இளையதம்பி சிறிநாத்
தோற்றம்
இளையதம்பி சிறிநாத் | |
|---|---|
| மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 21,202 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | அக்டோபர் 21, 1977 வந்தாறுமூலை, மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
| வாழிடம் | திருகோணமலை |
| கல்வி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
| பணி | மருத்துவர் |
இளையதம்பி சிறிநாத் (Elayathamby Srinath, பிறப்பு: 21 அக்டோபர் 1977)[1] ஓர் இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3][4]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் 1977 இல் பிறந்த இளையதம்பி சிறிநாத், தனது தொடக்க கல்வியை வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும் பயின்று, அங்கிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி மருத்துவப் பட்டம் பெற்றார். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய இவர் பின்னர் மட்டக்களப்பின் பல மருத்துவமனைகளில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார்.
தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
|---|---|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | மட்டக்களப்பு மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 21,202 | தெரிவு[5] | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon. (Dr.) Elayathamby Srinath , M.P." Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். Retrieved 19 April 2025.
- ↑ "Batticaloa District preferential vote results". Ada Derana. 16 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "Batticaloa District preferential vote results". Sri Lanka Mirror. 15 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "Sri Lanka's NPP secures record 'super majority' in parliament". Tamil Guardian. 16 November 2024. Retrieved 16 November 2024.
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241121054933/https://economynext.com/list-of-candidates-and-preferential-votes-in-sri-lanka-2024-election-188007/.