உள்ளடக்கத்துக்குச் செல்

இ. எம். சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இ. எம். சுப்பிரமணியம்
பிறப்பு1947/1948
இந்தியா
இறப்பு23 ஏப்ரல் 2015
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)தாள இசைக் கலைஞர்
இசைக்கருவி(கள்)கடம்

இ. எம். சுப்பிரமணியம் (E. M. Subramaniam, இறப்பு 23 ஏப்ரல் 2015) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக பாரம்பரிய தாள இசைக் கலைஞர் ஆவார். சுப்பிரமணியம் தன் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் கடம் வாசிக்க பயிற்சி பெற்றார். இவர் பாலக்காடு மணி ஐயர், உமையாள்புரம் கே. சிவராமன், டி. கே. மூர்த்தி போன்ற மிருதங்கக் கலைஞர்கள் மற்றும் அல்லா ரக்கா கான், கிஷன் மகாராஜ், ஜாகிர் உசேன் போன்ற தபேலாக் கலைஞர்கள் உட்பட பல முன்னணி தாள இசைக் கலைஞர்களுக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ளார். 40 ஆண்டுகளாக இவர் அகில இந்திய வானொலியின் 'ஏ' தர கடக் கலைஞராக இருந்து வந்தார். சுப்பிரமணியத்திற்கு 2000 ஆம் ஆண்டில் "கலைமாமணி" பட்டம் வழங்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டில் கடத்திற்கான சங்கீத நாடக அகாதமி விருதும் வழங்கப்பட்டது. இவரது வாசிப்பு பாணி சிறந்த ஒலித் தரத்துடன் கச்சிதமாக இருக்கும்.[1] இ. எம். சுப்பிரமணியம் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் (அடையாறு) பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2025 ஏப்ரல் 23 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sumathi, Saigan Connection. "Review - The Sangeet Natak Akademi Awards for 2010 - 2011". Narthaki.com. Retrieved 2012-03-16.
  2. Special Correspondent. "Ghatam exponent dead". The Hindu. {{cite web}}: |author= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._எம்._சுப்பிரமணியம்&oldid=4444063" இலிருந்து மீள்விக்கப்பட்டது