இவான் ரசேல் வூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவான் ரசேல் வூட்
பிறப்புசெப்டம்பர் 7, 1987 (1987-09-07) (அகவை 36)
ராலீ
வட கரொலைனா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
விளம்பர நடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜேமி பெல்
(தி. 2012; separated 2014)
பிள்ளைகள்1

இவான் ரசேல் வூட் (Evan Rachel Wood, பிறப்பு: செப்டம்பர் 7, 1987) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பாடகி, குரல் நடிகை, விளம்பர நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் 1987ஆம் ஆண்டின் செப்டம்பர் ஏழாம் நாளில் அமெரிக்காவின் வட கரொலைனா மாகாணத்தின் ராலீயில் பிறந்தார். இவரின் தந்தையான ஐரா: டேவிட் வூட் III, திரைப்பட நடிகர், பாடகர் நாடக இயக்குனர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவரின் தாய் சாரா லின் மூரே, திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர் எனப் பன்முகம் கொண்டவர். இவருக்கு ஐரா: டேவிட் வூட் IV என்ற ஒரு சகோதரன் உண்டு. இவரும் திரைப்பட நடிகர் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_ரசேல்_வூட்&oldid=3859716" இலிருந்து மீள்விக்கப்பட்டது