இஸ்டான்லி குப்ரிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இஸ்டான்லி குப்ரிக்கு
KubrickForLook.jpg
Self-Portrait of Kubrick with a Leica III camera, when he worked for Look (from the book "Drama and Shadows").
பிறப்பு ஜூலை 26, 1928
நியூ யார்க் நகரம், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா
இறப்பு மார்ச்சு 7, 1999(1999-03-07) (அகவை 70)
ஹார்ப்பெண்டென், ஹேர்ட்போர்ட்சயர், இங்கிலாந்து
தொழில் திரைப்படம் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படப்பிடிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 1951 — 1999
துணைவர் டோபா மெட்ஸ் (1948–1951) (மணமுறிவு)
ருத் சோபோட்கா (1954–1957) (மணமுறிவு)
கிறிஸ்ட்டியன் ஹார்லன் (1958-1999) (அவரது இறப்பு)
பிள்ளைகள் அன்யா குப்பிரிக்கு (b.1959)
விவியன் குப்பிரிக்கு (b.1960)

இஸ்டான்லி குப்ரிக்கு (Stanley Kubrick - ஜூலை 26, 1928 – மார்ச் 7, 1999), ஒரு செல்வாக்குப் பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மிகவும் புகழ் பெற்றனவும், சில சமயங்களில் சர்ச்சைக்கு உரியனவுமான பல படங்களை இயக்கியுள்ளார். படங்களுக்கான கருப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் கவனம், மெதுவாக வேலை செய்தல், அவரது ஆக்கங்களின் பல்வகைத் தன்மை, தொழில்நுட்பத் துல்லியம் என்பவை இவருடைய குறிப்பிடத்தக்க இயல்புகள்.

இளமைக்காலம்[தொகு]

இவர் மான்ஹட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1928 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையான ஜாக்கஸ் லியொனார்டு குப்பிரிக்குக்கும், தாய், கெர்ட்ரூட் என்பவருக்கும் பிறந்த இரண்டு பிள்ளைகளில் இஸ்டான்லி குப்பிரிக்கு மூத்தவர். இவரது தங்கை பார்பரா 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். யூத, ஆஸ்திரோ - ருமேனிய, போலிய இனக்கலப்புக் கொண்ட ஜாக்கஸ் குப்பிரிக்கு, ஒரு மருத்துவர். இஸ்டான்லி பிறந்தபோது இவர்கள் குடும்பம் புரோங்க்ஸ் என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தனர்.

12 ஆவது வயதில் இஸ்டான்லிக்கு அவரது தந்தை சதுரங்க விளையாட்டுக் கற்றுக் கொடுத்தார். வாழ்நாள் முழுவதும் இஸ்டான்லி சதுரங்கத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். 13 ஆவது வயதில் இவரது தந்தையார் வாங்கிக் கொடுத்த ஒளிப்படக்கருவி அவருக்கு படம்பிடித்தலில் ஆர்வத்தை உண்டாக்கியது. இளம் வயதில் இஸ்டான்லி ஜாஸ் இசையில் ஆர்வம் கொண்டிருந்ததோடு, தோல் கருவி இசைப்பதிலும் சிலகாலம் ஈடுபட்டிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்டான்லி_குப்ரிக்கு&oldid=2232949" இருந்து மீள்விக்கப்பட்டது