உள்ளடக்கத்துக்குச் செல்

இஷேர் ஜட்ஜ் அலுவாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஷேர் ஜட்ஜ் அலுவாலியா
பிறப்பு1 அக்டோபர் 1945
இறப்பு26 செப்டம்பர் 2020 (வயது 74)[1]
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தாப் பல்கலைக்கழகம் (இளங்கலை.); தில்லி பொருளியல் பள்ளி (முதுகலை); மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (முனைவர்)
வாழ்க்கைத்
துணை
மான்டெக் சிங் அலுவாலியா
பிள்ளைகள்பவன், அமன் அலுவாலியா
விருதுகள்பத்ம பூஷண் (2009)

இஷேர் ஜட்ஜ் அலுவாலியா (1 அக்டோபர் 1945 – 26 செப்டம்பர் 2020) ஓர் இந்தியப் பொருளியலாளராகவும், பொதுக் கொள்கை ஆராய்ச்சியாளராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர் ஆவார்.[2] சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்-ICRIER) ஆளுநர் குழுவின் தலைவர் பெருமையைப் பெற்றவர். சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ) தலைவராகவும், இந்திய அரசின் நகர்ப்புற உள்கட்டமைப்புச் சேவைகள் குறித்த உயர்மட்டக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.[3] 2009ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய குடிமைப் பட்டமான பத்ம பூஷண் விருதை இவர் பெற்றார்.[4][5]

அலுவாலியாவின் ஆராய்ச்சிப் பணி, பொதுக் கொள்கை, நகர்ப்புற உள்கட்டமைப்பு, மற்றும் நிலையான நகரமயமாக்கல் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. பொருளியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையில் இவர் பெண்களுக்கு உயர்ந்த இடம் பெற முட்டிய பல "கண்ணாடி உச்சவரம்புகளை" உடைத்தவராகக் கருதப்படுகிறார்.

கல்வி

[தொகு]

அலுவாலியா, கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டமும், தில்லி பொருளியல் பள்ளியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[6] மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பொருளியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[7] அமெரிக்கப் பொருளியலாளரான பால் சாமுவல்சன் மற்றும் இசுரேலிய-அமெரிக்கப் பொருளியலாளரான ஸ்டேன்லி பிஷர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ்,[8] 1951–1973 காலகட்டத்தில் இந்திய பெருநிலைப் பொருளியல் மற்றும் உற்பத்தித் திறன் குறித்து இவரது ஆராய்ச்சி அமைந்திருந்தது.[9]

தொழில் வாழ்க்கை

[தொகு]

அலுவாலியா தனது தொழில் வாழ்க்கையை வாஷிங்டன் டி.சி-யில் உள்ள பன்னாட்டுச் செலாவணி நிதியத்தில் (ஐ.எம்.எஃப்) கொள்கைப் பொருளியலாளராகத் தொடங்கினார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்பினார். தொழில் வளர்ச்சி, உற்பத்தித் திறன் ஆகியன குறித்த இவரது ஆராய்ச்சி பெரும் கவனத்தைப் பெற்றது. கொள்கை ஆராய்ச்சி மையத்தில் (சென்டர் ஆஃப் பாலிசி ரிசர்ச்) பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1989 முதல் 1991 வரையில் இன்டஸ்ட்ரியல் க்ரோத் இன் இந்தியா:ஸ்டாக்னேசன் சின்ஸ் மிட் சிக்ஸ்டீஸ் மற்றும் புரடக்டிவிடி அண்ட் க்ரோத் இன் இந்தியன் மானுஃபேக்சரிங் ஆகிய இரு நூல்களை எழுதினார்.[10]

ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர்-இல் 1998 முதல் 2002 வரை இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றிய இவர், பின்னர் அந்நிறுவனத்தின் ஆளுநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய அரசின் தேசிய உற்பத்தித் திறன் போட்டித்திறன் கவுன்சில் உறுப்பினராகவும், சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் நம்பிக்கையாளர் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.[11]

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் புது தில்லி அலுவலகத் திறப்பு விழாவில், டாக்டர் அலுவாலியா முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குடன். (புது தில்லி, மார்ச் 2005)
நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவைகளுக்கான முதலீட்டுத் தேவைகளை மதிப்பிடுவதற்கான உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை, தலைவர் டாக்டர் அலுவாலியா அப்போதைய அமைச்சர் கமல்நாத்திடம் சமர்ப்பித்தல் (புது தில்லி, மார்ச் 2011)

2008ஆம் ஆண்டில், இந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஆகியவற்றால் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் குறித்த உயர் அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[12][13] வாஷிங்டன் டிசி-யில் உள்ள ஐ.எஃப்.பி.ஆர்.ஐ-யின் நம்பிக்கையாளர் குழு உறுப்பினராக 2000 முதலும்,[14] அதன் தலைவராக 2003 முதல் 2006 வரையும் பணியாற்றினார். ஆசிய வளர்ச்சி வங்கியின் பங்கு குறித்த அறிக்கையை 2006–2007இல் தயாரித்த முக்கிய நபர்கள் குழுவின் உறுப்பினராகவும், இந்தியா-ஆசியான் தொடர்பான முக்கிய நபர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2005 முதல் 2007 வரை பஞ்சாப் மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[15]

நூல்கள்

[தொகு]
  • இன்டஸ்ட்ரியல் க்ரோத் இன் இந்தியா:ஸ்டாக்னேசன் சின்ஸ் மிட்1960 (1989)
  • புரடக்டிவிடி அண்ட் க்ரோத் இன் இந்தியன் மானுஃபேக்சரிங் (1991)
  • இந்தியாஸ் எகோனொமிக் ரிஃபார்ம்ஸ் அண்ட் டெவலப்மென்ட்:எசேஸ் ஃபார் மன்மோகன் சிங் (2012, இயன் லிட்டிலுடன் இணைந்து)
  • அர்பனைசேசன் இன் இந்தியா : சேலஞ்சஸ், ஆபர்சுனடீஸ் அண்ட் தி வே ஃபார்வர்ட் (2014)
  • ட்ரான்ஸ்ஃபார்மிங் அவர் சிடீஸ் : போஸ்ட் கார்ட் ஆஃப் சேஞ்ச் (2014)
  • ப்ரேகிங் த்ரோ - எ மெமோயிர் (2020) — இவரது சுயசரிதை. பொருளியல் மற்றும் பொதுக் கொள்கைத் துறையில் இவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்

[தொகு]

இஷேர், சக பொருளியலாளரும் இந்தியத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டெக் சிங் அலுவாலியாவை மணந்தார். இவர்களுக்கு பவன் மற்றும் அமன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.[16]

10 மாதங்கள் மூளைப் புற்றுநோயுடன் போராடிய பிறகு, 2020 செப்டம்பர் 26ஆம் தேதி, தனது 74ஆவது வயதில் நான்காம் நிலை கிளியோபிளாஸ்டோமா (grade IV glioblastoma) காரணமாக இவர் இறந்தார். தனது மறைவுக்கு ஒரு மாதம் முன்பு, உடல்நலக் காரணங்களால் ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.[17]

விருதுகள்

[தொகு]
  • 2009: பத்ம பூஷண் — இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய குடிமைப் பட்டம் (இலக்கியம் மற்றும் கல்விப் பிரிவில்).[18]
  • 1987: பதேஜா நினைவு விருது — இந்தியப் பொருளியல் குறித்த சிறந்த நூலுக்கான விருது (இன்டஸ்ட்ரியல் க்ரோத் இன் இந்தியா:ஸ்டாக்னேசன் சின்ஸ் மிட் 1960-ற்காக).[19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Economist Isher Judge Ahluwalia passes away after 10-month battle with brain cancer". The Indian Express. 26 September 2020. Archived from the original on 27 September 2020. Retrieved 26 September 2020.
  2. "Isher Judge Ahluwalia is new Chairperson at ICRIER". @businessline. 12 August 2005. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  3. "Board Of Governors | Think tank | ICRIER". icrier.org. Archived from the original on 24 September 2018. Retrieved 24 September 2018.
  4. Mishra, Asit Ranjan (26 September 2020). "Noted economist Isher Judge Ahluwalia, who broke many glass ceilings, dies at 74". mint (in ஆங்கிலம்). Archived from the original on 27 September 2020. Retrieved 26 September 2020.
  5. "Renowned economist Isher Judge Ahluwalia dies aged 74" (in en-IN). The Hindu. 26 September 2020 இம் மூலத்தில் இருந்து 27 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200927023628/https://www.thehindu.com/news/national/renowned-economist-isher-judge-ahluwalia-dies-aged-74/article32702143.ece.
  6. "India and MIT: A Conversation About the Future". The Tech. Archived from the original on 18 September 2019. Retrieved 27 September 2020.
  7. Sitapati, Vinay (26 September 2020). "How Isher Judge Ahluwalia broke into the male-dominated, Anglicised world of economists". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  8. "MIT Libraries' catalog - Barton - Full Catalog - Full Record". library.mit.edu. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  9. Mishra, Asit Ranjan (26 September 2020). "Noted economist Isher Judge Ahluwalia, who broke many glass ceilings, dies at 74". mint (in ஆங்கிலம்). Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  10. "Economist Isher Judge Ahluwalia passes away after 10-month battle with brain cancer". The Indian Express (in ஆங்கிலம்). 26 September 2020. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  11. "Noted Economist Dr Isher Judge Ahluwalia, Padma Bhushan, Dies". NDTV.com. Archived from the original on 26 September 2020. Retrieved 27 September 2020.
  12. "India rejigs manufacturing competitiveness council". CFO India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  13. Ahluwalia, Isher Judge (2011). "High Powered Expert Committee (HPEC) for Estimating the Investment Requirements for Urban Infrastructure Services" (PDF). Archived (PDF) from the original on 26 November 2018.
  14. "Isher Judge Ahluwalia". www.asiaglobaldialogue.hku.hk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  15. "Eminent Persons See New Paradigm for ADB in Transformed Asia". Asian Development Bank (in ஆங்கிலம்). 2 April 2007. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  16. "Team Manmohan recalls its trusted hand: Montek". archive.indianexpress.com. 11 June 2004. Archived from the original on 27 September 2020. Retrieved 27 September 2020.
  17. Dhamsana, Indivsal (26 September 2020). "Economist Isher Judge Ahluwalia passes away after battle with brain cancer" இம் மூலத்தில் இருந்து 27 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200927023701/https://www.business-standard.com/article/current-affairs/economist-isher-judge-ahluwalia-passes-away-after-battle-with-brain-cancer-120092600473_1.html.
  18. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.
  19. Smith, Stephen (27 September 1988). "Industrial Growth in India: Stagnation since the mid-sixties: Isher Judge Ahluwalia, (Oxford University Press, Delhi, 1985) pp. xxii + 235". Journal of Development Economics 28 (3): 397–401. doi:10.1016/0304-3878(88)90008-9. https://econpapers.repec.org/article/eeedeveco/v_3a28_3ay_3a1988_3ai_3a3_3ap_3a397-401.htm. பார்த்த நாள்: 27 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷேர்_ஜட்ஜ்_அலுவாலியா&oldid=4594683" இலிருந்து மீள்விக்கப்பட்டது