உள்ளடக்கத்துக்குச் செல்

இஸ்டெபனி குவோலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டெபனி குவோலக்
பிறப்புஸ்டெபனி லூயிஸ் குவோலக்
(1923-07-31)சூலை 31, 1923
நியூ கிங்ஸ்டன், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 18, 2014(2014-06-18) (அகவை 90)
வில்மிங்டன், டெலவெயர், ஐக்கிய அமெரிககா
வாழிடம்வில்மிங்டன், டெலவெயர்
தேசியம்அமெரிக்கர்
துறைகரிம வேதியியல்
பணியிடங்கள்டியூபாண்ட்
கல்வி கற்ற இடங்கள்கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகெவ்லார் இழை
விருதுகள்டியூபாண்ட் நிறுவன லெவாய்சியர் பதக்கம்(1995)
அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம்
பெர்கின் பதக்கம் (1997)
பிராங்க்ளின் நிறுவனப் பதக்கம்

ஸ்டெபனி லூயிஸ் குவோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 – ஜூன் 18, 2014): போலந்து வம்சாவளி அமெரிக்க வேதியியலாளர் ஆவார். அமெரிக்காவின் டியூபாண்ட் நிறுவனத்துடன் நாற்பது வருடங்களுக்கு மேல் இணைந்திருந்தவர்.[1] முதன் முதலாக செயற்கை இழை குடும்பத்தில் ஒன்றான, அபூர்வமான வலிமையும் விறைப்புத் தன்மையும் கொண்ட, பாலி-பாராபினீலின் டெரப்தாலமைட் கண்டறிந்ததற்காக போற்றப்படுகிறார். இது கெவ்லார் இழை எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.[1][2] குவோலக் இதனைக் கண்டுபிடித்ததனால் சிறந்த தொழில்நுட்பச் சதனைக்கான, டியூபாண்ட் நிறுவத்தின் லெவாய்சியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிப்ரவரி 2015 இல் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒரே பெண் ஊழியர் குவோலக் ஆவர்.[3] 1995 இல் இவர் அமெரிக்காவின் தேசியக் கண்டுபிடிப்பாளராக ஹால் ஆஃப் ஃபேமில் இணைத்துக்கொள்ளப்பட்ட நான்காவது பெண்மணியாவார்.[4] குவோலக் பலபடி வேதியியலில் இவர் ஆற்றிய பணிக்காக அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம், தொழில்துறை ஆய்வு நிறுவனத்தின் சாதனைவிருது, பெர்கின் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.[5][6]

இளமையும் கல்வியும்

[தொகு]
வெளி ஒளிதங்கள்
ஸ்டெபனி குவோலக், "ஒருவரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதைப் போன்ற திருப்தியும் மகிழ்ச்சியும் வேறிதிலும் இருப்பதாக நான் கருதவில்லை", அறிவியல் வரலாற்று நிறுவனம்.[1]

குவோலக், போலந்து நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோர்க்கு மகளாக, 1923 இல் பென்சில்வேனியாவின் நியூ கிங்க்ஸ்டன் புறநகர்ப்பகுதியில் பிறந்தார்.[7] இவருடைய பத்தாவது வயதில் இவரின் தந்தை ஜான் குவோலக் இறந்தார்.[7] (போலிய: Jan Chwałek) [8] அவர் ஒரு இயற்கை ஆர்வலராக இருந்தார். தனது தந்தையுடன் பெருவாரியான நேரத்தைச் செலவழித்த குவோலக், இயற்கையை உலகை ஆராயத் தொடங்கினார்.[1] தனது தந்தையிடம் இவருக்கிருந்த அறிவியல் ஆர்வத்தையும் தாயாரான நெல்லி குவோலக்கிடம் தனது ஆடையலங்காரத் துறை விருப்பத்தையும் தெரிவித்தார்.[7][8]

குவோலக், 1946 ஆம் ஆண்டில் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் மார்கரெட் மாரிசன் கார்னிகி கல்லூரியில், வேதியல் பிரிவில் தனது இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.அவர் ஒரு மருத்துவராகத் திட்டமிட்டிருந்தார். மேலும் அவர் மருத்துவ பள்ளியில் சேர்ந்துகொள்ளப் போதுமான நிதியை, வேதியியல் தொடர்புடைய ஏதேனுமொரு துறையில் தற்காலிக வேலையில் இருந்து கொண்டு சம்பாதிக்க முடியும் என்று நம்பினார்.[8]

பணிகள்

[தொகு]

குவோலக்கின் ஆசிரியரான ஹேல் சர்ச் என்பவர் 1946 -இல் நியூயார்க் நகரில் பஃபலோ என்ற இடத்தில் செயல்பட்டு வந்த டியூபாண்ட் நிறுவனத்தில் வேலை செய்ய ஒரு வாய்ப்பை வழங்கினார்.[9] இது இரண்டாம் உலகப்போரின் கரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட ஆண்களினால் ஏற்பட்ட காலிப்பணியிடமாகும்.[10]

மருத்துவம் படிக்க பணம் வேண்டும் என்பதற்காகவே குவோலக், தற்காலிகமாக இந்தப் பணியில் சேர்ந்துகொண்டார். ஆனால் இந்தப் பணியில் சேர்ந்த பின் பணியிலிருந்த ஆர்வம் காரணமாக வேலையில் தொடர விரும்பி, 1950 டெலவெயரில் இருந்த டியூபாண்ட் நிறுவனத்தில் பணியாற்ற வில்மிங்டன் நகருக்குக் குடிபெயர்ந்தார்.[9] இந்த நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றிய பின் அந்நிறுவனத்துடன் இணைந்து கெவ்லார் இழையை உருவாக்கினார்.[11] மற்றெல்லா விருதுகளையும் வாங்குவதற்கு முன்பே முதன்முதலாக அமெரிக்க வேதியல் கழகத்தின் பப்ளிகேஷன் விருதினை 1959 இல் பெற்றார்.[5][12][13] பொதுவாக வகுப்பறைகளில் செய்து காண்பிக்கப்படும், அறை வெப்பநிலையில் ஒரு கண்ணாடிக் குவளையில் நைலான் இழைகளை உற்பத்தி செய்யும் ஒரு சோதனையை,[14] குவோலக் உயர்மூலக்கூறு எடையுள்ள பாலிமைடுகளில் செயல்படுத்திப் பார்த்து வெற்றியடைந்தனர்[15][16] இவருடன் இச்சோதனையில் இணைந்து பணியாற்றியவர்களும் 1985 இல் PBO மற்றும் PBT பாலிமர்களை உற்பத்தி செய்யும் இக்கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற்றார்கள்.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Women in Chemistry – Stephanie Kwolek". Science History Institute. பார்க்கப்பட்ட நாள் June 13, 2013.
  2. Wholly Aromatic Carbocyclic Polycarbonamide Fiber. Original Kevlar patent awarded in 1974 to Stephanie Kwolek.
  3. "Kevlar inventor Stephanie Kwolek dies". BBC News. பார்க்கப்பட்ட நாள் June 21, 2014.
  4. "Citation conferring an Honorary Doctor of Science degree on Stephanie Louise Kwolek". University of Delaware. UDaily. May 31, 2008. Archived from the original on May 24, 2009. பார்க்கப்பட்ட நாள் May 24, 2009.
  5. 5.0 5.1 Bensaude-Vincent, Bernadette (21 March 1998). Stephanie L. Kwolek, Transcript of an Interview Conducted by Bernadette Bensaude-Vincent at Wilmington, Delaware on 21 March 1998 (PDF). Philadelphia: Chemical Heritage Foundation.
  6. "SCI Perkin Medal". Science History Institute. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. 7.0 7.1 7.2 "Stephanie Kwolek". Soylent Communications. Archived from the original on May 24, 2009. பார்க்கப்பட்ட நாள் May 24, 2009.
  8. 8.0 8.1 8.2 "Inventing Modern America: Insight — Stephanie Kwolek:". Lemelson-MIT program. Archived from the original on May 24, 2009. பார்க்கப்பட்ட நாள் May 24, 2009.
  9. 9.0 9.1 "Invent Now". National Inventors Hall of Fame. Archived from the original on May 24, 2009. பார்க்கப்பட்ட நாள் May 24, 2009.
  10. "Stephanie Kwolek, Chemist Who Created Kevlar, Dies At 90." NPR. NPR. Web. 8 Nov. 2015.
  11. "Stephanie Kwolek." Famous Scientists. Web. 8 Nov. 2015.
  12. Ferguson, Raymond C. (4 May 1986). Stephanie Louise Kwolek, Transcript of an Interview Conducted by Raymond C. Ferguson in Sharpley, Delaware on 4 May 1986 (PDF). Philadelphia: Beckman Center for the History of Chemistry.
  13. Rossiter, Margaret W. (1998). Women Scientists in America. Baltimore, Maryland: Johns Hopkins University Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-5711-2. பார்க்கப்பட்ட நாள் May 24, 2009.
  14. "Stephanie Kwolek obituary". The Guardian. 28 June 2014. https://www.theguardian.com/science/2014/jun/26/stephanie-kwolek. 
  15. ["Interfacial polycondensation. II. Fundamentals of polymer formation at liquid interfaces" Morgan, P. W.; Kwolek, S. L.; Journal of Polymer Science, 1959, Vol. XL, 299-327.
  16. [Polyamides from Phenylenediamines and Aliphatic Diacids. Morgan, P. W.; Kwolek, S. L. Macromolecules, 1975, 8 (2), pp 104–111. DOI: 10.1021/ma60044a003]
  17. [PBO and PBT polymers. Sweeny, W.; Kwolek, S. L. Assignee: du Pont de Nemours, E. I., and Co., USA. US 4608427, Aug 26, 1986]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்டெபனி_குவோலக்&oldid=4041334" இலிருந்து மீள்விக்கப்பட்டது