இ. வி. கிருட்டிண பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இ. வி. கிருட்டிண பிள்ளை
பிறப்பு1894 செப்டம்பர் 14
குன்னத்தூர், கொல்லம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு30 மார்ச்சு 1938(1938-03-30) (அகவை 43)
திருவனந்தபுரம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
பணிஎழுத்தாளர், நகைச்சுவையாளர், நையாண்டியாளர்
பெற்றோர்பாப்பு பிள்ளை
கார்த்தியாயிணி அம்மா
வாழ்க்கைத்
துணை
மகேசுவரி அம்மா
பிள்ளைகள்7

ஈ.வி.கிருட்டிண பிள்ளை (E. V. Krishna Pillai) (1894-1938) இவர் மலையாள இலக்கியத்தை எழுதியவர் ஆவார். மேலும் திருவிதாங்கூரின் சிறீ மூலம் பிரபல சட்டசபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

சுயசரிதை[தொகு]

ஈ.வி.கிருட்டிண பிள்ளை 1894 செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவின் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூர் வட்டத்தில் பாப்பு பிள்ளை, கார்த்தியாயிணி அம்மா ஆகியோருக்குப் பிறந்தார். [1]

தொழில்[தொகு]

குன்னத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், கிருட்டிண பிள்ளை கலையிலும் சட்டத்திலும் பட்டம் பெற்றார். பின்னர்ர், ஒரு அரசு ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

குடும்பம்[தொகு]

பிரபல எழுத்தாளர் சி.வி.ராமன் பிள்ளையின் இளைய மகள் மகேசுவரி அம்மாவை மணந்தார். இந்த தம்பதியருக்கு ஐந்து மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் தங்கள் வாழ்க்கையில் பிரபலமானவர்கள். மூத்தவரான சந்திராஜி (ராமச்சந்திரன் நாயர்) ஒரு பிரபலமான திரைப்பட நடிகராக இருந்தார். [2] இரண்டாவது மகன், அடூர் பாசி (பாஸ்கரன் நாயர்), மலையாளத் திரைப்படத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும், மூன்றாவது, பத்மநாபன் நாயர் (பாப்பன்), ஒரு பிரபலமான பத்திரிகையாளராகவும், பிரபலமான கேலிச் சித்திரமான குஞ்சு குறூப்பு என்ற கதாபாத்திரத்தின் எழுத்தாளராகவும் இருந்தார். [3] இவரது மற்ற குழந்தைகள் ஓமனா அம்மா, இராசலட்சுமி அம்மா, சங்கரன் நாயர் (18 வயதில் இதய நோய் காரணமாக இறந்தார் ), கிருட்டிணன் நாயர் ஆகியோரும் அடங்குவர்.

பணிகள்[தொகு]

பின்னர், மலையாளி, மலையாள மனோரமா போன்ற வெளியீடுகளின் ஆசிரியர் பதவிகளை ஏற்றார். [4] இந்த காலகட்டத்தில் இவர், தனது வீட்டை முந்தைய திருவிதாங்கூர் மாநிலத்தில் அடூருக்கு அருகிலுள்ள பெரிங்கநாட்டுக்கு மாற்றினார். திருவிதாங்கூரின் சிறீ மூலம் பிரபல சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். [1]

பல திறமைக் கலைஞர்[தொகு]

இவர் பல திறமைகள் கொண்ட ஆளுமை என்று அறியப்பட்டார். ஒரு வழக்கறிஞராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கினார். இவரது குறுகிய வாழ்க்கையில், நகைச்சுவை, நாடகங்கள், சிறுகதைகள், சுயசரிதை ஆகியவற்றை எழுதினார். இவர் ஒரு கட்டுரையாளராகவும் கேலிச்சித்திர கலைஞராகவும் இருந்தார். ஒரு சிறந்த நையாண்டியான இவர் நகைச்சுவைத் துறையில் நிபுணராக இருந்தார்.

இறப்பு[தொகு]

இவர் 1938 மார்ச் 30 அன்று தனது 43 வயதில் இறந்தார். [5]

நினைவு[தொகு]

ஈ. ஆர். கிருட்டிண பிள்ளை சமாரக சாகித்ய விருதை இவரது நினைவாக பிறவி சம்சுகாரிக சமிதி நிறுவியுள்ளது. [6]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]