இஸ்ரேலின் நாளைய பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்ரேலின் நாளைக்கான பெண்கள் ( Women for Israel's Tomorrow ) அல்லது பச்சை நிறத்தில் பெண்கள் என்பது ஒசுலோ உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ரூத் மற்றும் மைக்கேல் மேட்டர் ஆகிய இருவராலும் 1993 இல் நிறுவப்பட்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு இஸ்ரேலிய இலாப நோக்கற்ற அமைப்பாகும் . இந்த அமைப்பு தற்போது நாடியா மாதர் மற்றும் எகிதித் கட்சோவர் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது. [1]

அமைப்பு[தொகு]

1993 இல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, பெண்கள் மற்றும் ஆண்கள், மத மற்றும் மத சார்பற்ற ஒரு அடிமட்ட பெண்ணிய இயக்கமாகும். " இசுரேல் தேசத்தின் மீதான அவர்களின் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தில் ஒன்றுபடுவது" அவர்களின் முழக்கமாகும். இது எந்த அரசியல் கட்சியுடனும் இணைக்கப்படவில்லை. இது இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. [2]

நடவடிக்கை[தொகு]

ஒசுலோ உடன்படிக்கைக்கு எதிராக நடைபெற்ற பொது ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்வலர்கள் அணிந்திருந்த பச்சை தொப்பிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கத்திற்கு பச்சை நிறத்தில் பெண்கள் என்ற பயர் வந்தது. பச்சைத் தொப்பிகள், பசுமைக் கோட்டை மீட்டெடுப்பதற்கு குழுவின் எதிர்ப்பைக் குறிக்கிறது. "இஸ்ரேல் மக்களுக்கான இஸ்ரேல் நிலம்" என்பது ஒரு அதிகாரப்பூர்வமற்ற பொன்மொழியாகும். இது இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. [2]

"எங்கள் கடவுள் வழங்கிய விவிலிய தாயகத்தைப் பாதுகாப்பதற்காக இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. யூத மக்களின் எதிர்காலத்திற்கு இஸ்ரேல் தேசத்தின் மையப் பாத்திரத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். 'இஸ்ரேல் நிலம் இஸ்ரேல் மக்களுக்கே சொந்தம்' என்பது எங்கள் குறிக்கோள்" என இவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] இக்குழுவிலுள்ள பெண்கள் இரு-மாநில தீர்வை எதிர்க்கிறார்கள். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட நிலத்தை திரும்பப் ஒப்படைப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். மேலும் அந்த பிரதேசங்களில் இஸ்ரேலிய குடியேற்றத்தை ஆதரிக்கிறார்கள். அது தனது தேசத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். 2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறுவதையும் எதிர்த்தனர்.

இதனையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women In Green". www.womeningreen.org. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21.
  2. 2.0 2.1 2.2 "Women In Green". www.womeningreen.org. பார்க்கப்பட்ட நாள் 2016-07-21."Women In Green". www.womeningreen.org. Retrieved 2016-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்ரேலின்_நாளைய_பெண்கள்&oldid=3674604" இலிருந்து மீள்விக்கப்பட்டது