இளம்புயல்
| இளம்புயல் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். துரை |
| தயாரிப்பு | கே. எஸ். துரை |
| கதை | கே. எஸ். துரை கண்மணி ராஜா முகமது (கூடுதல் உரையாடல்) |
| இசை | வசந்த் செல்லத்துரை |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
| படத்தொகுப்பு | சத்தீஷ் குருஸ்வா |
| கலையகம் | அலைகள் மூவிஸ் இன்டர்நேஷனல் |
| வெளியீடு | 1 மே 2009 |
| நாடு | டென்மார்க் இந்தியா |
| மொழி | தமிழ் |
இளம்புயல் (Ilampuyal) என்பது 2009 ஆம் ஆண்டு கே. எஸ். துரை இயக்கிய டேனிஷ்-இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் அவரது மகன் வசந்த் செல்லத்துரை, [1] பூர்ணிதா, கருணாஸ், சிறீமன், ரவிசங்கர், சிந்துராஜ் ஆகியோர் நடித்தனர். வசந்த் செல்லத்துரை இசையமைத்தார்.
இந்த படம் 2007 அக்டோபர் 20 அன்று டேனிஷ் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.[2] ஆனால் 2009 மே 1 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. செயற்கைக்கோள் உரிமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.[3]
நடிகர்கள்
[தொகு]- புயல் எழிலனாக வசந்த் செல்லத்துரை
- தென்றல் போசாக பூர்ணிதா
- நாராயண்னக கருணாஸ்
- சதீஸ் சங்கராக சிறீமன்
- விக்கினேஸ்வரனாக கே. எஸ். துரை
- ரவிசங்கர்
- பாண்டியன் கோபாலாக சிந்துராஜ்
- மொழியாக சுஜிபாலா
- இனியன் போசாக ரவி சுகதேவன்
- பத்திரிகையாளராக மார்டன் பெர்கோல்ட்
- அமைச்சராக டாமி கிரேப் ஆண்டர்சன்
- உல்துஸ் நிலா அமரன் (சிறப்புத் தோற்றம்)
தயாரிப்பு
[தொகு]டென்மார்க்கில் வசிக்கும் இலங்கைத் தமிழரான கே. எஸ். துரை இப்படத்தை இயக்கினார். இவர் பூக்கள் (2004) மற்றும் ஐரோப்பாவில் மேடை நிகழ்ச்சிகளை இயக்கியவர்.[3] அவரது மகன், கணினி பொறியாளரான வசந்த், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து, இசையமைத்து, கிராஃபிக் வேலைகளைச் செய்தார்.[1][4] இந்தப் படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது. இது இலங்கைத் தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. [3] இளம்புயல் 2007 ஆம் ஆண்டில் டென்மார்க் மற்றும் இந்தியாவின் சென்னையில் 85 நாட்களில் படமாக்கப்பட்டது.[5][2] கார்ல்-ஹென்னிங் பெடர்சன் அருங்காட்சியகம் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரின் வீடாகப் பயன்படுத்தப்பட்டது. [2] பத்திரிகையாளர் மோர்டன் பெர்கோல்ட் படத்தில் அவராகவே நடித்தார். [5] படத்திற்காக டென்மார்க்கின் தீவுகளில் ஒன்றில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. [4]
இசை
[தொகு]அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் வசந்த் செல்லத்துரை.
| பாடல்கள்[6] | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "ஒரு முத்தம் தர" | ரெஹ்னா | ||||||||
| 2. | "உன்னைத் தொடுவதிலே" | கார்த்திக், மாலதி | ||||||||
| 3. | "வா வா என் அன்பே" | சைந்தவி, அனந்த் | ||||||||
| 4. | "யாழிசை செந்தமிழே" | ஸ்ரீனிவாஸ், சோபியா சதீஷ் | ||||||||
| 5. | "போராட்டம் போராட்டம்" | மாணிக்க விநாயகம், ரோஷினி | ||||||||
| 6. | "செத்தவனின் கதையை" | ரோஷினி, அனந்த் | ||||||||
| 7. | "இதழகள் பவளம்" | ராமு | ||||||||
| 8. | "இளம் புயல் அரம்பா இசை" | ஸ்ப்ரபன் கிளிஃப், பிரின்சென், பெஸ்ரின் | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "På vej til Kollywood". TV Midtvest (in Danish). Archived from the original on 19 March 2012.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 DR
- ↑ 3.0 3.1 3.2 DIANA EBBA Ø.B. PEDERSEN (30 October 2008). "Bollywood rykker til Herning". KPN (in டேனிஷ்). Archived from the original on 7 October 2011.
- ↑ 4.0 4.1 Indiaglitz
- ↑ 5.0 5.1 Jakob Albrecht (24 November 2008). "HB-medlem i Bollywood-film". Journalisten (in Danish).
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ilam Puyal – All Songs – Download or Listen Free – JioSaavn". 29 February 2020.