உள்ளடக்கத்துக்குச் செல்

இளஞ்சிவப்பு ரிக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளஞ்சிவப்பு ரிக்சா (Pink rickshaw) (இளஞ்சிவப்பு ஆட்டோ என்றும் அழைக்கப்படுகிறது.[1] [2] ) இந்தியாவின் சில நகரங்களில் பெண் பயணிகளுக்கான சாதாரண ஆட்டோ ரிக்சாக்களுக்கு மாற்றான போக்குவரத்தாகும். ரிக்சாவில் பயணம் செய்யும் போது பெண்கள் துன்புறுத்தப்படுவதையும், தவறாக நடத்தப்படுவதையும் தடுக்க இந்த முயற்சி இந்திய அரசால் எடுக்கப்பட்டது. பீதி அலாரம், புவிநிலை காட்டி கண்காணிப்பு அமைப்புகள் போன்ற சிறப்பு அம்சங்கள் பெண்களின் பாதுகாப்புக்காக நிறுவப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு ரிக்சாக்கள் முழு இளஞ்சிவப்பு ரிக்சாக்களாகவோ அல்லது அவற்றின் கூரை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பாலியல் வன்கொடுமைகளுக்கும், பாலியல் வன்கலவிகளுக்கும் எதிராக பெண்களை பாதுகாப்பதற்காக இளஞ்சிவப்பு ரிக்சாக்கள் 2013ஆம் ஆண்டு ராஞ்சியில் தொடங்கப்பட்டது. இறுதியில் இது இந்தியாவின் பல நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டோ ரிக்சாக்கள் சட்டப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணங்கள் முடிந்தபின், பயிற்சி பெற்ற வல்லுனர்களால், ஆண்கள் அல்லது பெண்களால் இயக்கப்படுகின்றன.[3] [4] [5]

பெண்களுக்கு அதிகாரமளித்தல்

[தொகு]

இளஞ்சிவப்பு ரிக்சா திட்டம் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக ராஞ்சி அரசால் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குவதன் மூலம், ராஞ்சி அரசு பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்கள் வேலை செய்யவும் தன்னிறைவு பெறவும் உதவுகிறது. பாரம்பரியமாக இந்தியாவில் ஆண்கள் சம்பளம் பெறுபவர்கள். பாதுகாப்பான போக்குவரத்து பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் குடும்ப வருமானத்திற்கு பங்களிக்க உதவுகிறது.[6]

புவிநிலை காட்டி மூலம் செயல்பாடு

[தொகு]

இளஞ்சிவப்பு ரிக்சா திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகரம் ராஞ்சி ஆகும். 2012 டெல்லி பாலியல் வல்லுறவுக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்புக்காக இது 2013 இல் தொடங்கப்பட்டது. தலைநகர் ராஞ்சியில் சுமார் 200 இளஞ்சிவப்பு கூரையுடன் கூடியஆட்டோ ரிக்சாக்களை சார்க்கண்ட் காவல்துறையினர் அறிமுகப்படுத்தினர். இந்த ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பீதி அலாரம், புவிநிலை காட்டி அமைப்பு போன்ற சிறப்பு அம்சங்கள் இருந்தன. இந்த ரிக்சாக்களுக்கு பெண் ஓட்டுநர்களை நியமிக்க காவல் துறையினர் முயன்றனர். ஆனால் பெண்களின் குறைவான ஆர்வம் காரணமாக அவர்கள் ஆண் ஓட்டுநர்களை நியமித்தனர். அனைத்து ஆண் ஓட்டுநர்களும் அரசாங்க அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான நடைமுறைகள் மூலம் சரிபார்க்கப்பட்டனர். அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பெண்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆனால் இந்த சேவை இனி பெண் பயணிகளுக்கு மட்டும் கிடைக்காது. ஏனெனில் ஓட்டுநர்கள் பெண் பயணிகளை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், இதன் காரணமாக ஓட்டுனர்கள் குறைந்த பயணத்தில் அதிக பயணங்களை மேற்கொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களில் ஆண் பயணிகளையும் ஏற்றி செல்ல ஆரம்பித்தனர்.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் சட்டப்பூர்வ அனுமதியின்றி நகரத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்களையும் அகற்றுமாறு பிராந்திய போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ராஞ்சியில் உள்ள மொத்த 12,000 ஆட்டோ ரிக்சாக்களில் 2,335 ஆட்டோக்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அனுமதி இருந்தது. அந்த 2,335 ஆட்டோக்களில், எந்த இளஞ்சிவப்பு ரிக்சாவும் செயல்பட சட்டப்பூர்வ அனுமதி இல்லை. வர்த்தக அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், இளஞ்சிவப்பு ரிக்சா ஓட்டுநர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வாழ்நாள் சட்டப்பூர்வ அனுமதிகளை வழங்கக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.[3][6][7]

சூரத்து

[தொகு]

சூரத்து மாநகராட்சி 2 சூலை 2017 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. பெண்களால் பெண்களுக்கான சேவை என்பதால் மாநகராட்சி பெண்களை ஆட்டோ ரிக்சா ஓட்டுவதற்கு தேர்வு செய்து பயிற்சி அளித்தது. நகராட்சி இந்த பெண்களுக்கு ரிக்ஷா வாங்க மத்திய அரசின் 25% மானியத்துடன் 7% வட்டி விகிதத்தில் கடன் பெற உதவியது. நகராட்சி கழகம் 70 பெண்களை அடையாளம் கண்டது, அதில் 15 பேர் பயிற்சி பெற்றனர், மற்றவர்கள் பயிற்சியில் இருந்தனர். அவர்கள் பகலில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக பெண்கள் பள்ளி பகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளனர். [8] [9] [10] [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What happened to the pink auto? - Times of India". The Times of India. Retrieved 2019-03-12.
  2. "'Pink autos' launched in Gurgaon". News18. Retrieved 2019-03-12.
  3. 3.0 3.1 "Pink autos in Ranchi no longer 'women only' - Times of India". TimesofIndia.IndiaTimes.com. Retrieved 2019-03-12.
  4. "Pink Autos: Women Driven Auto Rickshaw Services In India". Naaree - Work From Home Career Advice, Indian Women's Magazine. 2016-12-13. Retrieved 2019-03-12.
  5. "Pink Auto Rickshaw Project". Odisha Police Department (Odisha Police). 27 June 2015. https://www.odishapolice.gov.in/sites/default/files/PDF/27.06.2015%20Pink%20Auto%20Rickshaw%20Project.pdf. 
  6. 6.0 6.1 "City to get pink autos with women on wheels". www.millenniumpost.in. Retrieved 2019-07-09.
  7. "Driven out: Ranchi's auto service by and for women is dying". HindustanTimes.com. 2015-04-09. Retrieved 2019-03-12.
  8. "Launch of Pink Auto Rickshaws programme in Surat". DeshGujarat. 2017-07-02. Retrieved 2019-03-12.
  9. "New auto service in Surat: By the women, for the women - Times of India". TimesofIndia.IndiaTimes.com. Retrieved 2019-03-12.
  10. "Pink Auto Service arrives in Surat". www.cityshor.com. Retrieved 2019-03-12.
  11. "In Surat now: A pink auto service by women, for women". IndianExpress.com. 2017-07-03. Retrieved 2019-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளஞ்சிவப்பு_ரிக்சா&oldid=3276326" இலிருந்து மீள்விக்கப்பட்டது