இழிவான போர் (அர்ஜென்டினா)
இழிவான போர் அல்லது கீழ்த்தரமான போர் (எசுப்பானியம்: Guerra Sucia, ஆங்கில மொழி: 'Dirty War') என்பது அர்ஜென்டினா நாட்டில் 1975 லிருந்து 1983 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற அரசு நடத்திய வன்முறை நிகழ்வுகளைக் குறிக்கிறது. புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி தம் நாட்டை சேர்ந்த மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மார்க்சியவாதிகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் மீது அர்ஜென்டின இராணுவ அரசு அறிவித்ததே இப்போராகும்.
பெயர்காரணம்[தொகு]
ஆங்கிலத்தில் டர்ட்டி வார் (Dirty War) என அழைக்கப்படும் இந்தப் போருக்கு அவ்வாறு பெயரிட்டதே அர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியாளர்கள் தான். போர்க் காலத்தில் பெரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு கையாண்ட கொடூரமான சித்ரவதை மற்றும் கீழ்த்தரமான பிற வழிமுறைகளைக் குறிக்கும் விதமாக இவ்வாறாகப் பெயர் வழங்கப்பட்டது.
விளைவுகள்[தொகு]
போரின் முடிவில் இறந்தவர்கள் மற்றும் காணமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்து இறுதியான தகவல்கள் இல்லை. இப்போரால் இன்னலுற்றவர்கள் 7,000 திலிருந்து 30,000 பேர்வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.[1][2]
வெளி இணைப்புகள்[தொகு]
- ↑ "Videla admitió la muerte y desaparición de "7 u 8 mil personas"". http://www.lanacion.com.ar/1464650-videla-admitio-que-la-dictadura-mato-a-7-u-8-mil-personas.
- ↑ "Fernández Meijide calificó de “mentira” la cifra de 30 mil desaparecidos". http://archivo.losandes.com.ar/notas/2009/8/3/un-438521.asp.