உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கோவன் (திரைக்கதை எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளங்கோவன் (1913[1] - 20 செப்டம்பர் 1971)[2] என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுகதை ஆசிரியர், பத்திரிக்கையாளர், திரைப்பட திரைக்கதை, உரையாடல் ஆசிரியர், தயாரிப்பாளராவார்.

தொடக்ககால வாழ்க்கை

[தொகு]

டி. கே. தணிகாசலம் என்ற இயற்பெயரைக் கொண்ட இளங்கோவன் காஞ்சிபுரத்தில் 1913-இல் ஒரு தமிழாசிரியரின் மகனாகப் பிறந்தார்.[1] இவர் தன் தந்தையிடமே தமிழ் பயின்றார். ஆங்கிலத்தில் இண்டர் மீடியட் வகுப்பில் தேறினார். சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கதை எழுதுவதில் உள்ள ஆர்வத்தினால் சட்டப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்.[1] தணிகாசலம் தமிழ் செவ்விலக்கியம், ஆங்கில செவ்விலக்கியங்களைப் படித்த இவர், உருசிய செவ்விலக்கியங்களை மொழிபெயர்ப்பு வழியாக ஆழ்ந்த வாசிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

பத்திரிகைத் தொழில்

[தொகு]

எழுத்தின் மீதான ஆர்வம் கொண்ட தணிகாச்சலம் மணிக்கொடி இதழில் துணை ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். அதன்பிறகு தமிழ்நாடு இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் புதியதாகத் துவக்கப்பட்ட தினமணியில் துணையாசிரியர்களாக புதுமைப்பித்தனுடன் பணியாற்றினார்.[3] மணிக்கொடியில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.

திரைப்பட உலகில்

[தொகு]

1937இல் தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்திற்கு முதன் முதலாக உரையாடல் எழுதினார். அவரது இலக்கிய நயமிக்க உரையாடல் மிகப்புகழ் வாய்ந்ததாக மாறியது. குறிப்பாக 1942-இல் அவர் கண்ணகி திரைப்படத்தில் கண்ணகி பாண்டியனின் அரசவையில் வழக்குரைக்கும் காட்சிக்கு அவர் எழுதிய வசனங்கள் சிகரத்தைத் தொட்டதாகப் பாராட்டுகளைப் பெற்றார். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோர் திரைப்படங்களுக்கு உரையாடல் எழுத வந்தபிறகு, இளங்கோவனின் திரைப்பட வாழ்வு சரிவிற்கு உள்ளானது. இவர் தன் இறுதிக் காலத்தின் பொருளாதார ரீதியாக நலிவுற்றார்.[4] இவர் சுமார் 30 படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார். 1961-இல் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை அளித்தது.

உரையாடல் எழுதிய படங்கள்

[தொகு]

திரைக்கதை, உரையாடல் எழுதியவை

[தொகு]

கதை உரையாடல்

[தொகு]

தயாரித்த திரைப்படம்

[தொகு]
  • மானம் காத்த மனைவி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 வசனத்துக்கு அரியாசனம்!, கட்டுரை, ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை, 15 ஆகத்து 2025
  2. பேசும் படம், அக்டோபர் 1971, பக். 7
  3. முத்துலிங்கம் (28 ஆகத்து 2017). "வசனமா வசன கவிதையா". கட்டுரை. தினமணி. Retrieved 13 ஆகத்து 2018.
  4. "இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார்". கட்டுரை. மாலை மலர். 15 சூன் 2016. Retrieved 13 ஆகத்து 2018.
  5. வசனகர்த்தாக்களின் பிதா மகர் இளக்கோவன், கட்டுரை, புதுகை கனகராஜ், தினமணி, 24 சூலை 2011

வெளி இணைப்புகள்

[தொகு]

இளங்கோவன் பற்றி, இது தமிழ். இணைய தளத்தில் கிருஷ்ணன் வெங்கடாசலம்