இளந்தத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளந்தத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் இல்லை. என்றாலும் கோவூர்கிழார் என்னும் புலவர் இந்தப் புலவரைக் கொலைக்குற்றத்திலிருது காப்பாற்றியவராக புறநானூற்றுப் பாடலின் தொகுப்புக் குறிப்பு குறிப்பிடுகிறது.[1]

சோழர் தலைநகரம் உறையூரில் ஒர் முற்றுகைப்போர் நடைபெற்றது. சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குள் இருந்தான். நலங்கிள்ளி முற்றுகை இட்டிருந்தான்.[2]

தற்செயலாகப் புலவர் இளந்தத்தன் உறையூருக்குள் சென்றான். உள்ளே இருந்த அரசன் நெடுங்கிள்ளி இந்தப் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றன் எனக் கருதிக் கொல்லச்சென்றான். அப்போது அங்கிருந்த புலவர் கோவூர் கிழார் இளந்தத்தன் அரசனிடம் பரிசில் பெற வந்த புலவன் என வெளிப்படுத்தும் பாடல் ஒன்றைப் பாடிக் கொலையைத் தடுத்து இளந்தத்தனைக் காப்பாற்றினார்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 47
  2. புறநானூறு 45
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளந்தத்தன்&oldid=3179591" இருந்து மீள்விக்கப்பட்டது