இளவந்தி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளவந்தி வடுகபாளையம் ஊராட்சி என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஆகும். இது பொங்கலூர் (தற்போது பல்லடம் சட்டமன்ற தொகுதி) சட்டமன்ற தொகுதிக்கும் திருப்பூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி தேர்தலில் மூலம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இந்த ஊராட்சி காமநாயக்கன் பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும்.

மக்கள் தொகை[தொகு]

2011ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்த ஊராட்சியில் 1,649 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 48% பேரும் பெண்கள் 52% பேரும் வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இந்த ஊராட்சியின் பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்தில் தான் பேருந்து இயக்கப்படுகின்றன. குறிப்பாக பல்லடம் , கேத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து வசதி உள்ளது

பகுதிகள்[தொகு]

  • பழைய இளவந்தி (மேற்கு)
  • புதிய இளவந்தி (கிழக்கு)
  • ஆதிதிராவிடர் காலணி

நிர்வாகம்[தொகு]

  • இந்த ஊராட்சியில் பெரும்பாலும் விவசாய குடும்பங்கள் உள்ளன.
  • பெரும்பாலும் விவசாயத்தை நம்பியும் கூலி தொழிலை நம்பியும் உள்ளனர்
  • இளவந்தி வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது.
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவந்தி_ஊராட்சி&oldid=3482255" இலிருந்து மீள்விக்கப்பட்டது