இ. தொ. க. மேலாண்மை பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இ. தொ. க மேலாண்மை பள்ளிகள் (IIT SoMs) எனக் குறிப்பிடுவன கரக்பூர், மும்பை,சென்னை, கான்பூர் மற்றும் ரூர்க்கி நகர்களிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் உள்ள மேலாண்மை கல்விக்கான பள்ளிகள் அல்லது துறைகளாகும். இவை மேலாண்மை (முகாமைத்துவம் - இலங்கைதமிழ்) கல்வியில் பட்டமேற்படிப்பு பட்டங்களை வழங்குகின்றன. இப்படிப்புகளுக்கான சேர்க்கை ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு மூலம் நடைபெறுகிறது. இத்தேர்வில் வடிகட்டப்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த இ.தொ.கவில் குழு உரையாடல்கள்/நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வினோத் குப்தா மேலாண்மை பள்ளி,(VGSoM), இ.தொ.க கரக்பூர்[தொகு]

வினோத் குப்தா மேலாண்மை பள்ளி 1993ஆம் ஆண்டு இ.தொ.க கரக்பூரில் துவங்கபட்டது.இதுவே இ.தொ.கழகங்களில் மேலாண்மை கல்விக்காக நிறுவப்பட்ட முதல் பள்ளியாகும். இக்கழகத்தின் முன்னாள் மாணவரும் வாழ்நாள் ஆய்வாளருமான வினோத் குப்தாவினால் தூண்டப்பட்டு 1994ஆம் ஆண்டு குடியரசு தலைவர் சங்கர்தயாள் சர்மாவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1996ஆம் ஆண்டு புதுக் கட்டிடத்திற்கு குடிபெயர்ந்தது.

சைலேஷ் ஜெ.மேத்தா மேலாண்மை பள்ளி (SJMSoM), இ.தொ.க மும்பை[தொகு]

இ.தொ.க மும்பையில் 1995ஆம் ஆண்டு சைலேசு செ மேத்தா மேலாண்மை பள்ளி நிறுவப்பட்டது. பல்துறை கல்வியை வளர்க்கவும் மாறிவரும் சூழலில் பொறியாளர்களை சிறந்த 'மறுமலர்ச்சி தலைவர்களாக' உருவாக்கவும் இப்பள்ளி நிறுவப்பட்டது. இக்கழகத்தின் முன்னாள் மாணவரும் இப்பள்ளி உருவானதற்கு மிகுந்த பொருளுதவி அளித்தவருமான சைலேசு செ.மேத்தாவின் பெயரை 2000ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு சூட்டினர்.

பல தனியார் நிறுவனங்கள், ஐசிஐசிஐ,இந்துசுதான் லீவர்,லார்சன் & டூப்ரோ போன்றவை, மாணவர் உதவித்தொகைகள் கொடுக்கின்றன.தவிர,சைலேசு மேத்தா அறக்கொடை சில தகுதி சான்ற உதவித்தொகைகளை வழங்குகிறது.

மேலாண்மை கல்வித் துறை (DMS), இ. தொ. க தில்லி[தொகு]

இ.தொ.க தில்லி சட்டதிட்டங்களை தகுந்தவாறு மாற்றி 1993ஆம் ஆண்டு துவங்கிய மேலாண்மை கல்வித் துறை முதுகலை வணிக மேற்பார்வை (MBA) பட்டம் 1996ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இத்துறை தற்போது மேலாண்மை அமைப்புகள் மீது குவியம் கொண்ட முதுகலை வணிக மேற்பார்வை இரண்டு வருட பாடதிட்டத்தையும்,பாரதி தொலைதொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பள்ளியின் கீழ் தொலைதொடர்பு அமைப்புகள் மேலாண்மையில் குவியம் கொண்ட முதுகலை வணிக மேற்பார்வை இரண்டு வருட பாடதிட்டத்தையும் தொழில்நுட்ப மேலாண்மையில் குவியம் கொண்ட முதுகலை வணிக மேற்பார்வை மூன்று வருட பாடதிட்டத்தையும் நடத்தி வருகிறது.

மேலாண்மை கல்வித் துறை (DoMS),இ. தொ. க சென்னை[தொகு]

இ. தொ. க சென்னையில் மேலாண்மை கல்வித் துறை ஏப்ரல் 2004 முதல் செயல்படத் துவங்கியது. இதன் முன்னர் மனிதம் மற்றும் குமுகவியல் துறையின் கீழ் 2001 முதலே முதுகலை வணிக மேற்பார்வை (MBA) பாடதிட்டம் நடத்தப்பட்டு வந்தது.இதன் முன்னோடியாக தொழிலக மேலாண்மையில் முதுகலை தொழில்நுட்பம் (M.

தற்போது மேலாண்மை கல்வித் துறை முதுகலை வணிக மேற்பார்வை,முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களை தொழில்துறையின் பல்வேறு இயங்குதளங்களில் வழங்கிவருகிறது.

இராஜ் & நீரா மேலாண்மை பள்ளி(RNSoM), இ.தொ.க கான்பூர்[தொகு]

பொறியியலாளர்களின் மேலாண்மை திறனை வளர்க்க வேண்டிய தேவையை முதலில் உணர்ந்து இ.தொ.க கான்பூர் தொழிலக மற்றும் மேலாண்மை பொறியியல் துறையை 1974ஆம் ஆண்டு அமைத்தது. இன்று இத்துறை கற்பித்தல், தொழில் அறிவுரைகள், மேலாண்மை வளர்ச்சி திட்டங்கள், கல்வி ஆய்வுகள், பொதுத்துறை செயற்பணிகள் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளது. நிதி,சந்தைப்படுத்தல்,இயக்குதல்,தகவல் தொழில்நுட்பம் மற்றும் அமைப்புகள் துறைகளில் முதுகலை வணிக மேற்பார்வை (MBA) பட்டங்கள் வழங்குகிறது.

இத்துறையினை தனி பள்ளியாக மாற்றிட இ.தொ.க கான்பூரில் அவர்களது முன்னாள் மாணவர்கள் இராஜேந்திர சிங் மற்றும் நீரா சிங்[1]அவர்களது அரவணைப்பில் இராஜ் & நீரா மேலாண்மை பள்ளி நிறுவப்படுகிறது. இதற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.


மேலாண்மை கல்வித் துறை (DoMS),இ. தொ. க ரூர்க்கி[தொகு]

மேலாண்மை கல்வித் துறை (DoMS), இ. அ. க பெங்களூரு[தொகு]

இ.அ.க பெங்களூருவின் மேலாண்மை கல்வித் துறை 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, நாட்டின் மிகப்பழைமையான மேலாண்மை பள்ளியாக திகழ்கிறது. பொறியியல் மாணவர்களுக்கு என தனியான முதுகலை வணிக மேற்பார்வை பாடதிட்டம் அமைத்துள்ளது. தவிர தனது முழுநேர மாணவர்கள், தர மேம்பாட்டு திட்டத்தின்(QIP) கீழ் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்,மற்றும் வெளி பதிகை திட்டத்தின்(ERP) கீழ் தொழில்துறை வல்லுனர்களுக்கு பகுதிநேர கல்வியாக பொறியியலில் முதுகலை அறிவியல் பட்டம்,முனைவர் பட்டங்கள் வழங்குகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராஜ் நீரா தம்பதியர்