உள்ளடக்கத்துக்குச் செல்

இழான் பவுல் வீரப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழான்-பால் வீரபிள்ளை

இழான் பவுல் வீரபிள்ளை (Jean-Paul Virapoullé, பிறப்பு:மார்ச் 15, 1944) இரீயூனியன் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதி.[1] இவர் பிரான்சின் மேலவை உறுப்பினராக, இரீயூனியனின் பிரதிநிதி ஆனார்.[1] இவரது சகோதரர் லூயிஸ் வீரபிள்ளையும் அரசியல்வாதியாகிப், பின்னர் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிரான்சில் வாழும் இந்தியத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர். இவருக்கு இந்திய அரசின் பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்பட்டது.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1983 ல் ரீயூனியன் பிராந்தியப் பேரவை நிலைநாட்டப்பட்டதில் இருந்து உறுப்பினராக உள்ளார், இவர் 1986 இலிருந்து 1997 வரை லா ரியூனியன் ஐந்தாவது மாவட்டத்தில் ஒரு உறுப்பினராக இருந்தார். இவர் 1972 முதல் 2008 வரை செயிண்ட் ஆண்ட்ரூவின் நகரமுதல்வராக இருந்தார்.[1]

உள்ளூரில் தனது சொந்த அரசியல் இயக்கத்தின் தலைவராகி, 2001 ஆம் ஆண்டில் யு.டி. ரீயூனியன் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப், பின்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார்.

மார்ச் 16, 2008 இல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், இரண்டாவது சுற்றில் எரிக் புருட்டு என்ற வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்: தனது "ஒருமைப்பாட்டு பட்டியலில்" 41.7% வாக்கு மட்டுமே கொண்டுள்ளார். இவர் மகன் இழான் மாரி வீரபிள்ளை பொது அறிவுரையாளர் பதவியிலிருந்து அதே நாளில் விலகினார்.

இவர் தலைமையில் நடைபெற்ற இரண்டு பெரும் தேர்தல்களில், முக்கிய பிராந்தியத் தேர்தலில், அவரது எதிர்க்கட்சியினருக்கு எதிராக வெற்றி பெற்றதும் பிரபலமானவை.

பிரான்சு மேலவையில், இவர் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம், உலகளாவிய வாக்குரிமை பற்றிய விதிகள், பொது நிர்வாகம், ஊடக ஆய்வுகள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கான குழுக்களிலும், செனட் செயலாளர் துணைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Hindustan Times". Archived from the original on 2014-08-13. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. சம்மன் விருதுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழான்_பவுல்_வீரப்பிள்ளை&oldid=3544611" இலிருந்து மீள்விக்கப்பட்டது