து 2010-06-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-07-28.
  6. "Tradiciones Militares — Incineración de la Bandera" (es). Ministry of National Defense of Ecuador. மூல முகவரியிலிருந்து April 18, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-07-28.
  7. D.L. 11323 del 31 de Marzo de 1950
  8. "Bandera Nacional" (es). Ministry of Defense of Bolivia. பார்த்த நாள் 2010-07-24.
  9. "Historia de la Bandera" (es). Vice President of the Republic of Colombia (2008). பார்த்த நாள் 2010-07-25.
  10. "Símbolos" (es). Canton of Palestina (2005-10-27). பார்த்த நாள் 2010-07-26.
  11. "Bandera" (es). Tourism Loja. பார்த்த நாள் 2010-07-26.
  12. "Provincia de Napo" (es). Centros de Investigación del Exterior (2008). பார்த்த நாள் 2010-07-26.