இசநாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இஸநகி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
天瓊を以て滄海を探るの図.கையில் ஈட்டியுடன் இசநாகி

இசநகி (Izanagi) சப்பானியத் தொன்மவியல் மற்றும் சின்டோ மதத்தின் படி ஏழாவது தெய்வீக பரம்பரையை சார்ந்த ஒரு ஆண் தெய்வம் ஆவார். இவருடைய பெயருக்கு கொஜிக்கியில் அழைப்பவன் என பொருள் கூறப்பட்டுள்ளது.

இசநகியும், இவரது மனைவி இசநமியும் பலவேறு தீவுகள், தெய்வங்கள் மற்றும் சப்பானின் முன்னோர்களை பெற்றெடுத்தனர். இசநமி இறந்த பிறகு யொமி உலகில் இருந்து இசநாமியை மீட்க முற்பட்டு தோற்றார். யொமியில் இருந்து திரும்பியவுடன் தூய்மைபடுத்தும் சடங்குகளை மேற்கொண்டார். அவ்வாறு மேற்கொள்ளும் போது, அமதெரசு என்ற சூரிய தேவதை இடது கண்ணிலிருந்தும், சுக்குயோமி என்ற சந்திர தேவன் வலது கண்ணிலிருந்து, சுசானவோ என்ற புயல் தெய்வம் மூக்கிலிருந்தும் தோன்றினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசநாகி&oldid=2098652" இருந்து மீள்விக்கப்பட்டது