இளங்கலை நடனம்
Appearance
இளங்கலை நடனம் (Bachelor of Dance) பெரும்பாலும் B.Dance, BFA (நடனம்), BCA (நடனம்), BDanceEd, BDancePerf, BA (நடனம்) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது, இது கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது இசைப் பள்ளி அல்லது இசைக் கல்லூரியில் நடனம் பட்டப்பைப்பினை முடித்தவுடன் வழங்கப்படும் இளங்கலைக் கல்விப் பட்டமாகும். [1]
நடனத்தில் தொழில்முறை வாழ்க்கையைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்கள், BA அல்லது BFA நடனத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். [2]
விண்ணப்பத்திற்கான தேவைகள்
[தொகு]விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதைத் தவிர, நடனக் கலைஞர்கள் தங்களின் நடன அனுபவத்திற்கான ஆதாரத்தையும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நேரில் கலைக்காணலையும் வழங்க வேண்டியிருக்கலாம். [3]
ஆத்திரேலியாவில், பின்வரும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பெயர்களில் இளங்கலை நடனம் வழங்கப்படுகிறது: [4]
- நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் இளங்கலை (நடனப் படிப்பு); இளங்கலை (நடனம்)/இளங்கலை கல்வி.
- மக்குவாரி பல்கலைக்கழகம் - இளங்கலை (நடனத்தில் முதன்மையானது).
- குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - இளங்கலை நுண்கலை (நடன செயல்திறன்).
- மெல்பேர்ண் பல்கலைக்கழகம் ( விக்டோரியன் கலைக் கல்லூரி மூலம்) - இளங்கலை நுண்கலை (நடனம்); நிறைஞர் நுண்கலை (நடனம்); நிறைஞர் நடன அமைப்பு.
- டீக்கின் பல்கலைக்கழகம் - இளங்கலை (நடனம்), இளம் அறிவியல், இளங்கலை கல்வியியல் (இரண்டாம் நிலை) அல்லது இளங்கலைச் சட்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம்.
- எடித் கோவன் பல்கலைக்கழகம் ( மேற்கு ஆத்திரேலிய அகாடமி நிகழ்த்துக்கலை மூலம்) - இளங்கலை (நடனம்); அட்வான்ஸ்டு டிப்ளமோ ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் (நடனம்).
சான்றுகள்
[தொகு]- ↑ "Highest ranking Unis for Dance degree United-Kingdom". www.whatuni.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ "To BFA or BA... That is the Question". Dance Informa Magazine. 2012-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
- ↑ Teare, Chris (June 22, 2018). "College Advice: Theater And Dance Applications". Forbes. Archived from the original on 2018-06-22. பார்க்கப்பட்ட நாள் September 10, 2019.
- ↑ "33 Theatre & Dance Bachelor's degrees in Australia - BachelorsPortal.com". www.bachelorsportal.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.