இ. கே. தி. சிவகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர் இ. கே. தி. சிவகுமார்
சிவக்குமார்.jpg
வாழிடம்சென்னை
தேசியம்இந்தியர்
விருதுகள்2008-ஆம் ஆண்டுக்கான அறிவியலாளர் (தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் அகாதமி, புதுதில்லி)
இணையதளம்
ektsiva.in

இ. கே. தி. சிவகுமார் (E. K. T. Sivakumar, பிறப்பு: செப்டம்பர் 28, 1968) ஒரு இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் வருகைப் பேராசிரியராக 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றித் தற்போது செராமிக் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். "வளரும் அறிவியல்" இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சிவகுமார் திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் நல்லாசிரியர் விருதுப் பெற்ற டாக்டர்.இ.கே.திருவேங்கடம்-விஜயா தம்பதியனரின் மூத்த மகனாகப் பிறந்தவர்.[சான்று தேவை] சிவகுமார் தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் தொழில்நுட்ப மையத்தில் பணியாற்றி வருகிறார். அத்துடன், இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவியல் பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். மார்ச் 2015 இல் பாபாசி என்ற அமைப்பினரால் 'சிறந்த குழந்தைகள் அறிவியல் எழுத்தாளர் விருது 2015' வழங்கப்பட்டது. தமிழில் 'வளரும் அறிவியல்' என்ற காலாண்டு இதழின் ஆசிரியர் ஆவார். இவரது வாழ்க்கைப்பயணத்தைப் பற்றி, சிகரத்தை நோக்கி இ. கே. தி. சிவகுமார் என்ற தமிழ் நூலிலும், "A Scientist On a Social Mission" என்ற ஆங்கில நூலிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் சமுதாயப் பணிகள்[தொகு]

இவர் து. கோ. வைணவக் கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் படிப்பை முடித்து, குருநானக் கல்லூரியில் வேதியியலில் முதுகலை முடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் முடித்தார். இந்தியாவின் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் 2001 ஆம் ஆண்டில் வேதியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

 • ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிட மற்றும் மாற்றுத் திறனாளர் வாழ்வு மேம்படும் வகையில் கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ரோ) நல உதவி அறக்கட்டளையை 2007ல் துவக்கி எண்ணற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விச் சேவையை செய்து வருகிறார்.
 • மேலும் இ. எஸ். ஆர் பவுண்டேஷன் மூலம் அறிவியல் வளர்ச்சி மேம்பட வழிவகுக்கும் பணிகளை செய்து வருகிறார்.
 • பன்னாட்டு அளவில் பதிவு எண் பெற்ற தமிழில் வெளிவரும் வளரும் அறிவியல் இதழின் ஆசிரியர்.
 • தமிழுக்கு பெருமை சேர்க்கும் 1140 பக்கங்கள் கொண்ட உலகத் தமிழர் கலைக் களஞ்சியம் என்ற நூலின் பதிப்பு ஆசிரியர்.

தொழில்[தொகு]

1991 இல் முதுகலைப் பட்டம் முடித்த பின்னர், அவரது முதலில் சென்னை புஷ் போக் ஆலன் இந்தியா நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு நிர்வாகியாகப் பணிக்குச் சேர்ந்தார். பணிபுரியும் போதே, இவர் வேதியியலில் தனது பி.எட் படிப்பை முடித்தார். பின்னர், அமிர்தாஞ்சன் ஹெல்த்கேரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் துறை விஞ்ஞானியாக சிறப்பாக பணியாற்றிய இவரது அறிவியல் ஆய்வுப் பணிகளை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு இந்திய அளவில் "அறிவியல் அறிஞர் - 2008" விருதினை புதுதில்லியில் உள்ள நேசா வழங்கி சிறப்பித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக நேனோ அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் 9 ஆண்டுகளாக பணியாற்றி, தற்போது செராமிக் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பங்கேற்றுள்ளார்.[2]

இவர் வளரும் அறிவியல் இதழின் ஆசிரியராக உள்ளார். சென்னை ஈஎஸ்ஆர் அறக்கட்டளை[3] மற்றும் எஸ்ரோ (ஈஎஸ்ஆர்ஓ) - கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனர் ஆவார். 23 க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் விழிப்புணர்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவர் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்றுப் பல்வேறு அறிவியல் களங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார்.[சான்று தேவை]

பணிகள்[தொகு]

இவர் உலக கல்வி கண்காட்சியின் (WEXPO 2020) ஆலோசகராக உள்ளார். சிவகுமார் அவர்களின் வாழ்வின் பயணத்தை ‘சிகரத்தை நோக்கி இ. கே. தி. சிவகுமார்’ என்ற தமிழ் நூலும், ஒரு ஆங்கில நூலும் (A Scientist On a Social Mission) எடுத்து சொல்கிறது.

எழுதியுள்ள புத்தகங்கள்[தொகு]

 • எலிமெண்ட்ஸ் ஆப் ஸ்பெக்ட்ரோஸ்கோபி
 • கதிரியக்க வேதியியல்
 • எரிபொருள்களின் வேதியியல்
 • மதுவா? மதியா?
 • அறிவியல் அற்புதம்
 • பூமியைக் குளிர்விப்போம்
 • அறிவியலும் ஆன்மீகமும்
 • சுகம் தரும் சுற்றுப்புறம்
 • சுகம் தரும் சுகாதாரம்
 • புகையே வாழ்வின் பகை
 • தடைகளைத் தாண்டிய தம்பி
 • சுற்றுப்புறமே குடும்ப நலம்
 • மனித நலமும் நாட்டின் வலமும்
 • மனித நலனில் அறிவியல்
 • மனித நலனில் நீரின் பங்கு
 • மனித முன்னேற்றத்தில் கல்வி
 • மாமனிதர் மயில்சாமி அண்ணாதுரை
 • இயற்கைச் சீற்றங்களும் பாதுகாப்பு வழிமுறைகளும்

விருதுகள் மற்றும் சாதனைகள்[தொகு]

 • புதுதில்லியில் உள்ள இந்திய வர்த்தக கழகத்தால் 'அன்னை தெரசா விருது'
 • 'பயனெழுத்து படைப்பாளர் விருது'
 • 'டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது'
 • மார்ச் 2015 அன்று பாபாசி வழங்கிய சிறந்த குழந்தைகள் அறிவியல் எழுத்தாளர் விருது 2015
 • ஜப்பான் நாட்டு தூதரால் வழங்கப்பட்ட புகழ்மிக்க 'மீடியா கில்டு விருது' (2010–11)
 • மாற்று திறனாளிகளுக்கான தன்னலமில்லா சேவைகளுக்காக 'சமூக சேவகர் விருது'
 • அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைதி ஆணையம் வழங்கிய 'மிகச்சிறந்த சமூக ஆர்வலர் 2017 விருது'
 • 23க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி 'மிகச்சிறந்த நூலாசிரியர் விருது'
 • தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது[4] .

மேற்கோள்கள்[தொகு]

 1. "வளரும் அறிவியல்". www.valarumariviyal.com. 2018-07-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 2. "E.K.T. Sivakumar's research works | Anna University, Chennai, Chennai and other places". ResearchGate. 2018-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Educational and Social Research Organisation – A Charitable Trust". www.esro.in. 2018-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Professor gets Lifetime Achievement award". The Hindu. 14 July 2012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/education/professor-gets-lifetime-achievement-award/article3639355.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

 1. Advances in Heterocyclic Chemistry. Academic Press. 21 May 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780128155387. https://books.google.com/?id=kIFcDwAAQBAJ&pg=PA252&lpg=PA252&dq=ekt+sivakumar#v=onepage&q=ekt%20sivakumar&f=false. 
 2. Nanomaterials for Green Energy. Elsevier. 18 April 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780128137321. https://books.google.com/?id=6aRBDwAAQBAJ&pg=PA266&lpg=PA266&dq=ekt+sivakumar#v=onepage&q=ekt%20sivakumar&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._கே._தி._சிவகுமார்&oldid=3631201" இருந்து மீள்விக்கப்பட்டது