இளவரசி நூரா பிந்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசி நூரா பிந்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1970
அமைவிடம், ,

இளவரசி நூரா பிந்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அமைந்துள்ள ஒரு பொது மகளிர் பல்கலைக்கழகம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.[1].

இப்பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளோடு பட்டயப்படிப்பையும் வழங்குகிறது. இது ரியாத் நகரத்திலும் அருகிலுள்ள பிற நகரங்களிலும் உள்ள 34 கல்லூரிகளைச் சேர்ந்த 60,000 க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கல்வியை வழங்கிவருகின்றது. இந்நிறுவனத்தில் கல்வியாளர்கள் நிர்வாக ஊழியர்கள் என 5,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. ரியாத் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 102 உறுப்பு கல்லூரிகளை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள் கல்லூரி மன்னர் அப்துல்லா இப்னு அப்துல் அஜீஸ் அல் சவுத் அவர்களால் புனரமைக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு இளவரசி நூரா பின்த் அப்துல் ரஹ்மான் அவர்களின் நினைவாக பல்கலைக்கழகமாக அறிவித்தார். நூரா என்பதற்கு அரபு மொழியில் ஒளி என்று பொருள்.

பாடபிரிவுகள்[தொகு]

மருத்துவம், அறிவியல், மானுடம், மொழியியல்,வணிகம் எனப் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றது.

நூலகம்[தொகு]

இப்பல்கலைகழகம் 20 இலட்சத்திற்கும் அதிகமான அரபு, ஆங்கில நூல்கள், கையெழுத்துப் படிகள், தரவுகள், விளக்கவுரைகளை கொண்டுள்ளதோடு பல்வேறு பத்திரிக்கைகளைச் சந்தாவழி பெற்று வருகின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.pnu.edu.sa/en/Pages/default.aspx கல்லூரி இணையதளம்