இ. எம். ஜி. யாதவர் மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி
முகவரி
புதுநத்தம் சாலை, திருப்பாலை
மதுரை, இந்தியா, தமிழ் நாடு, 625014
தகவல்
வகைதன்னாட்சிக் கல்லூரி
குறிக்கோள்மகளிர் அறிவு, குடும்ப உயர்வு
தொடக்கம்1974
நிறுவனர்இ.எம். கோபாலகிருஷ்ண கோன்
இயக்குனர்திருமதி வி. புஷ்பலதா,[1]
முதல்வர்முனைவர் ஆர்.பூவழகி
Campus size15 ஏக்கர்கள் (61,000 m2)
Accreditationஎன்.ஏ.ஏ.சி
USNWR ranking"A" தரம்
இணையம்

இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி மதுரை திருப்பாலையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியாகும். திருப்பாலை நத்தம் சாலையில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. "மகளிர் அறிவு, குடும்ப உயர்வு" என்ற தாரகமந்திரத்துடன் பொருளாதரத்தில் பின்தங்கிய பெண்களின் கல்வியறிவு உயர உதவுகிறது. இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளை வழங்கிறது.

வரலாறு[தொகு]

1974ல் இ.எம். கோபாலகிருஷ்ண கோன் என்பவரால் தொடங்கப்பட்டு, இ.எம்.ஜி.சௌந்தர ராஜன் என்பவரின் நிர்வாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாதவர் சமுதாயம் மட்டும் அல்லாது பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏனையோரும் பயன்படும் விதத்தில் கல்விப் பணியைத் தொடங்கியது. ஆரம்பத்தில் மதுரை தல்லாகுளத்தில் இ.எம்.ஜி. கல்யாண மண்டபத்தில் பி.யு.சி(Pre-University courses) வகுப்புகளைத் தொடங்கியது. பின்னர் 1980ல் தற்போதைய திருப்பாலை வளாகத்திற்கு மாறி கல்லூரி பாடங்களை பயிற்றுவிக்கத் தொடங்கியது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. கல்லூரி நிர்வாகத்தினர்
  2. "கல்லூரி வரலாறு". மூல முகவரியிலிருந்து 2012-01-21 அன்று பரணிடப்பட்டது.