இஸ்லாமும் சூழலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஃபதுல்லாஹ்


அல்லாஹ் மனிதனை உயர்ந்த சிருக்ஷ்டியாகப் படைத்து பகுத்தறிவை அவனுக்கு வழங்கி அவன் வழிதவறிச் சென்று விடக் கூடாது என்பதற்காக சிறந்ததொரு வாழ்க்கை நெறியையும் அவனுக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அவன் இந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற போது மனிதனின் சமுக.பௌதீக வாழ்விலோ பிரபஞ்சத்திலோ எத்தகு பிரச்சினைகளும் குழப்பங்களும் தோன்றாது.மாறாக அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஒரு வாழ்வே நிலைபெறும்.


இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரியும் பரஸ்பரம் ஒன்றோடொன்று இனணந்து செயற்படுகின்றது.மனிதனும் அவனது வாழ்வும் இந்த இயற்கையோடு பின்னிப் பினைக்கப்பட்டே காணப்படுகின்றது.அவனால் ஒரு கணப்பொழுதும் இத​னை விட்டு விலகி வாழ முடியாது. சூழல் பல இயற்கைச் சமநிலைகளால் இயங்குகிறது. ஒட்சிசன் வட்டம், காபன் வட்டம், நைதரசன் வட்டம் போன்றன இவற்றுள் சிலவாகும்.


உணவுச் சங்கிலி ஒழுங்கு, சக்தி வட்டம் என்பனவும் இயற்கையின் அற்புதங்களாகும் .இந்த சமநிவர வட்டங்களில் ஏற்படும் சிறியதொரு மாற்றமும் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நன்கு திட்டமிடப்பட்ட மிக நுனுக்கமான அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். சூழலின் பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக மனிதன் இருக்கிறான்.


18ம்நூற்றாண்டு வரை மனிதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் வரும் என்ற உண்மை உணரப்பட்டிருக்கவில்லை.எனினும் ஆரம்ப காலங்களில் (இகொலஜிஸ்ட்) சூழலியலாளர்களால் மாத்திரம் உணரப்பட்டு வந்த இந்த சுற்றாடற் பிரச்சிரனகள் இன்று சாதாரண பொது மக்களாலும் பேசப்பட்டு வரும் முக்கிய தனலப்பாக மாறியிறுக்கிறது.


மனிதன் எப்படி இவ்வுலகொடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற உண்மைளை உணர்ந்து கொள்ளாததனாலேயே சூழற் பிரச்சினைகள் தனி மனித வாழ்விலும் பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்து விட்டன,


சூழற் பிரச்சினைகள் இன்று மிக இராட்சத அளவில் பல்கிப் பெருக மனிதன் தான் காரணமாக உள்ளான்.பொறுப்பு மிக்க சூழற் தலைவன் எனும் யதார்த்தத்தை மறந்து சுய நல நோக்கில் தனது அறிவியல் முன்னேற்றத்தையும் தொழினுட்ப விருத்தியையும் மாத்திரம் கருத்தல் கொண்டு வாழ்வதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.


இஸ்லாம் சூழலை மனிதனது எதிரியாக நோக்கவில்லை. அது மானிட வாழ்விற்கு உயிர் நாடிகளான நீர்.காற்று உட்பட கோடிக்கணக்கான மரங்கள். செடிகள். கொடிகள். மலைத்தொடர்கள் மேட்டு நிலங்கள். சமவெளிகள் பள்ளத்தாக்குகள். பசுமையான புல் நிலங்கள். கண்கவர் நீர் வீழ்ச்சிகள். வண்ண வண்ண பூச்சி இனங்கள். பறவையினங்கள். விலங்கினங்கைகள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே நோக்குகின்றதது. இக் கருத்தை பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது


. "படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்.அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்." (புஹாரி).''


இரு முறை தாகித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் புகட்டிய பெண் ஒருத்திக்கு சுவர்க்கம் க்டைக்கும் எனவும் ஒரு பூனையை அறையில் போட்டு பூட்டி அதற்கு உணவொ நீரோ புகட்டாமல் சித்திரவதை செய்தமையால் மற்றுமொரு பெண்ணுக்கு நரகம் கிடைக்கும் எனவும் நபியவர்கள் கூறினார்கள்.இச் சம்பவத்தின் மூலம் இஸ்லாம் ஜீவகாருண்யத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளதுஎள்பதையும்மனிதன் மன்தர்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரிணங்களுக்கும் பணிவிடை செய்யக் கடமைப்பட்டுள்ளான் என்ற உண்மையையும் தெளிவுபடுத்துகிறது.


இயற்கையின் கட்டுக்கோப்பும் ஒருமைப்பாடும் அதனைப் பேண வேண்டியதன் அவசியமும் திருக்குர்ஆனிலே வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


  • அளவற்ற அருளாளன்: இந்தக் குர்ஆனை அவன் தான் கற்றுத் தந்தான்.அவனே மனிதனைப் படைத்தான்.அவனுக்கு பெச்சையும் விளக்கத்தையும் கற்றுக்கொடுத்தான்.சூரியனும் சந்திரனும் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டகணக்குப் படியே இருக்கின்றன.செடி கொடிகளும் மரங்களும் அவனுக்கு சுஜூது செய்கின்றன.வானதுதைப் படைத்து அதனை அவன் உயர்த்தினான்.தராசையும் நீதத்தையும் அவன் அமைத்தான். தராசில் நீங்கள் வரம்பு மீறாமல் இருப்பதற்காக நிலுவையை நீதியாக நிலைபெறச் செய்யுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்....(அல் குர்ஆன் 55:1-2)''


  • "வானங்கள் பூமியில் உள்ளவையும் இறக்கைகளை விரித்த நிலையில் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன".(அல் குர்ஆன்18-41)''


  • "அன்றியும் தாவூதுடன் சேர்ந்து தஸ்பீஹ் செய்ய (துதிக்க) மலைகளையும் பறவைகளையும் நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்." (அல் குர்ஆன் 17-19)'''


இவ் வசனங்கள் இயற்கை வெறும் சடமல்ல: அது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவதுடன் அல்லாஹ்வின் ஆற்றல்களையும் .அத்தாட்சிகளையும் காட்டவல்லது.என்பதையும் விளக்குவதாக உள்ளன.


உசாத்துனைகள்[தொகு]

  • www.iththanislam.com
  • அல்குர்ஆன்
  • ஸஹ்வா-இஸ்லாமிய தின வெளீயீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமும்_சூழலும்&oldid=396358" இருந்து மீள்விக்கப்பட்டது