இவானோவ் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவானோவ் வினை (Ivanov reaction) என்பது அரைல் அசிட்டிக் அமிலங்களினுடைய (இவானோவ் வினையாக்கிகள்) ஈரெதிர்மின் அயனிகள் (என்டையோனேட்டுகள்) மின்னணு கவரிகள், முதனிலை கார்பனைல் சேர்மங்கள் அல்லது ஐசோசயனேட்டுகள்[1][2][3][4] போன்றவற்றுடன் புரியும் வேதி வினையைக் குறிக்கிறது. பல்கேரியாவின் கரிமவேதியியலரும், கல்வியாளருமான திமிடர் இவானோவ் இவ்வினையைக் கண்டறிந்ததால் இப்பெயர் பெற்றது.

இவானோவ் வினை

இவானோவ் வினையாக்கிகள் எனப்படும் அரைல் அசிட்டிக் அமிலங்களின் ஈரெதிர்மின் அயனிகள் ஆல்டிகைடுகள், கீட்டோன்கள், ஐசோசயனேட்டுகள் மற்றும் ஆல்க்கைல் ஆலைடுகள் உள்ளிட்ட பல மின்னணு கவரிகளுடன் வினைபுரிகின்றன[5]. உருவாகும் வினைவிளைபொருள் தன்முனைவாக எப்பொழுதும் டிகார்பாக்சிலெட்டாக இருப்பதில்லை. மாறாக சில வினையாக்கிகள் தோன்றவும் வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது.

இவானோவ் வினையானது சிம்மெர்மான் – டிராக்சுலர் மாதிரி மாற்றத்தின் இடைநிலை வழியாக நி8கழ்கிறது[6].. வினையின் வேதிவினை வீதமும், வினை இயக்கமும் முறையாக ஆராயப்பட்டுள்ளது[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. ^ Ivanov, D.; Spassoff, A. Bull. Soc. Chim. France 1931, 49, 19 & 375.
  2. ^ Ivanov, D. et al. Bull. Soc. Chim. France 1932, 51, 1321 & 1325 & 1331.
  3. ^ Blagoev, B.; Ivanov, D. Synthesis 1970, 615–627. (Review)
  4. ^ Ivanov, D. Synthesis 1975, 83–98. (Review)
  5. ^ Hauser, C. R.; Dunnavant, W. R. (1960). "α,β-Diphenylpropionic acid". Organic Syntheses 40: 38. http://www.orgsyn.org/orgsyn/prep.asp?prep=cv5p0526. 
  6. ^ Zimmerman, H. E.; Traxler, M. D. (1957). "The Stereochemistry of the Ivanov and Reformatsky Reactions". Journal of the American Chemical Society 79 (8): 1920–1923. doi:10.1021/ja01565a041. 
  7. ^ Toullec, J.; Mladenova, M.; Gaudemar-Bardone, F.; Blagoev, B. J. Org. Chem. 1985, 50, 2563..
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவானோவ்_வினை&oldid=2747886" இருந்து மீள்விக்கப்பட்டது