இ. தியாகலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இ. தியாகலிங்கம்

புனைப்பெயர் காரைநகரான், காரையூரான்
நாடு நோர்வேஜியர்
எழுதிய காலம் 1984– தற்போதுவரை
இலக்கிய வகை சிறுகதை, புதினம், குறுநாவல், கவிதை
https://karainagaran.com/about/

இ. தியாகலிங்கம் (பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

படைப்புகள்[தொகு]

  • அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம்
  • நாளை (1999) – புதினம்[2]
  • பரதேசி (2008) – புதினம்
  • வரம் (2009) – குறுநாவல் தொகுதி
  • துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி
  • திரிபு (2010) – புதினம்[3]
  • எங்கே (2011) – புதினம்[4]
  • ஒரு துளி நிழல் (2014) - புதினம்
  • பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம்[5]
  • மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம்[6]
  • சர்வ உரூபிகரம் (2016) – புதினம்
  • அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்
  • வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்
  • காமமே காதலாகி (2016) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம்
  • புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு
  • இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி
  • மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி

விருதுகள்[தொகு]

செந்தமிழ் நெல்லும் வழியெது பார்- கவிதை - அவுஸ்திரேலிய தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம், திண்ணை, சு. குணேஸ்வரன், செப்டம்பர் 4, 2009
  2. நாளை, நூலகம் திட்டம், பார்த்த நாள் 22 சூலை 2019.
  3. "திரிபு". கூகுல் புக்ஸ். பார்த்த நாள் 18 சூலை 2019.
  4. எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019
  5. பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
  6. மானிடம் வீழ்ந்ததம்மா, க._பூரணச்சந்திரன், மே 19, 2015, பார்த்த நாள் 22 சூலை 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
இ. தியாகலிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._தியாகலிங்கம்&oldid=3007686" இருந்து மீள்விக்கப்பட்டது