இளம் பிறை (1965 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இளம்பிறை (About this soundஒலிப்பு ) இலங்கை, கொழும்பிலிருந்து 1965ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் இலங்கை இசுலாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் பல இசுலாமிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் இது கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.

ஆசிரியர்[தொகு]

  • ரஹ்மான்.

பணிக்கூற்று[தொகு]

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்' என்ற திருக்குறளை முழக்கமாகக் கொண்டு வெளிவந்தது. இதன் 1969ஆம் ஆண்டு மீலாத் மலரில் ஈழத்து இஸ்லாமிய இதழ்களைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில், வாசகர் கருத்து போன்ற பல்சுவை அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்